மகரவிளக்கு கால பூஜைகளுக்காக.. சபரிமலை நாளை மாலை நடை திறப்பு

டிசம்பர் 29,2017



சபரிமலை: மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை திறக்கிறது. ஜன.,20 வரை தொடர்ச்சி யாக பூஜைகள் நடைபெறும். மண்டலபூஜை முடிந்து கடந்த 26ம் தேதி இரவு அடைக்கப்பட்ட நடை, நாளை மாலை 5:00 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு எந்த விசேஷ பூஜைகளும் கிடையாது. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ௩௧ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனம், பல்வகை அபிேஷகங்களுக்கு பின்னர் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மகர விளக்கு கால நெய்யபிேஷகத்தை தொடங்கி வைப்பார். ஜன.,19 வரை எல்லா நாட்களிலும் அதிகாலை 3:00 முதல் மதியம் 1:30 வரையிலும், மாலை 3:30 முதல் இரவு 11:00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். 20ம் தேதி அதிகாலை 5:00 முதல் காலை 7:00 வரை நடை திறந்திருக்கும். என்றாலும் அன்று பந்தளம் மன்னர் பிரதிநிதிக்கு மட்டுமே தரிசனம் உண்டு.14ம் தேதி மகரஜோதி பெருவிழா நடைபெறும்.ஜன.,16 முதல் 19 வரை இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். 20ம் தேதி காலை 7:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்