Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு தசரத ராமேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு தசரத ராமேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: தசரத ராமேஸ்வரர்
  உற்சவர்: தசரத ராமேஸ்வரர்
  ஊர்: சித்ரதுர்கா
  மாநிலம்: கர்நாடகா
 
 திருவிழா:
     
  மகாசிவராத்திரி, ஸ்ரீராமநவமி  
     
 தல சிறப்பு:
     
  இங்கு வருவோரின் பாவம் பறந்தோடும். பன்மடங்கு புண்ணியம் சேரும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8:00 – இரவு 8:00 மணி 
   
முகவரி:
   
  அருள்மிகு ‘தசரத ராமேஸ்வரர் கோயில், சித்ரதுர்கா, கர்நாடக மாநிலம்  
   
போன்:
   
  +91 74371 – 226 579 
    
 பொது தகவல்:
     
  ராமரின் தந்தையான தசரத சக்கரவர்த்தி பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ேஹாசதுர்கா அருகிலுள்ள வஜ்ர என்னும் இடத்தில் உள்ளது. ‘தசரத ராமேஸ்வரர்’ என்று அழைக்கப்படும் இந்த சிவனின் கோயில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  இங்கு வருவோரின் பாவம் பறந்தோடும். பன்மடங்கு புண்ணியம் சேரும்.
 
    
 தலபெருமை:
     
  தசரதர் பூஜித்த சிவலிங்கம் இங்கு மூலவராக இருக்கிறார். அவரது திருநாமம் ‘தசரத ராமேஸ்வரர்’.
கோயிலுக்கு அருகில் சிறுவனான சிரவணன் தண்ணீர் எடுத்த குளம் உள்ளது. ராமர் தன் தந்தையான தசரதருடன் இங்கு இருக்கிறார். காவடியாக கட்டி பெற் தோளில் தாய், தந்தையரைச் சுமந்து வரும் கோலத்தில் சிரவணன் இருக்கிறார்.   

 
     
  தல வரலாறு:
     
  அயோத்தி நாட்டை அஜன் என்னும் மன்னர் ஆட்சி செய்தார். அவரது மகனான தசரதன் இளவரசராக இருந்த போது ஒருநாள் வேட்டையாடச் சென்றார். அங்கு எங்கோ துாரத்தில் ஒரு யானை தண்ணீர் குடிக்கும் சப்தம் கேட்டது. அந்த திசை நோக்கி அம்பு எய்த, ‘ஐயோ... அம்மா’ என குரல் ஒலித்தது. திடுக்கிட்ட தசரதன் அங்கு சென்ற போது உயிருக்கு போராடும் சிறுவன் ஒருவனைக் கண்டார். ‘‘அடடா... யானை என நினைத்து இந்த சிறுவன் மீது அம்பு தொடுத்து விட்டேனே’’ என வருந்தினார்.

உயிர் போகும் தருவாயில், ‘‘ஐயா... என் பெயர் சிரவணன். பார்வை இல்லாத முதியவர்களான என் தாயும், தந்தையும் தாகத்துடன் ஓரிடத்தில் உள்ளனர். அவர்களுக்கு தண்ணீர் கொடுங்கள்’’ என்று சொல்லி இறந்தான். அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து விட்டு, சிறுவன் கொல்லப்பட்ட விஷயத்தையும் கூறினார். மகனை இழந்த சோகத்தில், ‘‘எங்களைப் போல நீயும் புத்திர சோகத்தால் உயிர் துறப்பாய்’’ என்று சாபமிட்டு இறந்தனர். அந்த சாபம் பிற்காலத்தில் பலித்தது. அயோத்தி மன்னரான தசரதரின் இளைய மனைவி கைகேயி கேட்ட வரத்தால், மூத்தமகனான ராமர் காட்டுக்குச் செல்லவும், அதை ஏற்க மனமின்றி சக்கரவர்த்தி தசரதர் இறக்கவும் நேர்ந்தது.
 
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar