Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வனபத்ரகாளியம்மன்
  தல விருட்சம்: தொரத்திமரம்
  தீர்த்தம்: பவானி தீர்த்தம்
  ஊர்: மேட்டுப்பாளையம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடிக்குண்டம் ஜூலை 15 நாள் திருவிழா அன்னையிடம் முறைப்படி அனுமதி பெற்று ஆடி முதல் செவ்வாய் பூச்சாட்டி 2 ஆம் செவ்வாய் திருபூக்குண்டம் அமைத்து 3 ம் செவ்வாய் மறுபூஜை செய்து விழா கொண்டாடப்படும். 36 அடி நீளமுள்ள திருக்குண்டம் அமைக்கப்பட்டு விழா சிறப்புடையதாய் கொண்டாடப்படும். இத்திருவிழாவின் போது 2 லட்சம் பக்தர்கள் பங்குபெறுவது கண்கொள்ளாக்காட்சி. இவை தவிர வாரத்தின் செவ்வாய் வெள்ளி கிழமைகளில் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மேலும் தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் இக்கோயிலில் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 இரவு மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில் தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் - 641301. கோயம்புத்தூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 - 4254 - 222 286. 
    
 பொது தகவல்:
     
  குண்டமிறங்கல் எனும் தீமிதிக்கும் நேர்த்திக்கடன் இத்தலத்தில் சிறப்பாகும்.  
     
 
பிரார்த்தனை
    
  செய்வினை, பில்லிசூன்யம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக்கோயிலுக்கு ஒருமுறை வந்து அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அத்தகைய கோளாறுகள் நீங்குகிறது என்பது இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் அனுபவத்தில் கண்ட உண்மை என்று மெய்சிலிர்த்து கூறுகின்றனர்.

இது தவிர அம்மனிடம் குழந்தை வரம் வேண்டி வணங்கி தொரத்தி மரத்தில் கல்லை கட்டிவிட்டு வழிபட்டால் தங்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறது.
 
    
நேர்த்திக்கடன்:
    
  தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை நேர்த்திக்கடன்களாக இத்தலத்து பக்தர்கள் வழங்குவது வழக்கமாக உள்ளது. இது தவிர கிடா வெட்டுதல்தான் ( ஆடு வெட்டுதல்) இங்கு தனி சிறப்பாக உள்ளது. வனபத்திரகாளியம்மன் என்றாலே கிடாவெட்டுதல் தான் நினைவிற்கு வரும். அம்மனுக்கு உகந்த ஆடு பலியிடுதல் ஞாயிறு செவ்வாய் புதன் ஆகிய நாட்களில் நடக்கும். ஒரு வரத்திற்கு சுமார் 300 லிருந்து 400 கிடா வரை வெட்டப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிடாய் வெட்டுகின்றனர். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். 
    
 தலபெருமை:
     
  வேண்டிய காரியம் பின்பு நன்றாக முடிந்தால் பெண்கள் தாலியை உண்டியலில் போட்டு விடுவர். குழந்தை வேண்டி தொரத்தி மரத்தின் நுனியில் கல்லை வைத்து தொட்டில் கட்டி விட்டுள்ளனர். அம்மன் சுயம்புவாக முளைத்துள்ளது இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று.

பூப்போடுதல் :
புதிதாக தொழில் துவங்கும் நபர்கள், திருமணம் பற்றி கேட்கும் நபர்கள் சுவாமி முன்பு பூ போட்டு கேட்பது வழக்கம். சிவப்பு, வெள்ளை பூக்களை தனித் தனி பொட்டலங்களில் போட்டு அவற்றை அமபாளின் காலடியில் வைத்து எடுத்துப்  பார்க்கும்போது மனதில் எந்த பூவை நினைக்கிறோமோ அந்த பூ வந்து விட்டால் அம்பாள் உத்தரவு தந்து விட்டதாக ஐதீகம். இது இக்கோயிலில் மிகவும் சிறப்பு பெற்ற ஒன்று.

15 ஆயிரம் கிடா வெட்டு : வனபத்திரகாளியம்மன் என்றாலே கிடாவெட்டுதல் தான் நினைவிற்கு வரும். அம்மனுக்கு உகந்த ஆடு பலியிடுதல் ஞாயிறு செவ்வாய் புதன் ஆகிய  நாட்களில்  நடக்கும். ஒரு வரத்திற்கு  சுமார் 300 லிருந்து 400 கிடா வரை வெட்டப்படுகிறது.ஒரு ஆண்டிற்கு சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிடாய் வெட்டுகின்றனர்.
 
     
  தல வரலாறு:
     
  காலம் சொல்ல முடியாத காலத்தில் கட்டப்பட்டது வனபத்ரகாளியம்மன் கோயில். சாகா வரம் பெற்ற மகிசாசூரனை அழிக்க அம்பாள் சிவனை நினைத்து வழிபட்டு பூஜை செய்து சூரனை அழித்ததாகவும், அம்பாள் சிவனை நினைத்து தியானம் செய்ததால் இங்கு வனபத்ரகாளியம்மன் என்று பெயர் பெற்றது. இது தவிர ஆரவல்லி சூரவல்லி கதையோடும் இக்கோயில் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
 
மந்திரம், சூன்யம் ஆகியவற்றால் கொடிய ஆட்சி செய்த ஆரவல்லி சூரவல்லி பெண்களை அடக்க பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் சென்று சிறைப்பட்டு பின்பு கிருஷ்ணன் அவனை காப்பாற்றினார். பின்பு அப்பெண்களை அடக்க தங்களின் தங்கை மகன் அல்லிமுத்துவை அனுப்பி வைத்தனர்.
அவன் இங்குள்ள அம்மனை வழிபட்டு சென்று ஆரவல்லிப் பெண்களின் சாம்ராஜ்ஜியத்தை தவிடுபொடியாக்க அவர்கள் பயந்து போய் தங்கள் தங்கையை அல்லி முத்துவுக்கு திருமணம் செய்து கொடுத்து அவள் மூலம் விஷம் கொடுத்து கொன்றனர்.
 
இறையறிந்த அபிமன்யு வானுலகம் சென்று  அல்லி முத்துவின் உயிரை மீட்டு நடந்த விசயங்களைக் கேள்விபட்டு வெகுண்டெழுந்து ஆரவல்லி பெண்களை அடக்க புறப்பட்டுச் சென்றான். வழியில் வனபத்ர காளியம்மனை வழிபட்டு அவள் அருள் பெற்று ஆரவல்லி சாம்ராஜ்ஜியத்தை அழித்தொழித்தான் என்பது வரலாறாக பேசப்படுகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாளிக்கிறாள்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.