Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஜெனகை நாராயணபெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஜெனகை நாராயணபெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நாராயணன்
  அம்மன்/தாயார்: ஜெனகைவல்லி, ஸ்ரீ‌தேவி, பூதேவி
  ஆகமம்/பூஜை : பாஞ்ராத்ரம்
  புராண பெயர்: ஜனகையம்பதி
  ஊர்: சோழவந்தான்
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரை - சித்ரா பவுர்ணமி - 3 நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும, - ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். தசாவதாரத்தில் 9 அவதாரங்கள் எடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். புஷ்ப பல்லக்கில் அலங்கரித்து சுவாமி வலம் பங்குனி பிரம்மோற்சவம் - 11 நாட்கள் - ஸ்ரீ ராம நவமி, மற்றும் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறும். தினமும் சுவாமி பள்ளியறை புறப்பாடு நடக்கும். தைமாதப்பிறப்பு, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி (சொர்க்க வாசல் திறப்பு) நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். நவராத்திரி, ஆடிப்பூரம், ஆண்டாள் திருநட்சத்திரத்தில் விசேஷமாக இருக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  ஸ்ரீமன் நாராயணனே மாப்பிள்ளையாக வேண்டி ஜனகன் தவம் இருந்ததற்கு நினைவுச் சின்னமாக விளங்கும் தலம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஜெனகை நாராயணபெருமாள் திருக்கோயில் சோழவந்தான் - 625 214 மதுரை மாவட்டம்.  
   
போன்:
   
  +91-4543-258987, 94867 31155 
    
 பொது தகவல்:
     
  அழகிய பசுமை வனம் போன்ற சோழவந்தான் பகுதியில் வைகை ஆற்றின் அருகில் அமைந்துள்ள ஆலயம். அழகிய ஆஞ்சநேயர் தனி சன்னதியாக வீற்றிருக்கும் தலம். இங்கு ஆண்டாள் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.  
     
 
பிரார்த்தனை
    
 

கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியன இத்தலத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த பிரார்த்தனைகள் ஆகும்.விவசாய விளைச்சல் செழிக்க இத்தலத்தில் பலர் வேண்டிக் கொள்வர். 



இத்தலத்து பெருமாளை வேண்டிக் கொண்டால் தொழில் வளம், கல்வி விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியன நி‌றைவேறுகின்றன.
 
    
நேர்த்திக்கடன்:
    
  கோட்டை நெல் தருதல் இத்தலத்தின் சிறப்பு வாய்ந்த நேர்த்திகடனாகும். இத்தலத்து வரும் ஏராளமான பக்தர்கள் ஜெய வீர ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்துகின்றனர். பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தல், துளசிமாலை சாத்துதல், நெய் தீபம் ஏற்றுதல், மாலை சாற்றி வழிபடுதல் ஆகியனவும் இத்தலத்தில் உள்ள பெருமாளுக்கு பக்தர்கள் செய்கின்றனர். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம். 
    
 தலபெருமை:
     
  இத்தலத்தின் மிகவும் விசேஷம் இங்கு அருள்பாலிக்கும் ‌ஜெயவீர ஆஞ்சநேயர் ஆவார். அர்த்தமண்டபத்தின் வலதுபக்கம் தனி சன்னதியாக வீற்றிருக்கும் இ‌வரை வணங்கினால் நினைத்த காரியத்தை நிறை‌வேற்றித் தருவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த ஆஞ்சநேயரின் வால் பின்புறம் சுற்றி நூனியில் மணி கட்டியிருக்கும் அழகு பார்ப்பவரை மயங்க வைக்கும். இந்த ஆஞ்சநேயரை வணங்கி விட்டு எந்த காரியத்தை தொட்டலும் ‌ஜெயம் ஆகும் என்பதால் இவர் ஜெயவீர ஆஞ்சநேயர் என்ற பெயர் விளங்குகிறார். மேலும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இந்த ஆஞ்சநேயரை பெருமளவிலான பக்தர்கள் வடைமாலை சாத்தி வழிபடுகிறார்கள்.

பெரிய அளவிலான ராமன் சீதை லட்சுமணன் ஆகியோரது வார்ப்பு விக்ரகம் உள்ளது இக்கோயிலில். புராதன காலத்தில் இருந்தே இருக்கும் கோயில். வைகை என்னும் புண்ணிய நதியின் கீழ்கரையில் ஜனகையம்பதி என்று அழைக்கப்படும் இடத்தில் அ‌மைந்துள்ள அழகிய ‌கோயில். இங்குள்ள ராமனது விக்ரகம் மிக அழகிய வடிவில் மிக நேர்த்தியாக வகையில் அமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பு.
 
     
  தல வரலாறு:
     
  ஜனகனின் மகள் சீதையாக மகாலட்சுமியே பிறந்து பெருமை சேர்த்தாள். மகரிஷியான ஜனகனுக்கோ தம்மிடம் வளரும் இந்தக் குழந்தை யார் என்பதை உணரவே முடிந்தது. மகாலட்சுமியை எந்த மனிதனுக்கு மணம் முடிப்பது என்பது பெரிய பாரமாகவே இருந்தது. சாதாரணமான பெண்ணைப் பெற்றவனுக்கே மாப்பிள்ளை கிடைக்க பாடாய் பட வேண்டியிருக்க திருமகளுக்கு எப்படி மாப்பிள்ளை தேடுவது என்ற கவலையில் ஜனகன் துடித்தார்.

இதற்காகவே நாராயணனே பிறப்பெடுத்து வந்து இந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் பாரம் நீங்கும‌ே என்று கவலைப்பட்டு சோழவந்தானில் வந்து தவமிருந்தான். அதுவே இத்தலம் அமைய காரணமாக உள்ளது. ஸ்ரீமன் நாராயணனுக்கே மாப்பிள்ளையாக வேண்டி தவமிருந்த ஜனகனுக்கு நினைவுச் சின்னம் ஒன்று இருக்கிறது என்றால் அது சோழவந்தான் ஜனகை நாராயணன் கோயில்தான். ஜனகனின் தவப்பயனால் ஸ்ரீமன் நாராயணனே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக வந்து சீ‌தை‌யை கைபிடித்தார். இந்த பெரும் செயல் செய்த ஜனகனுக்கு நன்றி உணர்வோடு உள்ள கோயில்தான் இது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஸ்ரீமன் நாராயணனே மாப்பிள்ளையாக வேண்டி ஜனகன் தவம் இருந்ததற்கு நினைவுச் சின்னமாக விளங்கும் தலம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar