Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> செய்திகள்

பெண்மையை போற்றினார் சுவாமிஜிஆகஸ்ட் 31,2017

சுவாமிஜியை பார்க்கும் முன்னே சகோதரி நிவேதிதை லண்டனில் ஒரு பள்ளியை நடத்துகிறார். சுவாமிஜியின் சொற்பொழிவுகளை கேட்டு அவர்மேல் ஈடுபாடு கொண்டு அவரை தமது பள்ளிக்கு கூட்டி வருகிறார். அதை பார்தது சுவாமிஜி ஆஹா! இது போன்ற பள்ளி நம்நாட்டில் நடைபெற்றால் நன்றாக இருக்கும் எனநினைத்தார். பின் அதை முன்னிட்டே சகோதரி நிவேதிதை இந்தியா வருகிறார். பெண் கல்வி என்ற வாய்ப்பு தம்மை தயார்படுத்தி கொள்ள கூடியதாக தங்களுடைய ப்ரச்சனைகளை தாங்களே தீர்த்து கொள்வதற்கு உரிய கல்வி பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். அதை தமது முக்கிய பணியாக எடுத்தார் சுவாமிஜி. அந்த பெண்கல்வி எப்படியெல்லாம் அமைய வேண்டும் என்று பேசும் போது சகோதரி நிவேதிதை ஒரு பள்ளியை நடத்த வேண்டும் என்கிறாள். அதற்கு சுவாமிஜியிடம் நான் எப்படி பாடத்திட்டம் அமைப்பது என கேட்கிறார். அதற்கு அதை கற்கின்ற மாணவிகளே உனக்கு கற்றுக் கொடுப்பார்கள் என்றார்.

இந்த வார்த்தையை கேட்டு ஒரே ஆச்சர்யம். அப்போது சுவிச்சர்லாந்தில் பிறந்த ஒரு அறிஞர் நவோதயா பள்ளி பற்றி கூறுகிறார். அப்போது அவர் மிகவும் பிரபல்யமானவர். அவர் கூறிய கருத்தை அப்படியே சுவாமிஜியும் எளிமையாக கூறினார். யார் உன்னிடம் கற்றுக் கொள்கிறார்களோ அவர்களே உனக்கு கற்றுக் கொடுப்பார்கள். மாணவிகள் கூற மாட்டார்கள் அவர்களின் தேவையை நீயே புரிந்து கொள் அதிலிருந்து திட்டத்தை நீயே உருவாக்கு என்றார். பெண்களின் தேவை என்ன? இந்தியாவில் ஒரு பெண்கள் பள்ளியை நடத்துவதற்கு ஒரு பெண்கள் படை வர வேண்டும். பெண்களுக்காக தன்னை பூரணமாக அர்ப்பணித்த கல்விமான்கள் வருவார்கள். இன்று விதவைகள் இதை செய்யட்டும். பின்பு பிரம்மச்சாரிகளே வருவார்கள் என்றார். ஒரு அம்மா அவர்கள் அந்த காலத்தில் பி.ஏ. படித்தவர்கள் அவர்கள் பிரம்மசமாஜத்தில் இருக்கிறார்கள். ஆனால் சீர்திருத்த கொள்கையில் கொஞ்சம் இவர்கள் கிருஸ்தவர்கள் பக்கம் சாய்ந்து விட்டார்கள். அவர்களுக்கு சுவாமிஜி ஒரு கடிதம் எழுதுகிறார் நீங்கள் நமது பாரத தேசத்தின் தத்துவத்தை இந்திய உடை அணிந்து அவர்களுக்கு சென்று பரப்புவதை ஆஹா! அமெரிக்க நாட்டிலே இந்திய தத்துவத்தை எடுத்து புகட்டுவதை நான் காண்கிறேன் என்றார்.

கார்க்கி, மைத்ரேயி பிறந்த நாட்டிலே அந்த பணியை உங்களால் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன் ஆனால் அந்த பெண் மறுத்து விட்டார். இந்தியாவில் இருந்து ஒரு பெண் மேல்நாட்டில் இந்திய தத்துவத்தை விளக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அந்த நேரத்தில் மேல்நாட்டிலிருந்து ஒரு பெண் இந்தியாவுக்கு வந்து பரத தேசத்தின் பெண்களுக்கு உழைக்க வேண்டும் என சுவாமிஜியை கெஞ்சுகிறார் சகோதரி நிவேதிதை. முதலில் பாரதத்தின் நிலைமை புரியுமா? தட்பவெட்பநிலை சரியாகுமா என யோசிக்கிறார். ஒருவருடம் தள்ளிப்போடுகிறார். ஆனால் மார்கரட் நச்சரிக்கிறாள். அதன் பின் வேறு வழியில்லாமல் சரி என்கிறார் சுவாமிஜி. சுவாமிஜி எனக்கு கொடுக்க விரும்பிய உயர்ந்த வாய்ப்பை சகோதரி நிவேதிதை தட்டிச் சென்று விட்டார் என்று கூறுகிறார். சுவாமிஜி மேல்நாட்டிற்கு அனுப்ப எண்ணிய அந்தப் பெண். வெளிநாட்டில் இருந்து வந்து நமது பாரத தேசத்தின் பெருமையை புரிந்து கொண்டு மீண்டும் சுவாமிஜி கூடநிவேதிதை வெளிநாடு செல்கிறாள்.

இங்கிலாந்து, அமெரிக்காவில் நமது இந்திய கலாசார பெருமையை எடுத்து சொல்கிறாள். அப்போது சுவாமிஜி சொல்கிறார் இந்த பாரத தேசத்திற்கு உழைப்பதற்கு பெண் சிங்கம் போன்ற பெண்கள் தேவை இப்போதைக்கு அந்தகைய பெண்கள் இல்லை அப்படியென்றால் இப்போது இல்லை ஆனால் இனி உருவாக்கி விடுவார்கள் உருவாக்கும் பணியை ஆரம்பித்து வைப்பவள் நீ. நீ உருவாக்கு என்கிறார் நிவேதிதையை. காளியை வழிபடும் போது ஆண்களை பார்த்து தாயே! பராசக்தி என்னை வலிமையாக்கு உனக்கு ஆண்மை வேண்டும் எனில் துர்க்கையை வழிபடு என்கிறார். தாயே எனக்கு ஆண்மையை கொடு, வலிமையை கொடு என்கிறோம். ஆண்மை, வலிமை, தேஸஸ், பலம், தைரியம், எல்லாம் அம்பாள் தருகிறாள் அதனால் தெய்வமாக பார்த்தாலும் தேசமாக பார்த்தாலும் கடல், மலை, நதியெல்லாம் தாயாக பார்க்கும் தேசத்தில எல்லாவற்றிலும் அவர் தாய் என்ற ஒன்றையே பார்த்தார்.

Bookmark and Share

மேலும் செய்திகள்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)