Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பசுபதிநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பசுபதிநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பசுபதிநாதர்
  ஊர்: சினோலி, காட்மாண்டு
  மாவட்டம்: நேபாளம்
  மாநிலம்: மற்றவை
 
பாடியவர்கள்:
     
 

-


 
     
 திருவிழா:
     
  பிரதோஷம், சிவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  நான்கு திசைகளுக்கு நான்கு முகங்களும், உச்சியில் ஒன்றும் ஆக ஐந்து முகங்கள் அமைந்த சதாசிவமாக இங்கு சிவன் அருள் செய்கிறார். தென்னிந்திய ஆலயங்களில் உள்ளது போன்று, கர்ப்பகிரகம் இங்கு இல்லை. சிவனுக்கு எதிரில் பித்தளையால் செய்யப்பட்ட மிகப்பெரிய நந்திசிலை அமைந்துள்ளது. தமிழக கோயில்களில் உலோகத்தால் ஆன நந்தி சிலையைக் காண்பது அரிது. இந்த சிவபெருமானுக்கு தமிழர்கள் தான் பூஜை செய்கின்றனர் என்பது மற்றொரு சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பசுபதிநாதர் திருக்கோயில் சினோலி, காட்மாண்டு, நேபாளம்  
   
    
 பொது தகவல்:
     
  பசுபதி நாதர் கோயிலின் இடப்புறம் 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அதை வலம் வருவதற்காக அழகான வழிப்பாதையும் அமைந்துள்ளனர்.  
     
 
பிரார்த்தனை
    
  இங்கு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இறந்தவரின் அஸ்தியை இங்குள்ள பாசுமதி நதியில் கரைத்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

நான்கு திசைகளுக்கு நான்கு முகங்களும், உச்சியில் ஒன்றும் ஆக ஐந்து முகங்கள் அமைந்த சதாசிவமாக இங்கு சிவன் அருள் செய்கிறார். பாசுமதி நதிக்கரையில் கோயில் அமைந்துள்ளது. சிவனின் நான்கு முகங்களுக்கு எதிரேயும் தனித்தனியாக நான்கு கதவுகள் கொண்ட நுழைவாயில் உள்ளது. ஒவ்வொன்றின் அருகிலும் பூஜை செய்யும் பண்டாக்கள் உள்ளனர். ஒரே சமயத்தில் நால்வரும் பக்தர்களுக்கான பூஜைகளை தனித்தனியாக செய்து தருகின்றனர். ஆலயத்தை வலம் வரும் வழியில் பக்தர்கள் ருத்ர ஜப பாராயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். பசுபதிநாதர் கோயிலின் பின்புறமாக சென்றால் பாசுமதி நதியை தரிசனம் செய்யலாம். இறங்கி நீராடுவதற்காக படிக்கட்டுகள் வசதியாக அமைந்துள்ளன. மற்றொரு புறம் படிக்கட்டின் மேலேயே, இறந்தவர்களின் உடலை தகனம் செய்து ஓடும் ஆற்று நீரில் அஸ்தியை தள்ளிவிடுகின்றனர். காசியில் கங்கை கரையில் உள்ள மணிகர்ணிகா கட்டத்தில் நடைபெறும் இறுதி யாத்திரை காரியங்கள் போன்று இங்கும் நடக்கிறது.


கயிலை மலையில் உறையும் சிவபெருமான் ஐப்பசி மாதத்தில் பனிமலையில் இருந்து வந்து மகா சிவராத்திரி காலம் வரை பசுபதிநாதர் கருவறையில் தங்கி அருள்பாலிப்பதாக ஐதீகம். திபெத் நாட்டின் வழியாக சீனாவின் எல்லையில் அமைந்துள்ள கயிலைமலைக்கு செல்வதற்கு காட்மாண்டு நுழைவாயிலாக உள்ளது. பசுபதிநாதர் கோயிலின் அருகில் அமைந்துள்ளது புத்தநீல கண்ட ஆலயம். இங்கு திருமால் பாம்பு படுக்கையில் சங்கு சக்ரதாரியாக, சயனநிலையில் புத்தநீல கண்ட் என்ற திருநாமத்துடன் காட்சி தருகிறார், படுக்கையின் கீழே ஒரு தடாகம் நீர்வற்றாத நிலையில் உள்ளது. பூஜை செய்து தர பண்டாக்கள் உள்ளனர்.


 
     
  தல வரலாறு:
     
  ஒரு விவசாயியின் கனவில் இந்த தெய்வம் தோன்றி, தான் இன்ன இடத்தில், பூமியின் அடியில் உள்ளதாகவும், இந்த இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று சொன்னதின் பேரில் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு, பூமியை தோண்டி சிலையை எடுத்துவந்து இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர். கருங்கல்லால் ஆன புத்தநீலகண்ட் சுவாமி ஆறடிக்கு மேல் நீளமுடையதாக கம்பீரமாக காட்சி அளிக்கிறார். கயிலைமலை செல்ல இயலாதவர் பசுபதிநாதரை தரிசனம் செய்தால், கயிலைநாதனை தரிசனம் செய்த பலன் உண்டாகும்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: நான்கு திசைகளுக்கு நான்கு முகங்களும், உச்சியில் ஒன்றும் ஆக ஐந்து முகங்கள் அமைந்த சதாசிவமாக இங்கு சிவன் அருள் செய்கிறார். தென்னிந்திய ஆலயங்களில் உள்ளது போன்று, கர்ப்பகிரகம் இங்கு இல்லை. சிவனுக்கு எதிரில் பித்தளையால் செய்யப்பட்ட மிகப்பெரிய நந்திசிலை அமைந்துள்ளது. தமிழக கோயில்களில் உலோகத்தால் ஆன நந்தி சிலையைக் காண்பது அரிது. இந்த சிவபெருமானுக்கு தமிழர்கள் தான் பூஜை செய்கின்றனர் என்பது மற்றொரு சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar