Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு சப்தகன்னியர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English
அருள்மிகு சப்தகன்னியர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சப்தகன்னியர்
  ஊர்: பெட்டைக்குளம்
  மாவட்டம்: திருநெல்வேலி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஊர் திருவிழா  
     
 தல சிறப்பு:
     
  இங்கு சப்தகன்னியர் மூலவராக அருள்பாலிப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் மணி 10 வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சப்தகன்னியர் திருக்கோயில், பெட்டைக்குளம், எழுவரைமுக்கி,திருநெல்வேலி.  
   
    
 பொது தகவல்:
     
  பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்தமாதர்கள் முறையே பிரம்மன், மகேசன், குமரன், விஷ்ணு, வராஹமூர்த்தி, இந்திரன், ருத்ரன் ஆகிய தெய்வங்களின் பெண் அம்சங்கள் ஆவர்.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தொழிலில் மிகச் சிறந்த முன்னேற்றம் காணவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்குள்ள சப்தகன்னியரை பிரார்த்தனை செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள சப்தகன்னியருக்கு பச்சை அரிசியில் சர்க்கரைப் பொங்கல் வைத்து நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  எழுவரைமுக்கி கிராமத்தில் சப்தகன்னியர் எழுவருடன், அய்யனார் மற்றும் முத்துப்பார்வதி அம்மன் ஆகியோரையும் சேர்த்து 9 தெய்வங்களைத் தரிசிக்கலாம்! அய்யனார் இந்த ஊரின் காவல் தெய்வமாகத் திகழ்கிறார். பொதுவில் எல்லை தெய்வமாக நாமறியும் அய்யனார் குறித்து, வித்தியாசமான ஒரு தகவலைச் சொல்கிறார்கள் இந்த ஊரைச் சேர்ந்த பக்தர்கள். நதிகளை உரிய பருவத்தில் உருவாக்கி அவற்றை சரியான பாதையில் வழி நடத்தி உலகிற்கு நன்மை செய்பவன் வருணன். அதனால் வருணனை மலைகளின் தெய்வம் என்றே வேதங்கள் குறிப்பிடப்படுகின்றன. அத்ரி என்றால் மலை என்று பொருள். அத்ரிவன் என்பது வருணனின் ஒரு பெயராகும். வருணன் சட்டங்களின், தர்மத்தின் தலைவன் ஆவான். எனவேதான் தர்மசாஸ்தா என்று அவனைக் குறிப்பிடுவர். புறநானூறும் அறப்பெயர்ச் சாத்தன் எனச் சிறப்பிக்கிறது என்கிறார்கள். தங்கள் ஊரின் காவல் தெய்வத்தை இயற்கையோடு பொருத்தி, ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அவர்கள் கூறும் தகவல், வியப்பில் ஆழ்த்துகிறது! அதேபோன்று இவ்வூரில் அருளும் முத்து பார்வதியம்மனும் வரம் வாரி வழங்கும் கருணை நாயகி என விளக்குகிறார்கள்.  
     
  தல வரலாறு:
     
  இயற்கை வளம் கொழிக்கும் அந்த கிராமத்தில், கன்னிப் பெண்கள் ஏழுபேர் ஊருணியில் நீராடச் சென்றார்கள். விட்டு விட்டுப் பெய்த சாரலும், அதன் குளிர் கலந்து வீசிய தென்றலும், அவ்வப்போது மேகத்திரை விலக்கி எட்டிப் பார்க்கும் சூரியனின் இளம் மஞ்சள் வெயிலும் சங்கமித்திருந்த அந்தச் சூழல்.. சீக்கிரம் கரையேர விடாமல் அவர்களை தடுத்துவிட்டிருந்தது. ஏழு பெண்களும் நேரம் போவதே தெரியாமல் குளித்துக் கொண்டிருந்தார்கள்! அப்போது ஆடு-மாடு மேய்க்கும் இளைஞன் ஒருவன் அவ்வழியே வந்தான். பாண்டியதேசத்து இளைஞர்களுக் கென்றே சற்றே உரிமையும் நேசமும் கலந்த குறும்பு உண்டு. அந்த இளைஞனும் விளையாட்டாக ஒரு காரியம் செய்தான். குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகள் மொத்தமும் கரையில் இருக்க, அதை மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டான். இதைப் பார்த்துவிட்ட பெண்கள் எழுவரும், ஆடைகளைக் கொடுத்துவிடும்படி எவ்வளவோ கெஞ்சியும் அவன் கேட்கவில்லை. போயேபோய் விட்டான்! பெண்கள் கலங்கினார்கள். அப்படியே எப்படிக் கரையேறுவது? எழுவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவர்களாக ஊருணிக்குள் மூழ்கினார்கள். அதன் பின் அவர்கள் எழுந்திருக்கவே இல்லை. ஆமாம்... ஊருணிக்குள் மூழ்கி, அதில் கலக்கும் நீரோடையின் வழியே, அருகில் இருக்கும் வனப்பகுதிக்குச் சென்றவர்கள், அங்கேயே தெய்வமாக எழுந்தருளினார்களாம். இங்கே ஊருக்குள் பெண்களைக் காணாமல் பெற்றோர்கள் தேட, ஊர் பூசாரிக்கு காட்சி தந்து வனப்பகுதியில் தெய்வமாய் தாங்கள் எழுந்தருளியிருக்கும் விஷயத்தைச் சொல்லி, எங்களை வழிபட்டால், இந்த ஊரை இன்னும் வளமாக்குவோம் என்று அருள்புரிந்தார்களாம். அந்தக் கிராமமும் எழுவரைமுக்கி எனப் பெயர் கொண்டது!  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சப்தகன்னியர் மூலவராக அருள்பாலிப்பது சிறப்பு.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.