Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கைலாசநாதர்
  அம்மன்/தாயார்: சவுந்தர நாயகி
  ஊர்: ராஜபதி
  மாவட்டம்: தூத்துக்குடி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  திருவாதிரை, சிவராத்திரி, பிரதோஷம், மாதபிறப்பு  
     
 தல சிறப்பு:
     
  இத்தலம் நவகைலாயங்களில் கேது தலமாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  ஜோதி குருக்கள், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராஜபதி-628 207, தூத்துக்குடி மாவட்டம்.  
   
போன்:
   
  +91 99420 62825, 98422 63681, 94863 81956 
    
 பொது தகவல்:
     
  இங்கு விநாயகர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சிவலிங்கம், நடராஜர், சிவகாமி, தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் முருகன் முதலான தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
  ஜாதகரீதியாக கேது தோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஞானகாரகனான கேதுவின் அம்சமாக இத்தலத்தில் சிவன் அருளுவதால் இவரிடம் வேண்டிக்கொள்ள அறிவான குழந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை. விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் ஆரோக்கியத்துடன் வாழவும், திருமணத்தடை, கவலை, சர்ப்பதோஷம், குழந்தை பேறு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள், தொழில்வளத்தில் முன்னேற்றம் கிடைக்கவும் இங்கு வழிபாடு செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இந்த சிவனுக்கு பலவர்ண வஸ்திரம் சாத்தி, கொள்ளு, விளைபொருட்கள், பழங்களை காணிக்கையாக செலுத்தியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  நவ கைலாயத்தில் இது கேது வணங்கிய ஸ்தலம். இக்கோயில் இருக்கும் இடத்தில் ஒழுங்கற்ற வடிவில் ஒரு லிங்கம் மட்டுமே இருக்கிறது. இங்குள்ளலிங்கத்தின் நான்கு புறங்களிலும் 4 சக்கர வடிவங்கள் இருக்கிறது. லிங்கத்திற்கு கீழே புதைந்து போன கோயில் இருப்பதாக சொல்கிறார்கள். ஒருவருடைய ஆயுள்காலத்தில் கேதுதசை ஏழு ஆண்டுகள் நடக்கும். இந்த தசை காலத்தில் இந்தக் கோயிலுக்குச் செல்வது மிக மிக சிறப்பானது. விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் ஆரோக்கியத்துடன் சிறந்த வருமானத்தை தரவும் கைலாசநாதரிடம் வேண்டிக் கொள்ளலாம். கோரிக்கை நிறைவேறினால், சுவாமி, அம்பாளுக்கு விளைபொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். கால்நடைகள் நோய் நொடியின்றி இருக்க நந்திகேசுவரருக்கு பிரதோஷத்தன்று திரவிய பொருட்கள் மற்றும் பழங்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

கேது பரிகார பூஜை:
ஞாயிறு பகல் 12 -1.30 மணிவரையிலும், செவ்வாய் காலை 9-10.30 மணி வரையிலும் கேது பரிகார பூஜை நடக்கிறது. அப்போது யாகம் நடக்கிறது. இதில் பங்கேற்பதன் மூலம் கிரக தோஷங்கள் நீங்குவதுடன், திருமணத்தடை, கவலை, சர்ப்பதோஷம் ஆகியவற்றுக்கு நிவாரணம் கிடைக்கிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஆஸ்துமா  உள்ளவர்கள் இந்த யாகத்தில் பங்கேற்றால் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர். குழந்தை பேறு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள், தொழில்வளத்தில் முன்னேற்றம் கிடைக்கிறது.

தென்காளஹஸ்தி:
காளஹஸ்தி கோயில் கோபுரம் சேதமடைந்த நாள் அன்று ராஜபதி கோயில் கும்பாபிஷேகத்துக்கான முதல்கால பூஜை துவங்கியது. இதனால் ராஜபதியை தென் காளஹஸ்தி என்று அழைக்கின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்திற்கு இணையான கேது தலமாக திகழ்கிறது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் சவுந்தர்ய நாயகி, ஆதிகைலாசநாதர் ஆகியோர் இங்கு அருள்பாலிக்கின்றனர்.
 
     
  தல வரலாறு:
     
  பொதிகை மலையில் தவம் செய்து வந்த அகத்திய முனிவரின், முதல் சீடரான உரோமச முனிவர், பிறவாவரம் பெற தன் குருவிடம் யோசனை கேட்டார். நான் உருவாக்கிய தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை தண்ணீரில் விடு. இவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ, அவ்விடத்தில் சிவலிங்க பூஜை செய். நீ வழிபடும் சிவலிங்கம் கைலாசநாதர் என்று பெயர் பெறும். இதைச் செய்தால் பிறவா நிலை அடையலாம், என்றார். உரோமச முனிவரும் அவ்வாறே செய்ய எட்டாவது மலர் ராஜபதியில் ஒதுங்கியது. அங்கு சிவலிங்கத்தை வைத்து பூஜித்தார். மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இப்பகுதியில் இருந்ததால், இவ்வூர் ராஜபதி எனப்பட்டது. இந்த லிங்கம் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு கோயிலும் இருந்தது. 416 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் வெள்ளப் பெருக்கில் மூழ்கி அழிந்தது.  தற்போது சிவனடியார்களின் முயற்சியால் புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: நவகைலாயங்களில் இது கேதுவுக்குரிய தலமாகும்.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.