சத்தியமங்கலம் தாளவாடியில் ரங்கசாமி கோவில் தெப்பம் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2019 03:10
சத்தியமங்கலம்: தாளவாடி அடுத்த, திகினாரை கிராமத்தில் உள்ள ரங்கசாமி கோவிலில் தெப்பம் திருவிழா, நேற்று 9ம் தேதி கோலாகலமாக நடந்தது. தாளவாடி அடுத்த திகினாரை கிராமத்தில், பிரசித்தி பெற்ற ரங்கநாதசுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில், கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தசரா விழாவின் இறுதி நாளில், தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல், நேற்று 9ம் தேதி ரங்கநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தேரில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின், தெப்பத்தில் ரங்கநாதர் அமர வைக்கப்பட்டு பூஜை செய்த பின், கோவில் அருகே உள்ள குளத்தில் தெப்பம் விடப்பட்டது. தாளவாடி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.