முதல் பக்கம் >> கருத்துக்கள்

மின்னல் வேக மாற்றம்!ஜனவரி 02,2013

* ஆன்மிக வாழ்வில் பேரின்பம் கிடைக்காமல் போனால் அதற்காகப் புலனின்ப வாழ்வில் திருப்தி கொள்ளக்கூடாது. இது அமுதம் கிடைக்காவிட்டால்சாக்கடைநீரை நாடிச் செல்வதற்கு சமம்.
* மாபெரும் வீரனே! உறக்கம் உனக்குப் பொருந்தாது. துணிவுடன் எழுந்து நில்.
* உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது உனக்கு பொருந்தாது. "நான் ஒரு வெற்றி வீரன்' என்று எப்போதும் உனக்குள்ளேயே சொல்லிக்கொள். மின்னல் வேகத்தில் உனக்குள் புதிய மாற்றம் ஏற்படுவதைக் காண்பாய்.
* கீழ்த்தரமான தந்திர முறைகளால் இந்த உலகத்தில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது.
* அதிர்ஷ்டதேவதை உனக்கு அருள்புரியட்டும் அல்லது புரியாமல் போகட்டும். ஆனால் நீ, உண்மை என்னும் பாதையில் இருந்து அணுவளவும் பிறழ்ந்து போகாமல் இருப்பதில் கவனமாக இரு.
* வாழ்வில் எந்த அளவுக்கு உயர நினைக்கிறாயோ, அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளையும் நீ கடந்தாக வேண்டும்.
- விவேகானந்தர்

Bookmark and Share

மேலும் கருத்துக்கள்

வாசகர் கருத்து (1)
vignesh - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-பிப்-201309:14:58 IST Report Abuse
vignesh இந்த கருத்துக்களை தொகுத்து வழங்கிய தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி...இன்னும் அவருடைய பல பொன் மொழிகள் உள்ளன, நிச்சயமாக அவை இன்று உள்ள இளைஜர்களுக்கு கட்டாயம் தேவை நல்ல பாரதம் அமைய பாடு படுவோம் ஜெய் ஹிந்த்
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
மேலும் தொடர்புடைய வாசகர் கருத்து

உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)