ராமானுஜர் ஜெயந்தி: வீரராகவப்பெருமாள் கோவிலில் திருவிளக்கு வழிபாடு | 1000th year celebrations of holy Sri Ramanuja Acharya | ராமானுஜரின் 1000வது நட்சத்திர வைபவம்

ராமானுஜர் ஜெயந்தி: வீரராகவப்பெருமாள் கோவிலில் திருவிளக்கு வழிபாடு

ஏப்ரல் 29,2017



திருப்பூர்: திருப்பூர், திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில், ஸ்ரீ மத் ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று காலை, 7:00க்கு, ராமானுஜருக்கு பாலாபிஷேகம், திருமஞ்சனம், மங்கள ஆரத்தி, நூற்றந்தாதி பாராயணம் நடந்து வருகிறது. மாலையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற, திருவிளக்கு பூஜை நடந்தது. அதன்பின், சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீ ராமா னுஜர் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், இன்று, காலை, 7:00க்கு, ராமானுஜருக்கு பாலாபிஷேகம், திருமஞ்சனம், மங்கள ஆரத்தி, நூற்றந்தாதி பாராயணம் நடக்கிறது. மாலை, 5:00க்கு, "புரட்சி துறவி என்ற தலைப்பில், நாகை முகுந்தன் சொற்பொழிவு, உபதேச ரத்தின மாலை, சாத்துமுறை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கு தாய்வீட்டு சீதனம்!

மேலும்