தினமலர் முதல் பக்கம்
| Get Font |  RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > கந்தசஷ்டி ஆரம்பம்
கந்தசஷ்டி ஆரம்பம்
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன்  வைத்துக்கொண்டார். இந்த போர் ஆறு நாட்கள் நிகழ்ந்தது. இந்த நாட்களே கந்தசஷ்டியாகக் கொண்டாடப்படுகிறது. ஐப்பசியில் தீபாவளி  பண்டிகை முடிந்த மறுநாளில் இருந்து பிரதமை திதியில் துவங்கி, சஷ்டி திதி வரையில் ஆறு நாட்கள் இந்த வைபவம் நடக்கும்.  சஷ்டியில் சூரனை சம்ஹாரம் செய்ததால் இதற்கு, கந்த சஷ்டி என்று பெயர் ஏற்பட்டது. திருச்செந்தூரில் இந்த விழா விசேஷமாக  நடக்கும். தவிர, பெரும்பாலான முருகன் கோயில்களிலும் இவ்விழா நடத்தப்படும். விழாவின் ஆறாம் நாளில் முருகப்பெருமான், சூரனை  சம்ஹாரம் செய்வார். அடுத்த நாட்களில் முருகன் திருக்கல்யாணம் நடக்கும்.  விரத முறை: கந்தசஷ்டி விரதமிருப்பவர்கள் விரதம்  துவங்குவதற்கு முதல்நாள் கையில் காப்பு கட்டிக் கொள்வர். இந்த ஆறு நாட்களும் பக்தர்கள் உபவாசம் இருப்பர். சாப்பிடாமல் இருக்க  முடியாதவர்கள், பழம், பால் மட்டும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

பலன்: சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வளரும் என்ற பழமொழிக்கேற்ப, சஷ்டி விரதம் இருந்தால், குழந்தை பாக்கியம் உண்டாகும்.
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2015 www.dinamalar.com. All rights reserved.