Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>மதுரை மாவட்டம்>மதுரை முருகன் கோயில்
 
மதுரை முருகன் கோயில் (60)
 
அருள்மிகு திருமுருகன் திருக்கோயில்
உசிலம்பட்டி-626 532, மதுரை மாவட்டம்
தொப்பம்பட்டிக்கு வடக்கு 6 கி.மீ., மதுரைக்கு வடமேற்கு தேனி வழி 39 கி.மீ.
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
மெய்கிளறிப்பட்டி-626 532, மதுரை மாவட்டம்
உசிலம்பட்டியின் வடகிழக்கே 2.5 கி.மீ.
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
உத்தப்பநாயக்கனூர்-626 537, மதுரை மாவட்டம்
உசிலம்பட்டிக்கு வடக்கு 8 கி.மீ.
அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில்
நடுப்பட்டி,உசிலம்பட்டி வட்டம்,மதுரை மாவட்டம்
அருள்மிகு முருகன் (லாடன்) திருக்கோயில்
அருள்மிகு முருகன் (லாடன்) திருக்கோயில், யானைமலை நரசிங்கம், யானைமலை வழி, கொட்டாம்பட்டி வட்டம், ஒத்தக்கடை, மதுரை மாவட்டம் 625107.
+91 9842024866
மதுரை மேலூர் பாதையில் உள்ள தலம். ஒத்தக்கடையில் நரசிம்மர் கோயிலும் உள்ளது. மதுரையிலிருந்து யானைமலை ஒத்தக்கடை 10 கிமீ தூரத்தில் உள்ளது. அழகர் கோயில் மேலூர் பாதையில் ஒத்தக்கடைக்கு பாதை பிரியும். இங்கு நரசிங்கபுரத்தில் யோக நரசிம்மர் கோயில் உள்ளது. யானை மலை என்று பொது வழக்கில் இந்த இடம் அழைக்கப்படுகிறது. இதிலிருந்து 2 கிமீ சென்றால் திவ்ய தேசமான திருமோகூர் வரும். அதிலிருந்து 14 கிமீ தூரத்தில் மேலூர் சாலையில் இடப்புறம் திரும்பினால் முதலில் மாணிக்க வாசகர் பிறந்த ஊரான திருவாதவூர் தலமும் உள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் திருவாதவூர் வரை இப்பாதை வழியாகச் செல்கின்றன.
இங்குள்ள நரசிம்மர் கோயில் 8ம் நூற்றாண்டு குடைவரைக் கோயில் எனக் காலம் கணக்கிடப்பட்டுள்ளது. முருகனுக்கு அமைந்த ஒரே குடைவரைக் கோயில் என்றும் கருவறை பின் சுவற்றில் கந்தவேலும் தேவயானையும் அமர்ந்த கோலத்தில் இரு கரங்களுடன் காட்சி தருகிறார். இது புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது.
பூஜை நேரம்: பகல் நேரம் முழுவதும் தரிசிக்கலாம்.
அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோயில்
அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோயில், (இலங்கை சுப்பிரமணியர் கோயில்), விளாம்பட்டி, புத்தூர், வழி உசிலம்பட்டி மற்றும் மாவட்டம், மதுரை வட்டம் 625532.
+91 4552-251428, 9842151428
மதுரையிலிருந்து 36 கிமீ தொலைவில் கம்பம் பாதையில் உள்ள ஊர் உசிலம்பட்டி. இங்கிருந்து வேப்பனூத்துப் பேருந்துப் பாதையில் 2 கிமீ தொலைவில் விளாம்பட்டி பேருந்து நிலையத்தின் அருகாமையில் கோயில். மதுரையிலிருந்து 16 கிமீ தொலைவில் அமைந்த சோழவரத்திலிருந்து 2 கிமீ தொலைவில் தனிச்சயம் என்கிற ஊர் உள்ளது. இதனை ஜெயம் கொண்ட தனிச்சயம் என்றும் அருணகிரிநாதர் பாடிய தனிச்சயம் இதுவாகவும் இருக்கலாம் என்று ஓர் கருத்து உள்ளது.
பாம்புப் புற்றுகள் அதிகம் உள்ள ஊர் என்பதால் புத்தூர் ஆனது. நாகாசுரன் என்கிற கொள்ளையன் ஒருவனின் அட்டகாசத்தால் அவதியுற்ற மன்னன் முருகனை வேண்டியபோது அவரே இளைஞன் வடிவில் பாதணி, தண்டை, வீரவாள் அணிந்து, கத்தி ஏந்தி அவனை அழித்ததாக வரலாறு. அந்த மன்னனே இந்தக் கோயிலைக் கட்டினார். எனவே அதே போல் கொலுசு, வீர வாளுடன் நின்ற அபூர்வ கோலத்தில் முருகன் உள்ளார். திருமலை நாயக்கர் காலத்தில் இவருடைய உக்கிரம் குறைய வள்ளி தெய்வயானையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வில்லுக்கு பதிலாக வேல் சார்த்தப்பட்டதாக வரலாறு. அகத்தியருக்கு காட்சி தந்õ ஸ்தாணுமால்ய லிங்கம் (சுசீந்திரம் போல் மூவரும் இணைந்த லிங்கம்) காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி உள்ளது. முனீஸ்வரன் இலுப்பை மரத்தின் கீழ் உள்ளார். தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை விழாக்கள் விசேஷம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 7 மணி வரை
அருள்மிகு தண்டாயுதசுவாமி திருக்கோயில்
அருள்மிகு தண்டாயுதசுவாமி திருக்கோயில், நேரதாளி சாலை, மதுரை 625001, மதுரை மாவட்டம்.
+91 452-2342782
மதுரை மாநகரின் பிரதான பகுதியில் உள்ளது. நேதாஜி சாலை மற்றும் மேல மாசிவீதி சாலை இணையும் இடத்தில் மீனாட்சி கோயிலிலிருந்து தென்மேற்கே அரை கிமீ தூரத்தில் உள்ளது.
ஏழாம் நூற்றாண்டுக் கோயில். சுந்தரர் இந்தத் தலத்தில் தங்கியிருந்து பின்னர் திருப்பரங்குன்றம் சென்றதாக வரலாறு. அதனால் இந்த இடம் சுந்தரர் மடம் என்றும் அழைக்கப்பட்டது. தைப்பூசத்திற்கு பழனி செல்வோர் இங்கிருந்து உற்சவரை எடுத்துச் சென்று வந்தனர். பின்னர் பழனியில் அபிஷேகமும் நடைபெறும். ஆனால் தற்போது வழக்கத்தில் இல்லை. அந்த காரணத்தால் இவர் மதுரை தண்டாயுதபாணியாக முருகன் நின்ற கோலத்தில் ராஜ அலங்காரம் ஒரு முகம் நாற்கரங்களில் காட்சியளிக்கிறார்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 10 மணி வரை
அருள்மிகு சுப்பிரமணியஸ்வாமி திருக்கோயில்
அருள்மிகு சுப்பிரமணியஸ்வாமி திருக்கோயில், போடிநாயக்கனூர், வழி ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம் வட்டம், மதுரை மாவட்டம் 625513.
+91 4546- 280777, 9626568406, 9600835111
ஆண்டிப்பட்டியிலிருந்து 11 கிமீ தூரத்தில் உள்ளது.
250 ஆண்டுகள் பழமையான தென்காசியம்பதி ஆகும். பழனியிலிருந்து பிடி மண் கொண்டு வரப்பட்டு ஜமீந்தார் திம்மி நாயக்கரால் வழிபடப்பட்டு கட்டப்பட்ட கோயில். மேலும் அருகே பரமசிவன் கோயில், மலைக்கோயிலில் தியான லிங்கம், உற்சவர் மூர்த்தியும் உள்ளது.
பூஜை நேரம்: காலை 8 மணி முதல் 1230 மணி வரை, மாலை 4 மணி முதல் 9 மணி வரை
அருள்மிகு வேலப்பர் திருக்கோயில்
அருள்மிகு வேலப்பர் திருக்கோயில், மாவூற்று (மாவூத்து), தெப்பம்பட்டி, வழி ஆண்டிப்பட்டி 625512, தேனி வட்டம் மதுரை, மாவட்டம்.
+91 4554- 249480, 9842387931
ஆண்டிப்பட்டிக்கு 20 கிமீ தெற்கே தெப்பம்பட்டிக்கு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. 300 படிகள் ஏறி செல்ல வேண்டும். சின்னமனூரில் பூலாண்டேஸ்வரர் கோயிலும், மாணிக்கவாசகர் கோயிலும் உள்ன.
பழங்குடியினர் பளியர்கள் பூசாரிகளாக உள்ள கோயில் கண்டமனூர் ஜமீன்தாரர்களால் கட்டப்பட்டது. அருகே உள்ள மாமரத்தின் கீழ் நீருற்று வற்றாது வருவதால் மாவூற்று வேலப்பர் எனப் பெயர் பெற்றது. இங்கு மூலவர் சுயம்புவாக உள்ளார். வருச நாட்டு ஜமீன் கதையில் வரும் ஜமீந்தார் இந்த கோயிலின் வரலாற்று ஜமீந்தார். பளியஞ்சித்தின் என்கிற சித்து வேலைக்காரனும் அவனது மனைவியும் இந்தக் குகையில் வசித்ததாகவும் அந்த ஜமீன்தாரரின் பெருநோய் தீர இந்தக் குகையில் தங்கியதாகவும் வரலாறு. வருசநாட்டு மலைத் தொடர்ச்சி இந்த இடத்தில் தான் உள்ளது. ஆடி, தை அமாவாசை விசேஷம். சித்திரைப் பெருவிழா நடைபெறுகிறது.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் 6 மணி வரை
அருள்மிகு விருபாக்ஷி ஆறுமுக நாயனார் திருக்கோயில்
அருள்மிகு விருபாக்ஷி ஆறுமுக நாயனார் திருக்கோயில், தீர்த்தத்தொட்டி, கோடங்கிப்பட்டி, வழி போடி, ஆண்டிப்பட்டி வட்டம், மதுரை மாவட்டம். 625547.
தேனி போடி சாலையில் உள்ள தலம். குரங்கணியிலிருந்து வரும் கொட்டக்குடி ஆற்றின் அருகில் உள்ள தலம்.
இந்த கோயிலில் கல்லால் ஆன யாளியின் வாயினில் தண்ணீர் தன்னிச்சையாக கொட்டிக் கொண்டு உள்ளது. இதன் மேற் பெரிய முருகன் கோயில் உள்ளது. முருகர் உழவர் ஒருவனுக்குக் கனவில் தோன்றி தான் வயல்வெளியில் உள்ளதாகக் கூறினார். விருபாக்ஷி கிராமத்தில் கண்டெடுத்தக் கோயில் என்பதால் முருகனுக்கு இப்பெயர் இங்கு முருகன் வள்ளி தெய்வயானையுடன் ஆறுமுகன் காட்சி தருகிறார். கோயில் எதிரே தீர்த்தத் தொட்டி உள்ளது. நாக விக்னேஸ்வரர் உள்ளார். 7 தலை நாகத்துடன் அருகே நாக சுப்பிரமணியரும் உள்ளார். அவருக்கு அபிஷேகம் ஆன பின் தான் இந்த மூலவருக்கு நடைபெறும். ஐப்பசி அன்னாபிஷேகம் விசேஷம். வேலின் கூர் பகுதி சிதிலமடைந்து பழைய வேல் உள்ளது. குருவிற்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து பரிகாரம் தேடிக்கொள்ளப்படுகிறது.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் 8 மணி வரை
<< Previous  4  5  6 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar