தங்க அங்கி அணிவித்து தீபாராதனை : இன்று மண்டல பூஜை

டிசம்பர் 26,2017



சபரிமலை: சபரிமலையில் நேற்று தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. இன்று காலை 11:30-க்கு மண்டலபூஜை நடக்கிறது. மண்டல பூஜைக்காக கடந்த 22-ம் தேதி ஆரன்முளாவில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி நேற்று பகல் இரண்டு மணிக்கு பம்பை வந்தது. பம்பையில் பக்தர்கள் மற்றும் தேவசம்போர்டு வரவேற்புக்கு பின்னர் கணபதி கோயில் முன் புறம் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. மதியம் 3:30 மணிக்கு அங்கியை ஐயப்பாசேவா சங்கத்தினர் தலைச்சுமையாக எடுத்துவந்தனர். 6:00மணிக்கு சரங்குத்திக்கு வந்த அங்கிக்கு தேவசம்போர்டு சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

6:35 மணிக்கு 18-ம் படி வழியாக வந்த அங்கியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்னர், ஐயப்பனுக்கு அங்கி அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார், உறுப்பினர்கள் ராகவன், சங்கரதாஸ் பி.ஆர்.ஓ. முரளிதரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தீபாராதனைக்கு பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அங்கி அணிவிக்கப்பட்ட ஐயப்பனை வணங்கினர்.

இன்று மண்டல பூஜை : இன்று பகல் 11:30 மணிக்கு மண்டலபூஜை நடைபெறுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பூஜித்த பிரம்ம கலசத்தை மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி எடுத்து கோயிலை வலம் வருவார். ஐயப்பனுக்கு கலச அபிஷேகம் செய்த பின்னர் தங்க அங்கி அணிவித்து மண்டலபூஜை நடைபெறும்.மதியம் 1:30 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11:00 மணிக்கு அடைக்கப்படும். அதன் பின்னர் பக்தர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தப்படுவார்கள்.அதன் பின்னர் மகரவிளக்கு கால பூஜைக்காக வரும் 30-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும். அன்று வேறு பூஜைகள் கிடையாது. 31-ம் அதிகாலை மூன்று மணிக்கு நடை திறந்து நெய் அபிஷேகம் துவங்கும்.

நீங்க குருசாமியா....

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்