Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

 
முதல் பக்கம்>தேவாரம் பாடல்கள்
 
தேவாரம் பாடல்கள் - இசை வடிவில்
பாடியவர் : கலைமாமணி முனைவர் தி.சுரேஷ்சிவன், மதுரை
1 . தேவாரம் (இசை வடிவில்) இறைவணக்கம்
பாடல் : உமாபதி சிவம்

பூழியர்கோன் வெப்பொழித்த, புகலியர் கோன் சுழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி.

கணபதி வணக்கம் - ஞானசம்பந்தர்

திருவலிவலம் : திருவிராகம் : பண் - வியாழக்குறிஞ்சி

பிடியதன் உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன், மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே!
2 . திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய முதல் தேவாரப் பதிகம். தலம்: திருப்பிரமபுரம். பண் - நட்டபாடை
பாடல் : திருஞானசம்பந்தர்

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் உள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந்து ஏத்தஅருள்செய்த
பீடுடையபி மாபுரமேவிய பெம்மான் இவனன்றே.                 

அருநெறிய மறை வல்ல முனியகன் பொய்கை அலர்மேய
பெருநெறிய பிரமாபுரமேவிய பெம்மானிவன் தன்னை
ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசம் பந்தன் உரைசெய்த
திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே.

திருச்சிற்றம்பலம்
3 . திருநீற்றுப் பதிகம்: தலம்; திருஆலவாய் - பண் : காந்தாரம்
பாடல் : திருஞானசம்பந்தர்

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவா வாயுமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.              

முத்தி தருவது நீறு முனிவா அணிவது நீறு   
சத்திய மாவது நீறு தக்கோட் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே.                  

ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச்   
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

திருச்சிற்றம்பலம்

பதிக வரலாறு: மதுரையில் திருஞான சம்பந்தர் தங்கியிருந்த மடத்தில் சமணர்கள் வைத்த தீயானது பையவே சென்று கூன்பாண்டியனை வெப்பு நோயாகப் பற்றிக் கொள்ள அது தீருமாறு பாடியருளியதாகும்.
4 . நமசிவாயத் திருப்பதிகம்: பண் - காந்தார பஞ்சமம்
பாடல் : திருநாவுக்கரசர்

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோட; கடலில் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.    
                
இலக்க விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
                
மாப்பிணை தழுவிய மாதொட; பாகத்தான்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்து
ஏத்தவல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே.                    

திருச்சிற்றம்பலம்
5 . திருவாலவாய் : பண் : புறநீர்மை
பாடல் : திருஞானசம்பந்தர்

மங்கையர்க்கரசி வளவாகோன் பாவை
வாவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாள்தொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநா யகன்நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமா;ந்த
ஆலவா யாவதும் இதுவே.                            

பன்னலம் புணரும் பாண்டிமா தேவி
குலச்சிறை யெனும்இவா; பணியும்
அந்நலம் பெறுசீ; ஆலவாய் ஈசன்
திருவடி ஆங்கவை போற்றிக்
கன்னலம் பொய காழியுள் ஞான
சம்பந்தன் செந்தமிழ் இவைகொண்டு
இன்னலம் பாட வல்லவர் இமையோ;
ஏத்தவீற் றிருப்பவர் இனிதே.
                        
திருச்சிற்றம்பலம்
6 . திருஅதிகை வீரட்டானம் : பண் : கொல்லி
பாடல் : திருநாவுக்கரசர்

கூற்றாயின வாறு விலக்ககிலீட;
கொடுமை பல செய்தன நானறியேன்
ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும்
பிடணீயாது வண்ங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக்கெடில
வீரட்டானத்துறை அம்மானே.                        

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்
உலந்தாட; தலையில் பலி கொண்டு உழல்வாய்
உடல் உள்ளுறு சூலை தவிட;த்தருளாய்
அலந்தேன் அடியேன் அதிகைக்கெடில    
வீரட்டானத்துறை அம்மானே.

திருச்சிற்றம்பலம்      
     

இறைவன் : வீரட்டேசுவரர் இறைவி : திரிபுரசுந்தரி
இப்பதிகம் சூலை நோய் நீங்க ஓதியருளியது.
7 . திருஅங்கமாலை : பொது : பண் - சாதா
பாடல் : திருநாவுக்கரசர்

தலையே நீ வணங்காய் - தலை மாலை தலைக்கணிந்து
தலையாலே பலிதேருந் தலைவனைத் தலையேநீ வணங்காய்
            
நெஞ்சே நீ நினையாய் - நிமிட;புன்சடை நின்மலனை
மஞ்சாடும்மலை மங்கைம ணாளனைநெஞ்சே நீ நினையாய்
            
இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச் சென்றங்கிறுமாந் திருப்பன்கொலோ.        

தேடிக் கண்டு கொண்டேன் - திருமாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளேதேடிக் கண்டு கொண்டேன்.

திருச்சிற்றம்பலம்       
8 . நமசிவாயத் திருப்பதிகம் பொது : பண் - காந்தார பஞ்சமம்
பாடல் : திருநாவுக்கரசர்

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோட; கடலில் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.                        
இலக்க விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.                        
மாப்பிணை தழுவிய மாதொட; பாகத்தான்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்து
ஏத்தவல்லாட; தமக்கு இடுக்கண் இல்லையே.

திருச்சிற்றம்பலம்
9 . திருவாவடுதுறை : பண் - காந்தாரபஞ்சமம் இறைவன்: மாசிலாமணியீசர். இறைவி : ஒப்பிலா முலையம்மை
பாடல் : திருஞானசம்பந்தர்

இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே.

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக் கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

அலைபுனல் ஆவடு துறை அமா;ந்த
இலைநுனை வேற்படை எம்மிறையை
நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலை வல்லாட;
விலையாயின நீங்கிப்போய் விண்ணவா; வியனுலகம்    
நிலையாக முன்னேறுவா; நிலமிசை நிலையிலரே.

திருச்சிற்றம்பலம்
10 . திருவாலவாய் : பண் : புறநீர்மை
பாடல் : திருஞானசம்பந்தர்

மங்கையர்க்கரசி வளவர்;கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாள்தொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநா யகன்நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவா யாவதும் இதுவே.                            
பன்னலம் புணரும் பாண்டிமா தேவி
குலச்சிறை யெனும்இவர் பணியும்
அந்நலம் பெறுசீட; ஆலவாய் ஈசன்
திருவடி ஆங்கவை போற்றிக்
கன்னலம் பெரிய காழியுள் ஞான
சம்பந்தன் செந்தமிழ் இவைகொண்டு
இன்னலம் பாட வல்லவா; இமையோட;
ஏத்தவீற் றிருப்பவர்; இனிதே.

திருச்சிற்றம்பலம்

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.