சித்திரைக்கும் சீர்மை கொடுத்த ராமானுஜா | 1000th year celebrations of holy Sri Ramanuja Acharya | ராமானுஜரின் 1000வது நட்சத்திர வைபவம்

சித்திரைக்கும் சீர்மை கொடுத்த ராமானுஜா

மே 03,2017சித்திரைக்கும் சீர்மை கொடுத்த ராமானுஜா !
திருவாதிரைக்கும் திருவான ராமானுஜா !
ஸ்ரீபெரும்புதூருக்கு ஸ்ரீயைத் தந்த ராமானுஜா !
காந்திமதியின் கருவறையில் வந்துதித்த ராமானுஜா !

கேசவ சோமயாஜியின் தவப்பயனே ராமானுஜா !
பெருந்தேவியின் தாகத்தையும் தீர்த்த ராமானுஜா !
வரதனையும் வழித்துணையாக்கிய ராமானுஜா !
திருக்கச்சி நம்பியைப் பெருமைபடுத்திய ராமானுஜா !

ஆளவந்தாரின் 3 விரல்களையும் நிமிர்த்தின ராமானுஜா !
பெரிய நம்பிகளின் திருவடி நிழலில் ஒதுங்கின ராமானுஜா !
திருக்கோஷ்டியூர் நம்பியின் சோதனையில் ஜெயித்த ராமானுஜா !
திருமாலையாண்டானுக்கும் திருவாய்மொழியின் ரகசியத்தை சொன்ன ராமானுஜா !

திருவரங்க பெருமாள் அரையருக்கு மஞ்சள் காப்பிட்ட ராமானுஜா !
பெரிய திருமலை நம்பிகளிடம் ராமாயணம் கேட்ட ராமானுஜா !
திருமலையானுக்கும் திருத்தமாய் மாலை தர அனந்தாழ்வானைத் தந்த ராமானுஜா !
ரங்கனும் " பரமபதத்துக்கும், பூலோகத்துக்கும் உடையவன்(ர்) நீ " என்ற ராமானுஜா !

அடியோங்களையும் ஆட்கொள்ள வந்த காரேய் கருணை ராமானுஜா !
நீர் எமக்கு முன் பிறந்ததால் நாங்களும் உய்தோம் !
உய்ய ஒரே வழி என்றும் உடையவர் திருவடி.

ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கு தாய்வீட்டு சீதனம்!

மேலும்

ராமானுஜர் அஷ்டோத்திர சத நாமாவளி

மேலும்

அருள்மிகு நம்பி நாராயணர் கோயில்

மேலும்