Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வரதராஜப் பெருமாள்
  அம்மன்/தாயார்: பெருந்தேவி தாயார்
  தல விருட்சம்: பலாமரம்
  தீர்த்தம்: கெடிலம் நதி
  ஆகமம்/பூஜை : பாஞ்சாத்ர ஆகமம்
  புராண பெயர்: கடைஞாழல், கூடலூர் புதுநகரம்
  ஊர்: திருப்பாதிரிப்புலியூர்
  மாவட்டம்: கடலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  அனுமன் ஜெயந்தி, ராமநவமி, கருட ஜெயந்தி, நவராத்திரி, மாசிமகம், மார்கழி மாத திருப்பாவை சொற்பொழிவு, ஆனி மாத பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், புரட்டாசி மாத உற்சவம்.  
     
 தல சிறப்பு:
     
  திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளின் அபிமான தலமாக உள்ளது. வடக்கு திசை நோக்கி உள்ள, ராமர் சன்னதியை, எதிர்கொண்டு அனுமன் சன்னதி இருப்பது சிறப்பு. ஆடி மாத சுவாதி நட்சத்திரத் தினத்தன்று கருடாழ்வாருக்கு திருநட்சத்திர நாள் (அவதார நாள்) கொண்டாடப்படும். அன்றைய தினம் இங்கு மட்டுமே கருடாழ்வாருக்கு ஹோமம் நடத்துவது விசேஷமாகும். பரமபத வாசல் வடக்கு நோக்கி இருப்பது மற்றொரு சிறப்பாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  வரதராஜப் பெருமாள் கோயில், சஞ்சீவிநாயுடு வீதி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் - 607002.  
   
போன்:
   
  +91 4142 - 223150, 94430 74879 
    
 பொது தகவல்:
     
  கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. ஒரு நிலை கோபுரம் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இங்கு, ஆஞ்சநேயர், ராமர், கருடாழ்வார், ஆண்டாள் நாச்சியார், பெருந்தேவி தாயார், மணவாள மாமுனிகள், விஷ்ணு, துர்கை சன்னதிகள் உள்ளன. ஆண்டுதோறும் வைணவ மாநாடு நடத்தப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, இங்கு, தினமும் அன்னதானத் திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.  
     
 
பிரார்த்தனை
    
  சகல தோஷங்களும் நிறைவேற பக்தர்கள் இங்குள்ள இறைவனை மனதார பிரார்த்தனை செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பெருமாளுக்கு திருக்கல்யாணம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இக்கோயிலில் பெருமாள் கிழக்கு நோக்கி திருமுக மண்டலத்துடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். மாசிமக உற்சவத்தின் போது, திருக்கோவிலுர் உலகளந்த பெருமாள், கடலூர், தேவனாம்பட்டினம் கடற்கரையில் தீர்த்தவாரி காண எழுந்தருள்வார். அப்போது, உலகளந்த பெருமாள், இக்கோயிலுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். மாசிமக தீர்த்தவாரி முடிந்து மறுநாள், உலகளந்த பெருமாள் தங்க கருட வாகனத்திலும், வரதராஜப் பெருமாள் சேஷ வாகனத்திலும் சேர்ந்து வீதியுலா நடப்பது கண்கொள்ளா காட்சி. கோயிலுக்குள் நுழைந்ததுமே ஓங்கி உயர்ந்த கொடிமரமும், பலிபீடமும் நம்மை வரவேற்கின்றன. பெருமாளுக்கு எதிர் சேவையாக கைகள் கூப்பிய நிலையில், கருடாழ்வார் சன்னதி உள்ளது. கருடநதி எனப்படும் கெடிலம் நதிக்கு அருகில், கோயில் இருப்பது சிறப்பாகும்.  
     
  தல வரலாறு:
     
  காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயிலைப்போலவே, பெருந்தேவி தாயாருடன் இங்கு கோயில் கட்டி வழிபாடு செய்யப்படுகிறது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளின் அபிமான தலமாக உள்ளது. வடக்கு திசை நோக்கி உள்ள, ராமர் சன்னதியை, எதிர்கொண்டு அனுமன் சன்னதி இருப்பது சிறப்பு. ஆடி மாத சுவாதி நட்சத்திரத் தினத்தன்று கருடாழ்வாருக்கு திருநட்சத்திர நாள் (அவதார நாள்) கொண்டாடப்படும். அன்றைய தினம் இங்கு மட்டுமே கருடாழ்வாருக்கு ஹோமம் நடத்துவது விசேஷமாகும். பரமபத வாசல் வடக்கு நோக்கி இருப்பது மற்றொரு சிறப்பாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar