சபரிமலை அன்னதான நிதிக்கு வாரி வழங்கும் பக்தர்கள்

ஜனவரி 02,2018சபரிமலை: சபரிமலையில், 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வரும் அன்னதானத்துக்காக, பக்தர்கள் வழங்கும் நன்கொடை, கடந்த ஆண்டை விட ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. சபரிமலையில் தனியார் அன்னதானத்துக்கு, கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் தேவசம்போர்டு முழுவீச்சில் அன்னதானம் வழங்குகிறது. மாளிகைப்புறத்தில் பின்புறம் அமைக்கப்பட்டள்ள பிரமாண்ட அன்னதான மண்டபத்தில், 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. காலையில் உப்புமா, மதியம் சாப்பாடு, மாலையில் கஞ்சி, நள்ளிரவில் உப்புமா, சுக்கு காப்பி வழங்கப்படுகிறது. இதற்காக பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். கடந்த, 2016 மண்டல காலத்தில், 60 லட்சம் ரூபாய் நன்கொடை வசூல் ஆனது. 2017, டிச.,26 ல் முடிந்த, மண்டல காலத்தில், 1.46 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. இந்த தொகை மூலம், அடுத்த ஆண்டுக்கான அன்னதானமும் நடத்த முடியும் என்று தேவசம்போர்டு கருதுகிறது.

நீங்க குருசாமியா....

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்