Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு ... பேச்சியம்மன் கோயிலில் ஐஸ்வர்ய லட்சுமி அலங்காரம் பேச்சியம்மன் கோயிலில் ஐஸ்வர்ய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் 30ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் 30ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

19 செப்
2019
11:09

திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வருகின்ற 30ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருமலையில் வருடம் முழுவதும் திருவிழாதான் என்றாலும் வருடத்தி்ற்கு ஒருமுறை நடைபெறும் பிரம்மோற்சவ விழா பெருவிழாவாகும். இதற்கு முக்கிய காரணம் மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மனே விழாவினை நேரில் வந்து நடத்துவதாக உள்ள ஐதீகம்தான். வானவில் தனது வடிவம் முழுவதையும் காட்ட வந்ததோ அல்லது வர்ணஜாலங்கள் கோலமிட்டு நின்றதோ என வியக்கவைக்குமளவிற்கு எங்கும் பொங்கும் அலங்காரத்தால் திருமலை பூலோக வைகுண்டம் போல ஜொலிக்கும்.

விலை உயர்ந்த நகைகள் அணிந்து விதவிதமான வாகனங்களில் உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் மாடவீதிகளில் உலாவருவது கண்கொள்ளாக்காட்சியாகும். சுவாமியை தரிசிக்கவும் சுவாமிக்கு முன் பாட்டுப்பாடி நடனமாடிச் செல்லும் பல்வேறு மாநில கலாச்சார மக்களின் நடனங்களை பார்வையிடவும் உலகமெங்கும் இருந்து பக்தர்கள் திரள்வர். அதிலும் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான்று கருட சேவையின் போது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவர். கருட சேவையில் வரும் பெருமாளுக்கும், மோகினி அவதாரத்தில் தந்த பல்லக்கில் எழுந்தருளும் பெருமானுக்கும் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை சூடித்தான் வலம்வருவார்கள், ஆண்டாளின் மாலையை கொண்டுவந்து சாத்தும் வைபவமே தனி.
 
பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிரல்:
30 09 2019: மாலை கொடியேற்றம் இரவு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி உலா
01 10 2019: காலை சின்ன சேஷ வாகனம் இரவு ஹம்ச வாகனம்
02 10 2019: காலை சிம்ம வாகனம்  இரவு முத்துபல்லக்கு வாகனம்
03 10 2019: காலை கற்பகவிருட்ச வாகனம் இரவு சர்வபூபாள வாகனம்
04 10 2019: காலை மோகினி அவதாரம் இரவு கருட வாகனம்
05 10 2019: காலை அனுமன் வாகனம்  மாலை தங்கரதம் இரவு யானை வாகனம்
06 10 2019: காலை சூரியபிரபை வாகனம் இரவு சந்திர பிரபை வாகனம்
07 10 2019: காலை தேரோட்டம் இரவு குதிரை வாகனம்
08 10 2019: காலை சக்ரஸ்நானம் மாலை கொடிஇறக்கம் நிகழ்ச்சி நிறைவு

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயில் ஸ்ரீராமநவமி ஆஸ்தான விழாவில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீராம நவமியை ... மேலும்
 
temple news
அயோத்தி; தெய்வீக மற்றும் அற்புதமான ராமர் கோவிலில் ராம் லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு இது முதல் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் சாமியார்புதூர் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோயிலில் ராம நவமி விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar