Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காசி விஸ்வநாதர்
  உற்சவர்: சோமாஸ்கந்தர்
  அம்மன்/தாயார்: விசாலாட்சியம்மன்
  தல விருட்சம்: பன்னீர் மற்றும் வில்வம்
  தீர்த்தம்: வெண்ணாறு, கிணறு
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
  புராண பெயர்: நீராடுமங்கலம்
  ஊர்: நீடாமங்கலம்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகாசி விசாகம், திருவாதிரை, அஷ்டமி பூஜை, நவராத்திரி உள்ளிட்ட சிவனுக்குரிய அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  கோயிலின் மூன்றுப் பக்கமும் நீரோட்டம் நிறைந்துள்ளது. வெண்ணாறு,கோரையாறு மற்றும் பாமணி என மூன்று ஆறுகள் ஓடுகிறது  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.00 மணி முதல் காலை 11.00 மணி வரை மாலை 5.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், நீடாமங்கலம் 614404, திருவாரூர்.  
   
போன்:
   
  +91 94441 39199, 8012162370 
    
 பொது தகவல்:
     
  ஊருக்கும் மேற்கு பக்கம் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் மூன்றுப் பக்கமும் நீரோட்டம் நிறைந்துள்ளது. வெண்ணாறு,கோரையாறு மற்றும் பாமணி  என மூன்று ஆறுகள் ஓடுகிறது. கிழக்கு மற்றும் தெற்கு இருபக்கம் வழி, தெற்கு பக்கம் மூன்று நிலை ராஜ கோபுரம் மூன்று கலசலத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கில் கொடி மரம், தென் கிழக்கில் மடப்பள்ளி, வட கிழக்கில் யாக சாலை அமைந்துள்ளது. அதன் அருகில் நவக்கிரகம் மற்றும் சூரியன், சனீஸ்வரர் மேற்கு பக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றனர்.

கிழக்குபக்கம் பார்த்த வகையில் மூலவர் காசிவிஸ்வநாதர், தெற்கு பக்கம் விசாலாட்சியம்மன் ஒரு கலசம் கூடிய தனி சன்னிதியிலும், நடராஜர் தெற்குப்பக்கம் 5 கலசம் கூடிய தனி சன்னிதியிலும் அருள்பாலிக்கின்றனர். மகா மண்டபத்தில் 300 பேர் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்யலாம். மேலும் கொடி மரம் அருகில் மண்படம் கட்டும் பணி நடந்து வருகிறது. கிழக்குப்பக்கம் பார்த்த வகையில் விநாயகர், குரு பகவான் தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் தெற்குபக்கம் ஒரு கலசம் கூடிய தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். மகாலட்சுமி, சரஸ்வதி, வள்ளி,தெய்வானையுடன் சுப்ரமணியர் கிழக்குபக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றனர். மேலும் இஷ்ட தெய்வங்களை விக்கிரகங்களாக வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  புத்திரபாக்கியம், கல்வி, திருமணத்தடை, சகல ஐஸ்வர்யங்கள், செல்வவளம் மற்றும் அரசியலில் உயர் பதவிகளுக்கும் கிடைக்க வேண்டியும் பிரார்த்திக்கின்றன. இது ஒரு பரிகார ஸ்தலமாக விளங்குவதால் ஏராளமான பக்தர்கள் வந்து பிரார்த்திக்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனைகள் நிறைவேறியதும் அன்னாபிஷேகம் உள்ளிட்ட ஈசனுக்குரிய நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பு அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  திருகாவிரி பாயும் சோழவளநாடு. இதற்கு வளநாடு, சென்னி நாடு, அபயநாடு, செம்பியநாடு, பொன்னிநாடு என்று வழங்கும் சோளணு தேசமாகும். இந்த தேசத்தில் கோயில்கள் பல உள்ளன. அவைகளில் புராணங்கள் நிறைந்தவவை, தனிப்பாடல், ஆழ்வார்கள் மற்றும்  ஆன்றோர்களால் பாடல் பெற்ற கோயில்கள் பல அடங்கியுள்ளன. இவைகளில் தஞ்சை அரசனான பிரதாபசிம்ம மகாராஜாவால் அமைக்கப்பட்ட அபிமான கோயிலாக விளங்குகிறது.

மகாராஷ்டிர ராஜ்யத்தை ஆதியில் உருவாக்கிய வெங்கோஜி மகாராஜாவின் பரம்பரையில் தோன்றிய பிரதாபசிம்ம மகாராஜா நீடாமங்கலம் என்னும் மன்னன் இவ்வூரில் இரண்டு கோயில்களும், சத்திரம் ஒன்றையும் 1761ம் ஆண்டில் கட்டினார். இக்கோ யிலுக்கு, சந்தானராமசாமியான கோயில் சிறப்பு சேர்க்கிறது. இங்குள்ள சுவாமிகள் சிலைகள் விக்கிரகங்களாக உள்ளதால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. விசாலாட்சியம்மன் ஐம்பொன்னால் செய்யப்பட்டுள்ளதால், எப்போதும் அலங்காரகோலத்தில் அருள்பாலிக்கிறார்.
 
     
  தல வரலாறு:
     
  பிரதாப சிம்ம மகாராஜா 1739-ம் ஆண்டு முதல் 1763-ம் ஆண்டில் அவருடைய காலத்தில் கோயில் கட்டப்பட்டுள்தாக கூறப்படுகிறது. பெரும் கீர்த்தி மானாக விளங்கியவர் வெங்கோஜியின் புதல்வர். இவர் 24 ஆண்டுகள் அரசு புரிந்துள்ளார். படிப்படியாக கோயில் வளர்ச்சிப் பெற்றுள்ளது. 1924-ம் ஆண்டு சம்ப்ரோஷனம் நடந்துள்ளது. 1956-ம் ஆண்டு மகா சம்ப்ரோஷனம் நடந்துள்ளது.  பழங்காலத்தில் கோயில் பராமரித்து பூஜைகள் நடந்து வருகிறது.

தற்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் நிர்வாக குழு மூலம் பல்வேறுப்பணிகள் நடந்து வருகிறது. அப்பகுதியில் உள்ள சந்தானராமசமி கோயில்கட்டிய காலத்தில் இக்கோயிலும் கட்டப்பட்டுள்ளது. தற்போது மேலும் பல்வேறு வளர்ச்சிப் பெற்று கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. மேலும் கோயிலுக்கான முழுமையான வரலாறு தெரியவில்லை. ஆயிரம் ஆண்டுகள் மேற்பட்ட கோயில். 1990-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்த கும்பாபிஷேகத்திற்காக பணிகள் துவங்கியுள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கோயிலின் மூன்றுப் பக்கமும் நீரோட்டம் நிறைந்துள்ளது. வெண்ணாறு,கோரையாறு மற்றும் பாமணி என மூன்று ஆறுகள் ஓடுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar