ஜீவன் என்பது உள்ளவரை...


ஜீவன் என்பது உள்ளவரை...


ஜீவன் என்பது உள்ளவரை...என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை...
ஹரிஹரன் புகழை பாடும்வரை... வாழ்வினில் தோன்றும் சாந்த நிலை... (ஜீவன்...)

கார்த்திகை தோறும் மாலையணிந்து...நாற்பது நாளும் நோன்புமிருந்து...
நாவில் ஐயன் நாமம் பொழிந்து...நடந்தே சென்று கோவில் அடைந்து...
இருமுடி சேர்த்தேன் அவனிடத்தில்...ஒளி மழை தந்தான் என்னிடத்தில்...(ஜீவன்...)

நெய்விளக்காலே அலங்காரம்...கண்டு நெஞ்சில் மறையும் அகங்காரம்...
சரணம் என்னும் ஓங்காரம்...ஓங்காரஸ்வரூபனே...
சரணம் ஐயப்போ...

சரணம் என்னும் ஓங்காரம்...சர்வமும் அதிலே ரீங்காரம்...
ஆசையில் மோதும் அலையாவும்... ஜோதியை கண்டால் தெளிவாகும்... மகர ஜோதியை கண்டால் தெளிவாகும்...(ஜீவன்...)

பம்பை கரையில் அவதரித்தான்... பந்தள நாட்டில் பணி முடித்தான்....
மகிஷியை வென்றே வாழ்வளித்தான்...மழலை வடிவில் அருள்கொடுத்தான்...
அன்னை நோய்க்கும் மருந்தளித்தான்...அகிலமும் வாழவும் துணையிருப்பான்... (ஜீவன்...)