Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சியில் தியாகராஜர் கோவில் பஞ்சமுகலிங்கேஸ்வரர் சுவாமிகளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
10ம் நூற்றாண்டு சோழர் கால தமிழ் செக்கு கல்வெட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 நவ
2019
03:11

ஆத்தூர்: மலைக்கிராமத்தில், 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த, சோழர் கால தமிழ் எழுத்து, செக்கு கல்வெட்டை, குன்னூர் அரசு உறைவிட பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கல்வராயன்மலை, குன்னூர் அரசு பழங்குடியினர் உறைவிட நடுநிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவர்கள், விஜி, சந்தியா, இளையராஜா, விஜய், ரேவந்த், சிவராஜ் ஆகியோர், கடந்த, 4ல், கல்லூர் மலைக்கிராமத்தில் களப்பயணம் மேற்கொண்டனர். அப்பகுதியில், செக்கு கல்வெட்டை கண்டறிந்து, தமிழ் ஆசிரியர் பெருமாளிடம் தெரிவித்தனர். அவர், மாணவர்கள், கல்வெட்டிலிருந்த மூன்று வரி தமிழ் எழுத்துகளை, படி எடுத்தபோது, 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த, சோழர் கால செக்கு கல்வெட்டு என தெரியவந்தது.

இதுகுறித்து, ஆய்வு செய்த, சென்னையைச் சேர்ந்த, மூத்த தொல்லியல் ஆய்வாளர் ராஜகோபால் கூறியதாவது: எண்ணெய் ஆட்ட, கல்லால் வடிவமைத்த செக்குகள், கோவிலுக்கு, கொடையாக வழங்கப்பட்டன. எண்ணெய் பிழிந்தெடுக்கும் தொழில், அரசுக்கு, முக்கிய வருவாயாக இருந்தது. இதனால், உடன் பிறந்தவர், உறவினர்கள் நலம் பெற வேண்டி, கோவிலுக்கு செக்கு செய்து கொடுப்பர். அதில், தானமாக வழங்கும் நபர் விபரம், கல்வெட்டாக வைக்கப்படும். அதன்படி, 10ம் நூற்றாண்டில், சோழர் காலத்துடைய இந்த கல்வெட்டில், பவித்ர மாணிக்கம் எனும் பெண், தலசோமர் கட்டிய கோவிலுக்கு கொடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில், கல் செக்குகள், எட்டாம் நூற்றாண்டு முதல், கல்வெட்டுகளுடன் கிடைக்கின்றன. கல்வராயன்மலையில், சின்னமாங்கோட்டில், 11ம் நூற்றாண்டு, ராஜேந்திர சோழன் கால கல்வெட்டு; வாழப்பாடி, புழுதிக்குட்டையில், செக்கு கல்வெட்டு முன் கண்டறியப்பட்டுள்ளது. இதில், விளக்கமாறன் என்பவரது மகன், நலம் பெற வேண்டி, கோவிலுக்கு செக்கு கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar