முரட்டு பக்தி! | 1000th year celebrations of holy Sri Ramanuja Acharya | ராமானுஜரின் 1000வது நட்சத்திர வைபவம்

முரட்டு பக்தி!

மே 03,2017



ராமானுஜரின் இளைய தாயார் தீப்திபதியின் மகன் கோவிந்தன். இவருடைய செயல்கள் யாவும் வெளிப்பார்வைக்கு வித்தியாசமானதாகத் தோன்றும். ஆனால், அவை பக்தியின் உத்தம இலக்கணங்கள்!

ஒருமுறை கோவிந்தன், தனது இடது கையில் பாம்பு ஒன்றைப் பிடித்துக் கொண்டு வலது கையினால் அதன் வாயினுள் தோண்டித் துருவிக் கொண்டிருப்பதை ராமானுஜர் கண்டார். வலியினாலும், வேதனையினாலும் அந்தப் பாம்பு துடிதுடித்தது. கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட அந்தப் பாம்பு, கோவிந்தனின் கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஓடியது. கோவிந்தா, அதிர்ஷ்டம் உன் பக்கம் இருந்ததால் நீ தப்பித்தாய், அந்தப் பரிதாபமான ஜீவனை மிகுந்த துன்பத்துக்கு ஆளாக்கி விட்டாய் என்று கடிந்து கொண்டார் ராமானுஜர்.

அண்ணா, அந்தப் பாம்பு எதையோ விழுங்கிய போது அதன் அடித்தொண்டையில் ஒரு முள் மாட்டிக் கொண்டு துடிதுடிக்கக் கண்டேன். அதன் வேதனையைக் கண்டுதான் இவ்வாறு செய்தேன் என்றார் கோவிந்தன். ஸ்ரீராமானுஜர் பெரிய திருமலை நம்பியின் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, குருவுக்குப் படுக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டார் கோவிந்தன். குருவின் படுக்கையில் கோவிந்தன் படுத்து எழுவதை ராமானுஜர் கண்டு கோபம் கொண்டு, என்ன ஒரு அபச்சார காரியம் செய்துவிட்டாய் கோவிந்தா? குருவின் படுக்கையில் படுத்து எழுந்தால் நரகம் நிச்சயம் என்பது தெரியாதா? என்று கடிந்து கொண்டார். குருவின் படுக்கை அவருக்கு சுகமாக உள்ளதா என்பதை சோதிக்கவே இப்படிப் படுத்து எழுந்தேன் அண்ணா. இச்செயல் அவரது சுகத்தை நிச்சயப்படுத்துமானால், அதற்காக நான் நரகத்தில் நித்திய வாசம் செய்யவும் தயார் என்றார் கோவிந்தன்! தனது சகோதரன் கோவிந்தனின் எளிமையையும், பணிவையும் உணர்ந்த ராமானுஜர், அவனைத் தவறாக எடை போட்டதற்கு வருந்தினர்.

ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கு தாய்வீட்டு சீதனம்!

மேலும்