Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>தேனி மாவட்டம்>தேனி சிவன் கோயில்
 
தேனி சிவன் கோயில் (61)
 
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில்
ஜெயமங்கலம், பெரியகுளம் வட்டம் தேனி மாவட்டம்
பெரியகுளத்திலிருந்து கிழக்கே 8 கி.மீ.
இக்கோயில் 41 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மீனாட்சியம்மை.
அருள்மிகு திருநீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
குல்லாபுரம், பெரியகுளம் வட்டம் தேனி மாவட்டம்
பெரியகுளத்திலிருந்து தென்கிழக்கே 14 கி.மீ.
வைகையாற்றின் வடகரையில் இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார்.
அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
உப்பார்பட்டி, பெரியகுளம் வட்டம் தேனி மாவட்டம்
தேனியிலிருந்து தென்மேற்கே 11 கி.மீ.
சுருளியாற்றின் கரையில் இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு மல்லிகார்சுனேஸ்வரர் திருக்கோயில்
கோட்டூர், பெரியகுளம் வட்டம் தேனி மாவட்டம்
வீரபாண்டியிலிருந்து தெனமேற்கே 8 கி.மீ. கேட்டையூர்.
சுருளியாற்றின் கரையில் இக்கோயில் 7 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு மல்லிகார்சுனேஸ்வரர் திருக்கோயில்
சீலயான்பட்டி, பெரியகுளம் வட்டம் தேனி மாவட்டம்
வீரபாண்டியிலிருந்து தென்மேற்கே 11 கி.மீ.
சுருளியாற்றின் கரையில் இக்கோயில் 6 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அருகில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் வேணுகோபால சுவாமி கோயிலும் உள்ளது.
அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில்
உத்தமபாளையம் தேனி மாவட்டம்
தேனியிலிருந்து தென்மேற்கே 31 கி.மீ.
சுருளியாற்றின் கரையில் இக்கோயில் 2-50 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில்
சின்னமனூர், <உத்தமபாளையம் வட்டம் தேனி மாவட்டம்
உத்தமாபளையத்திலிருந்து வடகிழக்கே 7 கி.மீ.
சுருளியாற்றின் கரைப்பகுதியில் இக்கோயில் கோபுரம் இரண்டு பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் சிவகாமியம்மை. உள்பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, பைரவர், லிங்கோத்பவர், காளீஸ்வரி, நவக்கிரகம், 63 நாயன்மார்கள் முதலிய சன்னிதிகள் உள்ளன, திருமால், பிரம்மன், ருத்திரன் மற்றும் இந்திரன் வழிபட்டமையால் இத்தலத்தீற்கு ஹரிகேசவநல்லூர் எனறு பெயர். மாணிக்கவாசகர் இத்தல இறைவனை வழிபட்டு அருள்பெற்ற தலம். கல்வெட்டுக்களும் செப்பு பட்டையங்களும் உள்ளன. மூன்றாம் இராஜசிம்மவர்மன், இரா÷ஜந்திரசோழ தேவர், இரண்டாம் இராஜசிம்மன் கால குறிப்புகள் உள்ளன.
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
கம்பம், உத்தமபாளையம் வட்டம் தேனி மாவட்டம்
உத்தமபாளையத்திலிருந்து தென்மேற்கே 10 கி.மீ.
இக்கோயில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் விசாலாட்சி அருகில் கம்பராய பெருமாள்,சாரங்கநாதர் பெருமாள் கோயிலும் உள்ளன. சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் உள்ள கல்வெட்டு பாண்டிய மன்னன் ஜடவர்மன் காலத்தியது ஆனியில் பிர÷மாற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்
தேவாரம், உத்தமபாளையம் வட்டம் தேனி மாவட்டம்
உத்தமபாளையத்திலிருந்து வடமேற்கே 14 கி.மீ.
இக்கோயில் 57 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் இராமலிங்க சௌடேஸ்வரியம்மன் உள்பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், வீரபத்திரர், பைரவர், நவக்கிரகம் முதலிய சன்னதிகள் உள்ளன.
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில்
சுருளிமலை, உத்தமபாளையம் வட்டம் தேனி மாவட்டம்
கம்பத்திலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ.
சுருளி நதியின் மேற்குக் கரையில் கோயில் அமைந்த பகுதி கைலாசப் படவு. இத்தல சிவபெருமான் மகாதேவர், அம்மன் கன்னிகாபரமேஸ்வரி. இக்கோயில் இயற்கையான குகையில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் ஆண்டிக்கோலத்தில் சுருளியாண்டி, சுருளிவேல் என்னும் பெயர்களில் அழைக்கப்படுகிறார். உள்சன்னிதியில் சிவலிங்கம், சந்தான்கிருஷ்ணன், வீரபாகுத் தேவர் முதலியோர் உள்ளனர். தேவர்கள் சனிபகவானின் கொடுமையிலிருந்து விடுபட இத்தல முருகப் பெருமானை வணங்கிய தலம். வள்ளி திருமணத்திற்காக நம்பிராஜன் முருகப் பெருமானுக்குச் சீதனமாகக் கொடுத்த தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். இங்கு ஒரு ஆள் மட்டுமே தவழ்ந்து செல்லும் வகையில் குகை ஒன்று உள்ளது அதில் பிருங்கி முனிவர் பூசித்த சிவலிங்கம் உள்ளது. ஆலயத்தின் கிழக்கே சப்தகன்னியர் சுனை உள்ளது. சுருளி தீர்த்தத்தில் நீராடினால் தீராத நோய்களும் தீரும். ஆடி அமாவாசை சிறப்பானதாகும். இம்மலையின் அடிவாரத்தில் சிவபெருமானும். வீரநாராயணப் பெருமாளும் காட்சியளிக்கின்றனர்.
<< Previous  4  5  6  7  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar