சபரிமலை வரும் பெண்கள் அதிகரிப்பு: பம்பையில் தங்க வைப்பு

டிசம்பர் 13,2017



சபரிமலை: சபரிமலைக்கு கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகளவில் வந்த 10 முதல் 50 வயதுடைய வந்த பெண்களை பம்பையில் போலீசார் தடுத்து வைத்து வருகின்றனர். போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து, தங்களுடன் வந்தவர்களுடன் சன்னிதானம் செல்லவேண்டும் என்று கையை தட்டிவிட்டு ஓடும் பெண்களை பம்பையில் போலீசார் விரட்டி பிடிக்கின்றனர்.

10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை சன்னிதானம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதை எதிர்த்து உழைக்கும் பெண்கள் அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. இதற்கிடையில் சமூக வலை தளங்களில் சபரிமலையில் பெண்கள் செல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதித்துள்ளதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதை தேவசம்போர்டு மறுத்து வருகிறது.

கண்காணிப்பு: என்றாலும் இந்த சீசனில் அதிகமான பெண்கள் வருவதாக பம்பையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் போலீசார் தெரிவித்தனர். இப்படி வரும் பெண்களை கண்காணிக்க பம்பை கணபதி கோயிலின் கீழ் பகுதியில் தேவசம்போர்டு பெண் ஊழியர்கள் மற்றும் பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சீசனில் இதுவரை ஆயிரம் பெண்கள் வரை வந்துள்ளதாகவும், அதில் பெரும்பகுதியினர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தங்கவைப்பு: இப்படி வரும் பெண்கள் தங்கள் குழுவினருடன் செல்ல வேண்டும் என்று பிடிவாதம் செய்வது இங்கு வாடிக்கையான சம்பவம். சிலர் போலீசாரின் கையை தட்டி விட்டு சன்னிதானம் பார்த்து ஓடுகின்றனர். இவர்களை பெண் போலீசார் விரட்டி பிடிக்கின்றனர். இவ்வாறு தடுக்கப்படும் பெண்கள் தேவசம்போர்டு பெண் ஊழியர்கள் பாதுகாப்பில் பம்பையில் தங்கவும், உணவு வழங்கவும் தேவசம்போர்டு ஏற்பாடு செய்துள்ளது.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்