அய்யப்பன் ஆசிர்வாதமே காரணம்: சபரிமலை தந்திரி

நவம்பர் 13,2018



சபரிமலை: அய்யப்பன் ஆசிர்வாதம் காரணமாகவே, சுப்ரீம் கோர்ட் மறு சீராய்வு செய்ய ஒப்பு கொண்டதாக, சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு கூறியுள்ளார்.

வேண்டுதலுக்கு பலன்: சபரிமலை கோயில் விவகாரத்தில் மறு சீராய்வு செய்யும் சுப்ரீம் கோர்ட்டின் முடிவு தொடர்பாக தந்திரி கண்டராரூ ராஜீவரு கூறியதாவது:
கடவுள் அய்யப்பன் ஆசிர்வாதத்தால் தான் சுப்ரீம்கோர்ட் மறு சீராய்வு செய்ய முடிவு செய்துள்ளது. பக்தர்கள் மனமுருகி வேண்டியதற்கு பலன் கிடைத்துள்ளது. இது மிகப்பெரிய சாதனை. கோர்ட்டின் முடிவால் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.கேரள வெள்ளம் மற்றும் கோர்ட் உத்தரவு நமக்கு பிரச்னையை ஏற்படுத்தியது. அனைத்து பிரச்னைகளில் இருந்தும் நம்மை அய்யப்பன் காப்பாற்றியுள்ளார்.

பிரார்த்தனை: கோர்ட்டில் மீண்டும் விசாரணை என்ற முடிவு நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜன.,22ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் போது, அமைதி மற்றும் மகிழ்ச்சி ஆகியவை சபரிமலையில் மீண்டும் ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்படும். இது அய்யப்பனின் வெற்றி. அவரது சக்திக்கு தலைவணங்குகிறேன். ஆதரவு அளித்த அனைத்து பக்தர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இறுதி தீர்ப்பு வரும் வரை அனைவரும் பிரார்த்தனையை தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்