தினமலர் முதல் பக்கம் iPaper | RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > கருடபஞ்சமி
கருடபஞ்சமி

கருடாழ்வாருக்குரிய சிறப்பான தலங்களில் முதன்மையானது நாச்சியார் கோவில். இங்குள்ள கல் கருடாழ்வார் மிகுந்த கீர்த்தியும் சக்தியும் வாய்ந்தவர். சிற்பி ஒருவர், இந்தக் கருடனின் சிலையைச் செய்து பிராணபிரதிஷ்டை(உயிரூட்டுதல்) செய்தார். அப்போது, அது வேகமாக வானில் பறக்க ஆரம்பித்தது. அச்சமுற்ற சிற்பி, தன் கையிலிருந்த உளியைத் தூக்கி எறிந்ததும் மூக்கில் அடிபட்டு கீழே இறங்கியது. இச்சிலையே நாச்சியார் கோவிலில் உள்ளதாகக் கூறுகின்றனர். இங்குள்ள கருவறைக்கு அருகில் உள்ள மகாமண்டபத்தில், சாளக்கிராம வடிவில் நீண்ட சிறகுகளோடு கம்பீரமாகக் காட்சியருள்கிறார். விழாக்காலங்களில் கல் கருடாழ்வார் வீதியுலா வருவார்.இவரது சந்நிதியில் இருந்து எழுந்தருளும்போது, நான்கு நபர்கள் தூக்க ஆரம்பிப்பர். கோயிலைக் கடக்க கடக்க எடை அதிகரிக்கும். 8, 16 என்று அதிக நபர்கள் இதைத் தூக்குவர். இது ஒரு கலியுக அதிசயம். இவருக்கு மோதகம் (கொழுக்கட்டை) படைக்கப்படுகிறது. இதற்கு அமுதகலசம் என்று பெயர். இதனால்,மோதகமோதர் என்ற சிறப்புப்பெயரும் இவருக்கு உண்டு. கருடாழ்வாரின் அவதார தினமான கருடஜெயந்தி இங்கு விசேஷம். இவ்வாண்டு திதி அடிப்படையில் ஆகஸ்ட்4ல் கருடபஞ்சமியும், நட்சத்திர அடிப்படையில் ஆகஸ்ட்6ல் பட்சிராஜர் திருநட்சத்திரமும் கொண்டாடப்படுகிறது.

 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2022 www.dinamalar.com. All rights reserved.