திருப்பதி போல காசியிலும் லட்டு விசேஷம். இங்குள்ள அன்னபூரணி கோயிலில் அம்மன் சிலை சொக்கத் தங்கத்தால் ஆனது. மற்ற நாளில் கதவின் துவாரம் வழியாகவும், தீபாவளி அன்று முழுமையாகவும் தரிசிக்கலாம். தீபாவளி, அதன் மறுநாள் சன்னதி முழுவதும் இனிப்பு வகைகளால் நிரப்பி பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். தீபாவளியன்று அன்னபூரணி லட்டுத்தேரில் உலா வருவாள்.