Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சிவகங்கை மாவட்டம்>சிவகங்கை சிவன் கோயில்
 
சிவகங்கை சிவன் கோயில் (100)
 
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில்
முறையூர், திருப்புத்தூர் வட்டம் சிவகங்கை மாவட்டம்
திருப்புத்தூர்க்கு மேற்கே 12 கி.மீ.
இக்கோயில் 36 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மீனாட்சியம்மை. நியாயம் தவறாது முறையாக இவ்வூரிஜர் தீர்ப்பு வழங்கியமையால் இவ்வூர் முறையூர் என வழங்கலாயிற்று.
அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
மாடவராயன்பட்டி, திருப்புத்தூர் வட்டம் சிவகங்கை மாவட்டம்
திருப்புத்தூர்க்கு மேற்கே 8 கி.மீ.
இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. நீலமேஸ்வரமுடையார் என்றும் பெயர்.
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
சிறாவயல், திருப்புத்தூர் வட்டம் சிவகங்கை மாவட்டம்
குன்றக்குடிக்கு மேற்கே 5 கி.மீ.
அம்மன திரிலோகநாயகி. இக்கோயில் 2000 வருட முற்பட்ட கோயில்.
அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில்
கம்பனூர், திருப்புத்தூர் வட்டம் சிவகங்கை மாவட்டம்
திருப்புத்தூரிலிருந்து தென்கிழக்கே 8 கி.மீ.
இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு கைலாசாநாதர் திருக்கோயில்
வேளியத்தூர், திருப்புத்தூர் வட்டம் சிவகங்கை மாவட்டம்
திருப்புத்தூரிலிருந்து தென்கிழக்கே 7 கி.மீ.
இக்கோயில் 22 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
பட்டமங்கலம் மேற்கு, திருப்புத்தூர் வட்டம் சிவகங்கை மாவட்டம்
திருப்புத்தூரிலிருந்து தெற்கே 4 கி.மீ.
இக்கோயில் 43 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மீனாட்சியம்மை. திருவாசகம் போற்றும் தலம்.
அருள்மிகு ஜெயம்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில்
நேமம், திருப்புத்தூர் வட்டம் சிவகங்கை மாவட்டம்
குன்றக்குடிக்கு வடக்கே 2 கி.மீ.
ஜெயங்கொண்டபுரம், குலசேகரபுரம், மதுநதிபுரம், இக்கோயில் 400 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 66 அடி உயரம் கொண்ட 5 நிலை ராஜகோபுரம், இரண்டு பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் சௌந்தரநாயகி, உள்பிரகாரத்தில் ஜெயங்கொண்ட விநாயகர், வில்லேந்திய முருகப்பெருமான், மேற்கு நோக்கிய வைரவர், விஸ்வநாதர், விசாலாட்சி, கஜலஷ்மி, துர்க்கை முதலிய சன்னிதிகள் உள்ளன. இத்தலப்பெருமானை அகத்தியர் வழிபட்டு அருள் பெற்ற தலம். சோழ மன்னருக்குப் பின்னர் பாண்டிய மன்னர் ஆட்சியில் காருண்யபாண்டிய மன்னன் இக்கோவிலை நகரத்தாருக்கு அளிக்கப்பட்டது என்பதை கல்வெட்டுக்கள் கூறுகின்றன. நகரத்தாரின் ஒன்பது கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். நாள்தோறும் 7 கால பூஜை. ஆடித்திங்கள் பதினெட்டாம் நாளில் உற்சவம் நடைபெறுகிறது
அருள்மிகு வனமகாதேவர் திருக்கோயில்
வடவான்பட்டி, திருப்புத்தூர் வட்டம் சிவகங்கை மாவட்டம்
திருப்புத்தூரிலிருந்து தென்மேற்கே 21 கி.மீ.
இக்கோயில் 9 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்
ஏரியூர், திருப்புத்தூர் வட்டம் சிவகங்கை மாவட்டம்
திருப்புத்தூரிலிருந்து தென்மேற்கே 12 கி.மீ. இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. உப்பாற்றங்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. குன்றின் மீது கோயில் உள்ளது
அருள்மிகு கரும்பேஸ்வரர் திருக்கோயில்
பட்டமங்கலம் கிழக்கு, திருப்புத்தூர் வட்டம் சிவகங்கை மாவட்டம்
திருப்புத்தூரிலிருந்து தெற்கே 8 கி.மீ.
இக்கோயில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பகுதி அடைக்கலம் காத்தநாடு எனப்படும்.
<< Previous  7  8  9  10  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar