Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>காஞ்சிபுரம் மாவட்டம்>காஞ்சிபுரம் சிவன் கோயில்
 
காஞ்சிபுரம் சிவன் கோயில் (498)
 
அருள்மிகு குமரக்கோட்டம் திருக்கோயில்
காஞ்சிபுரம்
ராஜவீதியில் இத்தலம் 2-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் ராஜகோபுரம் மற்றும் இரண்டு பிரகாரங்களுடன் மூலவர் தேவசேனாபதீச்சுரர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். காஞ்சியில் முருகனுக்குரிய தனித்தலமாகவும் விளங்குகிறது. பிரணவ மந்திரத்திற்குத் தவறாகப் பொருள் கூறிய பிரமனை முருகன் சிறையிலிட்டான். பிழைநீர் முருகப்பெருமான் தம்பெயரால் தேவசேனாபதீஸ்வரர் என ஒரு இலிங்கம் தாபித்துப் பூசை செய்து குமரக்கோட்டம் என்னும் ஆசிரமத்தில் வீற்றிருந்தான். அருணகிரிநாதர் திருப்புகழ் இத்தலத்திற்குண்டு, இராமலிங்க சுவாமி களுக்கு இத்தலத்தில் தனி சன்னிதி உள்ளது. இத்தலத்தில் முன்னாளில் அர்ச்சகராக இருந்த கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணம் பாடியது குறிப்பிடத்தக்க்தாகும். பாம்பன் சுவாமிகள் இத்தலத்து முருகனை வேண்டித் திருவருள் பெற்ற தலம், தினமும் 6 கால பூஜை.
அருள்மிகு சவுனகேசுரம் திருக்கோயில்
காஞ்சிபுரம்
பெரிய காஞ்சி ஒக்கப்பிறந்தான் குளத்தின் தென் கரையில் புத்தேரித் தெருவிற்குத் தெற்கில் உள்ள ஒரு சிறு தெருவின் மேற்க்கோடியில் இக்கோயில் உள்ளது. கிழக்கு நோக்கிய மூலவர் திருக்காஞ்சீஸ்வரர். சவுனக முனிவர் தமது பெயரால் ஒர் இலிங்கம் தாபித்து முறைப்படி பூசித்து மலநோய் நீங்கி வீடுபேற்றை அடைந்த தலம். இத்தலம் தற்போது திருக்காஞ்சீஸ்வரர் தலம் என்றே வழங்குகின்றனர். இத்தலத்தின் தென்கிழக்கு மூலையில் 15 அடி தூரத்தில் அரம்பேசுரர் தலம் உள்ளது.
அருள்மிகு சாந்தாலீஸ்வரர் திருக்கோயில்
காஞ்சிபுரம்
சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சிநம்பித் தெருவிற்கு வடக்காகவும் வேகவதி நதிக்கரையில் இக்கோயில் 2-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் கிழக்கு நோக்கிய மூலவர் சாந்திõலீஸ்வரர். அம்மன் திரிபுரசுந்தரியம்மன் சார்ந்தாசயம் எனப் புராணம் கூறும். வியாச முனிவர் நாராயணனே பரப்பிரமம் எனக் கூறிய சாபத்தைப் போக்குவதற்காக வேண்டி இத்தலத்தில் இலிங்கம் தாபித்து அருள் பெற்ற தலம்.
அருள்மிகு சிவாத்தானம் திருக்கோயில்
காஞ்சிபுரம்
சின்ன காஞ்சிபுரம் தேனம்பாக்கம் போகும் வழியில் வேகவதி நதிக்கரையில் இக்கோயில் உள்ளது. கிழக்கு நோக்கிய மூலவர் சுயம்புலிங்கமாக பிரம்மபுரீஸ்வரர். விமானம் - கஜபிருஷ்டம் தீர்த்தம் - பிரம தீர்த்தம். தலமரம் - முள் இல்லாத வில்வமரம். பிரமன் திருமாலோடு சேர்ந்து உலகத்தைப் படைக்கும் ஆற்றலைத் தனக்கு அருள வேண்டுமென இறைவனை வணங்கி அருள் பெற்ற தலம். மேலும் பிரமன் இறைவனிடம் எனது ஆத்தானமாகிய இதனை உமது ஆத்தனமாகக் கொண்டமையால் இத்தலம் சிவாத்தானம் என வழங்குதல் வேண்டுமென வரம் பெற்ற தலம்.
அருள்மிகு கரஹரேஸ்வரர் திருக்கோயில்
காஞ்சிபுரம்
பெரிய காஞ்சி ஏகாம்பரநாதர் சன்னதித் தெருவில் தென் கோடியில் உள்ளது. இக்கோயில் கிழக்கு நோக்கிய மூலவர் கரஹரேஸ்வரர். விமானம் பிரணவாகார விமானம், கருவறையில் நான்கு பக்கமும் கருங்கல்லினாலேயே ஜன்னல்கள் அமைத்துள்ளன. சுராக்கன் என்னும் அசுரனைச் சிவபெருமான் சங்காரம் செய்த தலம். தேவர்கள் பூசித்துத் தங்களுக்கிருந்த வெப்பு நோயைத் தீர்த்துக் கொண்ட தலமும் இதுவேயாகும். மாதவச்சிவஞான யோகிகள் பலவிதச் சித்திரக் கவிகள் அமைந்த படலத்தை இத்தலத்தில் பாடியுள்ளார்.
அருள்மிகு செவ்வந்தீசுரர் திருக்கோயில்
காஞ்சிபுரம்
பெரிய காஞ்சி சூலதீர்த்தக் கரையில் விவசாயப் பண்ணையின் நடுவில் உள்ளது இக்கோயில். மேற்கு நோக்கிய மூலவர் செவ்வந்தீஸ்வரர். தீர்த்தம் சூலதீர்த்தம். வாயுதேவன் சூலதீர்த்தக் கரையில் ஒர் இலிங்கம் அமைத்து செவ்வந்தி மலர்களால் வழிபட்டுக் கந்தவாகன் ஆகிய தலம் இதுவாகும்.
அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோயில்
காஞ்சிபுரம்
பிள்ளையார்பாளையத்தில் உள்ளது. இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சோளீஸ்வரர் என்னும் வைரவேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். தலமரம் முள் இல்லாத வில்வமரம். வயிரவர் ஐந்து முகமாக இருந்த பிரமனின் செருக்கை அடக்க ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார். அதனால் இறந்த பிரமன் இறைவன் அருளால் பிழைக்க இறைவனிடம் வாழ்நாள் தரும்படி துதித்து நான்முகனாய் இருந்து வாழவும் பிழையை மன்னிக்கும்படியும் வேண்டி வயிரவர் தம்பெயரால் ஒர் இலிங்கம் தாபித்துப் பூசித்துப் பல வரங்களைப் பெற்ற தலம். இத்தலத்தில் குருபைரவேஸ்வரர், விடுவச்சேனேஸ்வரர், அசிதாங்க பைரவேஸ்வரர், சம்மாபைரவேஸ்வரர், குரோதன பைரவேஸ்வரர், உன்மத்தபைரவேஸ்வரர், கபாலபைரவேஸ்ரர், பீஷணபைரவேஸ்வரர் என எட்டுத் தலங்கள் அமைந்துள்ளன.
அருள்மிகு தக்கீசம் திருக்கோயில்
காஞ்சிபுரம்
பிள்ளையார்பாளையம் கச்சியப்பன் தெருவில் உள்ளது.
இக்கோயில் மேற்கு நோக்கிய சன்னிதியில் மூலவர் தக்ஷேஸ்வரர். தக்கன் சிவபெருமானை நீக்கிவிட்டு வேள்வி தொடங்கினான். சிவகணங்கள் அவ்வேள்வியை அழித்தனர். பின் தக்கன் தான் செய்த பிழையை எண்ணி வருந்தி, காஞ்சியில் இத்தலத்தில் இலிங்கம் தாபித்துப் பூசித்து இறைவனால் அருளப் பெற்றுச் சிவகண நாதனாயினன், தக்கேசம் எனப் புராணம் குறிப்பிடுகிறது. பதிற்றுப் பத்தந்தாதி பாடல் ஒன்று முகப்பில் எழுதப்பட்டுள்ளது.
அருள்மிகு தான்தோன்றீச்சுரம் திருக்கோயில்
காஞ்சிபுரம்
உபமன்னியேசுரர் கோயில் என வழங்கும் இத்தலம் உப்பேரிக்குளத்தின் கீழ்கரையில் 20000 ச. அடி நிலப்பரப்பளவில், மூலவர் சுயம்புலிங்க வடிவில் தான்தோன்றீச்சுரர் என வழங்கப்படுகிறது. இறைவன் உபமன்னிய முனிவரின் அன்பைக் கண்டு, திருப்பாற்கடலைத் தந்து, மேலும் ஞானமும் மூப்படையாத இளமையும் கொடுத்த தலம் இதுவாகும்.
அருள்மிகு திரிகாலஞானேசுரம் திருக்கோயில்
காஞ்சிபுரம்
பெரிய காஞ்சி பேருந்து நிலையத்தில் உள்ளது.
இக்கோயில் மேற்கு நோக்கிய சன்னதியில் மூலவர் முக்கால ஞானேஸ்வரர். முனிவர்கள் சிலர் முக்கால உணர்ச்சியும் பெற வேண்டி ஓர் இலிங்கம் தாபித்து பூசிக்க அவர்களுக்கு அதனை அளித்த பெருமான் எழுந்தருளிய தலம் இதுவாகும்.
<< Previous  39  40  41  42  43  44  45  46  47  48  49  50  Next >> 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.