தினமலர் முதல் பக்கம்
| Get Font |  RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ்- விளக்கம்

ஆசியாவின் மையப்பகுதியிலுள்ள சிறிய நாடான இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில்,  பெத்லகேம் என்னுமிடத்தில் இயேசு பிறந்தார். அவர் பிறந்தது பற்றிய விபரம், கி.பி.,154ல் போப் ஜூலியசால் முதன்முதல் அறிவிக்கப்பட்டது. மாஸ் என்றால் ஆராதனை, எனவே கிறிஸ்து+மாஸ் கிறிஸ்துவின் ஆராதனையாக மாறியது. இதை எக்ஸ்மாஸ் என்றும் சொல்வர். எக்ஸ்  என்பது கிரேக்க சொல். இங்கிலாந்தில் பழங்காலத்தில் டிசம்பர் 25ம் தேதியை ஆண்டின் முதல் நாளாக கொண்டாடினர். பிரெஞ்சு மொழியில் கிறிஸ்துமஸை நோயஸ் என்கின்றனர்.பிறந்த இடத்தில் சர்ச் இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகரில் பெத்லகேம் என்ற இடத்தில் மாட்டுத் தொழுவில் பிறந்தார். இந்த இடத்தில் கடந்த 1982ல் ஒரு ஆலயம் கட்டப்பட்டது. இதைசர்ச் ஆப் நேட்டிவிட்டி என அழைப்பர். இதைக்கட்ட 65 கோடி ரூபாய் செலவிட்டனர். எட்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. முழுச்செலவையும் 49 பேர் நன்கொடையாக பகிர்ந்தளித்தனர். கிறிஸ்துவின் மீது அன்பு கொண்டவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்டு இந்த சர்ச்சை காண வேண்டுமென துடிக்கின்றனர்.

இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு

இயேசுவின் பிறப்பதற்கு முன்னதாக, கி.மு.,700ல் ஏசாயா என்ற தீர்க்கதரிசி, கன்னிகை கர்ப்பதியாகி ஒரு குமாரனை பெறுவாள் என்றார். மேலும்,கடவுள் வானில் ஒரு நட்சத்திர அடையாளத்தை கொடுப்பார் என்றார். இயேசு பிறப்பதற்கு முன்னதாக, கி.மு.,500ல் மீகா என்ற தீர்க்கதரிசி யூதேயா நாட்டிலுள்ள(இஸ்ரேல்)பெத்லகேமில், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் வருகிறார் என்றார்.

இயேசு என்றால்  என்ன அர்த்தம்?

 இயேசு என்பதற்கு ரட்சகர், விடுவிப்பவர், காப்பாற்றுபவர், அதிசயமானவர், ஆலோசனை கடவுள், வல்லமை தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு என்று பொருள். கிறிஸ்து என்றால் தீர்க்கதரிசி, வரும் காரியங்களை முன்னுரைப்பவர் என அர்த்தம்.கிறிஸ்துமஸ் காலத்தில் , வீடுகளில் குடில்கள் அமைத்து இயேசுவின் பிறப்பை சித்தரிப்பர். மாட்டுத்தொழுவங்கள்  மின்னொளியில் ஜொலிக்கும். முதன்முதலாக, இங்கிலாந்தில் தான் கி.பி.,1722ல்  புனித  பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் குடிலை அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்தை சேர்ந்த கார்ஸ்லே  என்பவர் முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து  அட்டையை கி.பி.,1843ல் தன் நண்பர் ஹென்றி ஹோலோவுக்கு அனுப்பினார். பிறகு இங்கிலாந்து அரச குடும்பத்தினர்  தங்கள் குடும்பத்தை சேர்ந்த  மற்றவர்களுக்கு அனுப்ப துவங்கினர். அமெரிக்காவில் வாழ்த்து  அட்டைகளுக்காக மட்டும்  25 கோடி டாலர் வரை  செலவழிக்கின்றனர். இங்கிலாந்தை 1841ல், அல்பெர்டினாஸ் என்ற மன்னர்  ஆட்சி செய்தார். இவர் விண்ட்சர் என்ற தனது கோட்டையில் முதன்முதலாக  கிறிஸ்துமஸ் மரத்தை நட்டார். இதற்கு முன்பு ஜெர்மனி, ஆஸ்திரியா உட்பட  ஐரோப்பிய பல நாடுகளில் பிர் என்ற மரத்தை அலங்கரிக்கும் வழக்கம் இருந்தது.

அருள்பாலிக்கும் அருளானந்தர்

 போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பனில் 1647, மார்ச் 1ல் பிறந்தவர் அருளானந்தர். இயற் பெயர் ஜான். 1662 டிசம்பர் 17ல், இயேசுசபை நவதுறவியர் இல்லத்தில் சேர்ந்த இவர்,1673 ல் கோவா வந்தார். பின், தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் கற்ற அருளானந்தர், காவி உடையுடன் மக்களுக்கு சேவை செய்ய துவங்கினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று, ஏழை மக்களுக்கு கல்வி, மருத்துவ உதவி செய்து வந்தார். ஒருசமயம் ராமநாதபுரத்தை ஆண்ட மன்னரின் கீழ் சிற்றரசர் ஒருவர் இருந்தார். அவர் நோயால் அவதிபட்டார். அவரை அருளானந்தர் குணப்படுத்தினார். மகிழ்ச்சியடைந்த அவரும் திருமறையில் சேரவிரும்பினார். சிற்றரசருக்கோ மூன்று மனைவிகள். திருமறை சட்டப்படி ஒரு மனைவியே இருக்க வேண்டும் என்பதால், முதல் மனைவியை ஏற்றுக் கொண்டு, மற்றவர்களை பிரிந்தார். பாதிக்கப்பட்ட ஒரு மனைவி, மன்னருக்கு உறவினர் என்பதால் , அவரிடம் இதுபற்றி முறையிட்டார். ஆத்திரமடைந்த மன்னர், அருளானந்தரைக் கொல்ல உத்தரவிட்டார். அதன்படி கைது செய்யப்பட்ட அவர், திருவாடானை அருகே ஓரியூரில் 1693 பிப்ரவரி நான்காம் தேதி கொல்லப்பட்டார். அந்த இடம் (ஓரியூர் திடல்) செந்நிறமானது .

காடாக இருந்த அப்பகுதியானது இன்று அவரது பெயரில் எழில் மிகு ஆலயமாக காட்சியளிக்கிறது. அவருக்கு புனிதர் பட்டம் தரப்பட்டது. அருளானந்தர் கொல்லப்பட்டது புதன்கிழமை என்பதால், அன்றையதினம் ஏராளமானோர் ஆலயம் வந்து அந்தப் புனிதரை ஜெபித்து செல்கின்றனர். ஓரியூர் திடல் பகுதியில் ஒரு அடி ஆழத்தில் தோண்டி பார்த்தாலும் செந்நிறமாக காட்சியளிக்கும். இங்குள்ள ஆலயத்திலுள்ள ஒரு தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அருளானந்தரை வழிபட வருவோர் ,இம் மண்ணை உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார்கள். இப்படி செய்தால் தீராத வியாதிகள் தீர்வதாக நம்புகின்றனர். சிவகங்கை மறைமாவட்டத்தின் பங்காக ஓரியூர் ஆலயம் விளங்குகிறது. அருளானந்தர் பெயரில் மேல்நிலைப்பள்ளி, மருத்துவமனை செயல்படுகிறது. ஆண்டுதோறும் மூன்று விழாக்கள் நடக்கிறது.அருளானந்தருக்கு பிப்., 4ம் தேதி ஒரு விழாவும், புனிதர் பட்டம் கொடுத்த ஜூன் 22ல் மற்றொரு விழாவும் , செப்டம்பர் எட்டாம் தேதி மாதா ஆலய விழாவும் நடக்கிறது. இங்கு வந்து பிள்ளை வரம் பெற்றவர் தென்னங்கன்றை காணிக்கையாக செலுத்துவர். மதுரையிலிந்து 118 கி.மீ., ராமநாதபுரத்திலிருந்து 73 கி.மீ., சிவகங்கையிலிருந்து 70 கி.மீ.,, திருவாடானையில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் ஓரியூர் உள்ளது. திருவாடானையிலிருந்து பஸ் உண்டு.

இறை தூதர்கள் துதித்த திரு இருதயங்களின் ஆலயம்

சிவகங்கை மாவட்டம் சருகணியில் 260 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வரலாற்று சிறப்புமிக்கது, திரு இருதயங்களின் ஆலயம். ஆலய முகப்பில் இரு இருதயங்கள் பிரதானமாகவும், தேவ மாதாக்கள் ஆசீர்வதிப்பது போலவும் கலை நயத்துடன் அமைந்துள்ளது. உள்ளே மூன்றுபுறமும் நின்று வழிபடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு: கடந்த 1730 ல், இத்தாலியில் இருந்து, ஊழியம் செய்வதற்காக ஜேம்ஸ் தாமஸ் டி ரோசி அடிகள் இங்கு வந்தார். ஏழுகிழமை, 52 வாரங்களுக்கு புதுமைகள் என்ற பெயரில் வழிபாட்டு முறைகளும் அடக்கம். எளிதான வழிபாட்டு முறைகளை எழுதினார். இடையர் சருகணி என்ற காட்டுப்பகுதியில் குடிசையில் தங்கி, சிறு ஆலயம் கட்டி ஊழியம் செய்தார். சில ஆண்டுகளில்  மாறணி என்ற இடத்திற்கு மாறினார். (அன்றைய அரசு ஆவணங்களில் மாறணி சருகணி என்றே உள்ளது) கடந்த 1751 ல் துவங்கிய  ஆலயப்பணி 1753 ல் முடிந்தது. இது, 18 ம் நூற்றாண்டில்  போர்த்துக்கீசிய முறைப்படி கட்டப்பட்ட ஆலயங்களில் மிகப்பெரியது.

மருதுவை காப்பாற்றியவர்: மன்னர் சசிவர்ணத்தேவர், ரோசி அடிகளுடன் நட்பாக இருந்தார். அதனால் மருது பாண்டியரும் அவருடன் நட்பு பாராட்டினர். பெரிய மருதுவை வெள்ளையர்கள் தேடியபோது, அடிகளிடம் தஞ்சம் அடைந்தார். அப்போது வெள்ளையர்கள், அடிகளின் வீட்டுக்கு வந்தனர். அடிகள் அமரும் மரப்பெட்டிக்குள் மருது ஓளிந்திருந்தார். மருதுவை பற்றி அவர்கள் விசாரிக்க, பொய் சொல்ல விரும்பாத அடிகள் எனக்கு கீழே உள்ளான் என்றார். அடிகள் கிண்டல் செய்வதாக கருதிய அவர்கள் வெளியேறி விட்டனர்.இதற்கு நன்றிக்கடனாக சர்வ காணியாக (சருகணி) அந்த பகுதியை தானம் தருவதாக மருது கூறினார். 1801 ல், மன்னர் கவுரி வல்லப பெரிய உடைய தேவர்,  நாட்டின் நான்கு எல்லை குறித்து செப்பு  பட்டயம் கொடுத்தார். இதில், ஆலயத்தின் ஆராதனைகளுக்காக நிதி ஒதுக்கியது பற்றி கூறப்பட்டுள்ளது.

சவேரியார் தீர்த்தம்: சின்ன சவேரியார் என்று ரோசி அடிகளை பாராட்டுவார்கள். அவரது உடலில் தோய்க்கப்பட்ட நீரை, சவேரியார் தீர்த்தமாக கொடுத்து வந்தனர். இன்றளவும் இது வழக்கத்தில் உள்ளது. அவருக்கு பின் வந்த புனித லெவேயின் கல்லறையில் பூஜித்தும் தீர்த்தம் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் நோய், கஷ்டங்கள் தீரும் என்பது நம்பிக்கை. இதை வயல்களில் தெளித்து, விவசாய பணிகளை துவக்குகின்றனர். சவேரியார், லெவேயை இப்பகுதியினர் இறை தூதர்களாக போற்றுகின்றனர். ஓரியூர் அருளானந்தருக்கு புனிதர் பட்டம் கிடைக்க உழைத்தவர் லெவே. இவரையும் புனிதராகவே பக்தர்கள் போற்றுகின்றனர். விழாக்கள்: மார்ச் 21 ல் லெவே நினைவு நாள், டிச. 3 ல் சவேரியார் திருநாள், ஏப்ரல், மேயில் புனித வெள்ளி முடிந்த மறுவாரம், பாஸ்கா

திருவிழா: ஜூனில் திரு இருதய நாள் விழா.

 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2015 www.dinamalar.com. All rights reserved.