சபரிமலை எருமேலியில் பேட்டை துள்ளல் நிறைவு: 14ல் மகரவிளக்கு

ஜனவரி 12,2018



சபரிமலை: மகரவிளக்குக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளலுடன் எருமேலியில் பேட்டை துள்ளல் நேற்று நிறைவு பெற்றது. இன்று பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படுகிறது. சபரிமலையில் வரும் 14-ம் தேதி மகரவிளக்கு பெருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சபரிமலை மற்றும் பம்பையில் மகரவிளக்கு நாளில் ஐந்தாயிரம் போலீசாரும், கோட்டயம், பத்தணந்திட்டை, இடுக்கி மாவட்டங்களில் தேவைக்கேற்ப போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

பேட்டைதுள்ளல் நிறைவு : நேற்று மதியம் 12:45 மணிக்கு பேட்டை ஸ்ரீதர்ம சாஸ்தா கோயிலில் இருந்து அம்பலப்புழா பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட யானைகளுடன் பேட்டைதுள்ளி வந்தனர். மூன்று யானைகள் அணிவகுக்க பேட்டை துள்ளிய இவர்கள் பெரிய சாஸ்தா கோயிலில் நிறைவு செய்த பின்னர் பெருவழிப்பாதை வழியாக சபரிமலை சென்றனர். இதுபோல ஆலங்காடு பக்தர்கள் மதியம் மூன்று மணிக்கு பேட்டை துள்ளினர். இந்த இரண்டு குழுவினரின் பேட்டைத்துள்ளலுடன் பேட்டைதுள்ளல் நிறைவு பெற்றது.

திருவாபரணம் இன்று புறப்பாடு : மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் இன்று பந்தளம் வலியக்கோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து புறப்படுகிறது. அதிகாலை 4:30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்படும் இந்த திருவாபரணங்கள் மதியம் 12:00 மணிக்கு உச்ச பூஜைக்கு பின் பெட்டிகளில் அடைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் புறப்படுகிறது. இந்த திருவாபரண பவனி 14-ம் தேதி மாலை சன்னிதானம் வந்தடையும். மகரவிளக்குக்கு முன்னோடியான பிரசாத சுத்தி பூஜைகள் இன்று தீபாராதனைக்கு பின்னர் நடைபெறுகிறது. நாளை மதியம் உச்ச பூஜைக்கு முன் பிம்பசுத்தி பூஜைகள் நடைபெறும்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்