மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு: குவிந்த பக்தர்கள்

நவம்பர் 16,2018



சபரிமலை: சபரிமலை கோவில் நடை மண்டல பூஜைக்காக இன்று (நவ.,16) மாலை 5.00 மணிக்கு திறக்கப்பட்டது. இதற்கிடையே, ஐப்பசி மாத பூஜையின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் போல், இந்த முறை நடந்து விடக்கூடாது என்பதில், கேரள அரசு உறுதியாக உள்ளது. இதையடுத்து, நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில், 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.



இடுக்கி மாவட்டம், புல்மேடு வழியாக காட்டுப் பாதையில், சபரிமலைக்கு நடந்து செல்லலாம் என்பதால், அங்கு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை, கேரளா வன உயிரின துறையினர் செய்து வருகின்றனர். பெரியாறு புலிகள் காப்பக மேற்கு பிராந்திய உதவி இயக்குனர், ஹாபி கூறியதாவது: அழுதகடவு- - சிறியானைவட்டம், சத்திரம் -- சன்னிதானம் ஆகிய காட்டுப் பாதைகள் சீரமைக்கப்பட்டு, நடைபாதையாக மாற்றி, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அழுதகடவு- வழியில் அழுதகடவு, கள்ளிடம் குன்று, வள்ளித்தோடு, புதுச்சேரி, கரிமலை ஆகிய பகுதிகளில் தங்குமிடங்கள் அமைக்கப்படும். அங்கு மூலிகை குடிநீர், கழிப்பறை, வெளிச்சம், உணவு ஆகிய வசதிகள் செய்யப்படும். காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில், வனத்துறையினர் ஈடுபடுவர். இவ்வாறு அவர் கூறினார்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்