சபரிமலை மகர விளக்கு விரத காலத்தில் அன்னதானம்

டிசம்பர் 29,2017



சபரிமலை: சபரிமலை மகர விளக்கு விரத காலங்களில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம், மருத்துவ வசதிக்கு ஏற்பாடு நடக்கிறது.

சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது: இந்தாண்டு மண்டல பூஜை காலத்தை முன்னிட்டு கடந்த நவ.,15 முதல் டிச.,26 வரை சபரிமலையில் மூன்று வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சபரிமலை யாத்திரையின் போது அப்பாச்சி மேட்டில் 295 முறையும், சன்னிதானத்தில் 270 முறையும் ஸ்டிரெச்சர் பயன்படுத்தப்பட்டது. மூச்சு திணறல் ஏற்பட்ட 5,233 பேருக்கு ஆக்சிஜனும், 36,699 பேருக்கு முதல் உதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. 696 கல்லுாரி மாணவர்கள், 770 ஐயப்ப சேவா சங்க தொண்டர்கள் சேவையில் ஈடுபட்டனர். மகர விளக்கு விரத பூஜை காலங்களில் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால் அன்னதானம், மூலிகை குடிநீர், மருத்துவ உதவிகள் வழங்கப்படும், என்றார்.  மத்திய, மாநில நிர்வாகிகள் ஐயப்பன், கிருஷ்ணமூர்த்தி, மதுரை நிர்வாகிகள் மணி, பாண்டியராஜன், ஆனந்த், தங்கராஜ், முகாம் அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்