Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> செய்திகள்

சுவாமி விவேகானந்தர் தமிழ் தொலைகாட்சித் தொடர்!ஆகஸ்ட் 19,2013

விவேகானந்தரின் 150-வது பிறந்த நாளின்போது பாரதத்திற்கும் நம் பண்பாட்டுக்கும் ஒரு புதிய பொற்காலம் தோன்றும் என்று ஒரு நூற்றாண்டுக்கு முன்பே சகோதரி நிவேதிதை கூறினார். பாரத வரலாறு, கலாச்சாரம், ஆன்மிகம் ஆகிய துறைகளில் பல ஆவணப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் தயாரித்துப் புகழ் பெற்றது அசோசியேட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் பொன்விழா காணும் இந்நேரத்தில் சுவாமிஜியின் வரலாற்றை 52 பகுதிகள் கொண்ட ஒரு டி.வி. தொடராகத் தமிழில் தயாரித்துள்ளது.இதற்காக சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடம் ரூ.28 லட்சம் வழங்கியுள்ளது. இந்தத் தொடரில் சில காட்சிகள் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைமை இடமான பேலூர் மடம், தக்ஷிணேஸ்வர காளி கோவில், வராக நகர், காசிப்பூர் மற்றும் இமயமலையில் உள்ள மாயாவதி ஆசிரமத்திலும், பனிமலைகளிலும் படமாக்கப்பட்டுள்ளன. 19-ம் நூற்றாண்டின் இறுதியில் இருந்த கட்டிடக் கலை மற்றும் சுற்றுச்சூழல்கள் விசேஷ காட்சிகளாகப் படமாக்கப்பட்டுள்ளன. தமிழக ஆளுநர் மேதகு ரோசய்யா இத்தொடரைத் தொடங்கி வைத்தார். முன்னணிப் பாடகர்களின் குரலிசை ஒலிக்கும் இத்தொடர் ஜூலை 13, 2013 முதல் 52 வாரங்களுக்கு (ஒரு வருடம்) பொதிகைத் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 9 மணியிலிருந்து 9.30 மணி வரை ஒளிபரப்பாகின்றது.

Bookmark and Share

மேலும் செய்திகள்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)