Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கைலாசநாதர்
  அம்மன்/தாயார்: காமாட்சி
  ஊர்: திருமூலஸ்தானம்
  மாவட்டம்: கடலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷம், சிவராத்திரி.  
     
 தல சிறப்பு:
     
  கைலாசநாதர் மீது சித்திரை முதல் வாரத்தில் சூரிய ஒளி விழுவது தலத்தின் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் திருமூலஸ்தானம், காட்டுமன்னார்கோயில் கடலூர்.  
   
போன்:
   
  +91 4144 267 664 
    
 பொது தகவல்:
     
  கி.பி., 710ல் நுசசோழன் என்பவன் இக்கோயிலைக் கட்டினான். முற்கால சோழர்களின் கட்டடக் கலைக்கு சான்றாக உள்ளது. வழுவழுப்பான சிற்பங்கள் கண்ணைக் கவர்கின்றன. திகழ்கின்றன.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் வழிபட்டுச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கும், அம்மனுக்கும் புது அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

செங்கல் கட்டுமானம்: பொதுவாக கல்தூண்களை பயன்படுத்தியே கோயில்களை கட்டியுள்ளனர். ஆனால், திருமூலஸ்தானத்தில் சற்று வித்தியாசமான முறையில், ஆஸ்தான மண்டபம் சிறிய அளவிலான செங்கற்களால் குகை வடிவில் கட்டப்பட்டுள்ளது. ஆர்ச் வடிவில் அமைக்கப்பட்ட கோயிலின் மேற்பகுதியிலுள்ள செங்கற்களில் காரை பெயர்ந்து கிடக்கிறது. சிற்பக் கலைக்கும், கட்டடக்கலைக்கும் எடுத்துக்காட்டான இந்த வித்தியாசமான கோயில் சிதிலம்அடைந்துள்ளதால் வழிபாடுகள் சரிவர நடக்கவில்லை.


கல்வெட்டுகளும், வரலாறும்: கோயில் கருவறையின் வெளிப்புறச் சுவர்களை சுற்றி கிரந்த எழுத்துக்களால் ஆன கல்வெட்டுகள் உள்ளன. கோயில் பராமரிப்புக்காக பலராலும் பலகாலங்களில் நன்கொடையாக அளிக்கப் பட்டுள்ள விபரம் இதில் காணப்படுகிறது.


அகத்தியர் புடைப்புச்சிற்பம்: முப்பெரும் தேவியர்களான, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் உலக இன்னல்களைத் தீர்க்க இங்கு உள்ள கைலாசநாதரை வழிபட்டு உள்ளனர். அகத்தியர் சிவனை வணங்குவது போன்றதொரு பெரிய புடைப்புச்சிற்பமும் காணப்படுகிறது. வெளிப்பிரகாரத்தில் அகத்தியர் சிவனை பூஜிப்பது போன்று உள்ள சந்நிதியில் தினமும் பூஜை நடந்து வருகிறது. கோயில் வளாகம் முழுவதும் பார்த்தீனியம் செடிகளும், முள்புதர்களுமாக காணப்படுகிறது. சுவாமி சிலைகளின் பீடங்கள், கல் தூண்கள், கோயில் மரக்கதவுகள், சுவர்கள் உட்பட அனைத்துப் பகுதிகளும் சேதமடைந்து காணப்படுகிறது. கொடிமரம், வாகன மண்டபங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் மட்டுமே காணப்படுகிறது. கலசங்கள் இல்லாமல் விமானங்களும் மொட்டையாக காணப்படுகிறது. ஊர் பொதுமக்கள் இணைந்து ஒரு கால பூஜை மட்டும் நடத்தி வருகின்றனர். இந்த கோயிலைப் புதுப்பிக்க தமிழக பக்தர்கள் முன்வந்தால் மிகப் பெரிய கலைக்கூடம் காப்பாற்றப்படும்.


 
     
  தல வரலாறு:
     
  சிவபார்வதி திருமணம் காண உலக உயிர்கள் அனைத்தும் இமயத்தில் குவிந்தனர். இதனால் பூமியின் வடபகுதி தாழ்ந்து தென் பகுதி உயர்ந்தது. இறைவன் குறுமுனிவரான அகத்தியரை அழைத்து, பூலோகத்தை சமநிலைப்படுத்த வேண்டினார். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற பொதிகைக்கு அகத்தியர் சென்றார். வரும் வழியில் பல சிவலிங்கங்களை ஸ்தாபித்து வழிபட்டார். அவ்வாறு வழிபட்ட லிங்கமே திருமூலஸ்தானம் கைலாசநாதர். பிற்காலத்தில், இங்கு கோயில் எழுப்பப்பட்டது. சிவலிங்கத்தை அகத்தியர் வழிபடும் சன்னதி இங்கு உள்ளது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கைலாசநாதர் மீது சித்திரை முதல் வாரத்தில் சூரிய ஒளி விழுவது தலத்தின் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar