Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு வேணுகோபால கிருஷ்ணன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English
அருள்மிகு வேணுகோபால கிருஷ்ணன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வேணுகோபால கிருஷ்ணன்
  ஊர்: பீம நகர்
  மாவட்டம்: திருச்சி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, நவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  அண்ணன் கிருஷ்ணர், தங்கை காளி இருவரும் ஒரே தலத்தில், சம அந்தஸ்த்தில் வணங்கப்படுவது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வேணுகோபால கிருஷ்ணன் திருக்கோயில் ஹீபர் ரோடு, பீம நகர் திருச்சி மாவட்டம்.  
   
    
 பொது தகவல்:
     
  இங்கு ராஜகணபதி, வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார ஸ்வாமி, விஷ்ணு துர்கை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை பாக்கியம் கிடைக்க, வியாபாரம் செழிக்க,  மனவளர்ச்சி குன்றியவர்கள் குணமாக என பக்தர்கள் இங்குள்ள கிருஷ்ணரை வழிபட்டுச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  கிருஷ்ணருக்கு வெண்ணெய் அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  ஸ்ரீகிருஷ்ணனின் சாந்நித்தியத்தை அறிந்து சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்கள் மட்டுமின்றி, இலங்கையில் இருந்தும்கூட பக்தர்கள் வந்து, ஸ்வாமியைத் தரிசித்துச் செல்கின்றனர். குழந்தை கண்ணனுக்கு பால் பாயசம் என்றால் கொள்ளைப் பிரியம். எனவே, குழந்தை பாக்கியம் வேண்டுவோரும், வியாபாரம் சிறக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்வோரும் பால் பாயசம் நைவேத்தியம் செய்து, ஸ்ரீகிருஷ்ணரைத் தரிசித்தால், நம் வாழ்க்கையையே இனிக்கச் செய்வான் ஸ்ரீகண்ணன் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள். மாதந்தோறும் ரோகிணி நட்சத்திர நாளில், வேணுகோபால கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டு, வெண்ணெய் அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், மனவளர்ச்சி குன்றியவர்கள், விரைவில் நலம் பெறுவார்கள்; பூரண குணம் பெறுவார்கள் என்பது திருச்சி வாழ் மக்களின் நம்பிக்கை. இங்கு, ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி திருநாள், மூன்று நாள் விழாவாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் சிறப்பு ஹோமங்கள், உறியடி உத்ஸவம், புஷ்பாஞ்சலி என அமர்க்களப்படும்.  
     
  தல வரலாறு:
     
  இப்போது கோயில் உள்ள பகுதி, ஆங்கிலேயர் காலத்தில் பட்டாலியன்களின் மிகப் பெரிய முகாமாக இருந்ததாம். அந்த இடத்தில் சுயம்புமூர்த்தமாகத் தோன்றி, அருட்காட்சி தந்தாள் காளிதேவி. எனவே, அந்த இடத்தில் காளியம்மன் கோயில் உருவானது. பின்னாளில், இந்தப் பகுதியில் உள்ள யாதவ மக்களில் ஒருவர், எங்களின் குலதெய்வம், இஷ்ட தெய்வம் எல்லாமே எங்களுக்கு ஸ்ரீகிருஷ்ணர்தான். எனவே, இந்தக் கோயிலில் கண்ணபரமாத்மாவுக்கு சன்னதி அமைத்து வழிபட விரும்புகிறோம் எனத் தெரிவிக்க, காளிதேவியும் சம்மதித்தாள். அதையடுத்து, கையில் புல்லாங்குழலும் அருகில் பசுமாடுமாக, அழகு கொஞ்சும் வேணுகோபால கிருஷ்ணரின் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள். காலப்போக்கில், காளியம்மன் கோயில் என்று சொல்வது மாறி, தற்போது ஸ்ரீகிருஷ்ணன் கோயில் என்றழைக்கும் அளவுக்கு, அனைவருக்கும் கேட்ட வரங்களை தந்தருளிக் கொண்டிருக்கிறார் வேணுகோபால கிருஷ்ணன்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: அண்ணன் கிருஷ்ணர், தங்கை காளி இருவரும் ஒரே தலத்தில், சம அந்தஸ்த்தில் வணங்கப்படுவது சிறப்பு.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.