Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு பட்டாபிராமர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English
அருள்மிகு பட்டாபிராமர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பட்டாபிராமர்
  அம்மன்/தாயார்: சீதை
  ஊர்: விளாச்சேரி
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனியாக தனித்தனி காலங்களில் சிறப்பாக திருவிழா நடக்கும். அதேபோல் ஜாதி பேதம் இல்லாமல் திருவிழா கொண்டாடப்படும் பழக்கம் இன்றும் கூட இந்த ஊரில் உண்டு  
     
 தல சிறப்பு:
     
  ஊருக்கு ஒரு கோயில் இருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் ஊர் முழுவதும் கோயில் இருப்பதை விளாச்சேரியில் காணலாம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பட்டாபிராமர் திருக்கோயில் ,விளாச்சேரி-625 006,மதுரை.  
   
போன்:
   
  +91- 97888 54854 
    
 பொது தகவல்:
     
  இந்த ஊரில் பட்டாபிஷேக ராமருடன், விநாயகர், காசிவிஸ்வநாதர் - விசாலாட்சி, மாமுண்டி ஐயன், கருப்புசாமி, அழகு நாச்சியார், தட்சிணா மூர்த்தி, பூரணை புஷ்கலை சமேத ஐயனார் ஆதிசிவன் ஆகியோர் தனித்தனி கோயில்களில் அருள்பாலிக்கின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
 

அமர்ந்த நிலையில் அருளாட்சி செய்யும் ராமச்சந்திரனை தரிசித்தாலே பதவியும், புகழும் தானே தேடி வரும்.


பொறுமையின் சின்னமான, பூமாதேவியின் அவதாரமான சீதையை வணங்கும் பெண்களும் சீதையாக ஆகி விடலாம்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பட்டாபிராமருக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  ராமரின் ஜாதகம் அமைவது போல் ஒருவருக்கு அமைவது மிகவும் அரிது. இவரது படத்தை வீட்டில் வைத்து வழிபட்டாலே போதும். நமது கிரக தோஷங்கள் எல்லாம் விலகி ஓடும். ராமன் ஏக பத்தினி விரதன் அனுமன் பிரம்மச்சாரி. ராமன் தன் மனைவியை தவிர மற்றொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். அனுமனோ அனைத்து பெண்களையும் சீதையைப் போல ஒரு தாயாக கருதுவான். இப்படிப்பட்ட இருவரையும் ஒரே சன்னதியில் தரிசித்து வந்தால், ஒருவனுக்கு பிடிக்கப்பட்டிருக்கும் பெண் மீதான ஆசை விலகிவிடும்.

ராமாயணத்தில், கோசலைக்கு பிறந்தவர் ராமர். தசரதர் கோசலையை மட்டும் மணந்திருந்தால் அவர் மூலமாகவே நான்கு பிள்ளைகளை பெற முடியம்.ஆனால் அவர் மூன்று பெண்களை மணந்து நான்கு பிள்ளைகளை பெற்றார். ஆனால் கைகேயின் சொல்லைக் கேட்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி, புத்திர சோகத்தினால் தன் இன்னுயிரையே இழந்தார். இதே போலத்தான் ராவணனும்  நல்லவனாக இருந்தாலும் கெட்டவனாக இருந்தாலும் பெண்ணாசை இருந்தால் அழிவு நிச்சயம் என்பதை ராமரின் வரலாறு எடுத்துக்காட்டுகிறது. இவ்வளவு சிறப்பு மிக்க ராமர், ராவண வதம் முடிந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டது போல் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்

கங்கையின் புண்ணியம் : காசிமாநகரில் கங்கை நதி வடக்கிலிருந்து தெற்கே செல்வதால் மிக புண்ணிய நதியாகிறது. இதேபோல் விளாச்சேரியிலும் வைகை நதி வடக்கிலிருந்து தெற்கே செல்வதால் மிகவும் புனிதமாகிறது. இங்கு குளித்து பட்டாபிஷேக ராமரை தரிசித்தாலோ, பலன் ஒன்றுக்கு பல மடங்கு கிடைக்கிறது.

விளாச்சேரி : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் விளா பூஜை நடக்கும், இந்த விளா பூஜைக்கு விளாமரங்கள் அடர்ந்த இந்த ஊரில் இருந்து தான் கோயில் நெல் கொண்டு செல்வார்கள் இதனாலேயே இந்த ஊர் விளாச்சேரி ஆனது. வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊர் இது. தமிழ்ப்புலமை பெற்ற பரிதிமால் கலைஞர் பிறந்தது இந்த ஊரில் தான். முக்கோண வடிவமுடைய இந்த ஊரில்  கிட்டத்தட்ட 60 கணபாடிகள் வாழ்ந்திருக்கின்றனர்.
 
     
  தல வரலாறு:
     
  சீதையை மீட்க வானரப் படையுடன் இலங்கை சென்று ராவணனை கொன்ற ராமர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு காலடி வைத்தார். அதன் பின் அயோத்தி சென்று பட்டாபிஷேகம் செய்து கொண்டார். அயோத்தியில் நடந்த பட்டாபிஷேகத்தை நாம் அனைவரும் நேரில் கண்டிருக்க முடியாது. எனவே அதே பட்டாபிஷேக திருக்கோலத்தினை நாம் காண வேண்டுமானால் விளாச்சேரியில் உள்ள பட்டாபிஷேக ராமர் கோயிலில் காணலாம். இங்குள்ள கோயிலில் வலதுபக்கத்தில் சீதா, இடப்பக்கம் லட்சுமணன் சகிதமாக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார் ராமர். கருடனும், அனுமனும், துவாரபாலகர்களாக வீற்றிருக்கின்றனர். இதே கோலத்தில் தான் ராமரின் பட்டாபிஷேக காலத்தில், ராமருக்கு வலப்பக்கம் சீதையும், இடப்பக்கம் லட்சுமணனும் வீற்றிருந்தனர்.
 
     
சிறப்பம்சம்:
     
   
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.