SS ஆரோக்கியமாக வாழ பாடுங்க! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ஆரோக்கியமாக வாழ பாடுங்க!
ஆரோக்கியமாக வாழ பாடுங்க!
ஆரோக்கியமாக வாழ பாடுங்க!

துர்க்கையை மனதில் நினைத்து, ரோக நிவாரண அஷ்டகம் எனப்படும் இந்தப் பாடலைப்  பாடுவோருக்கு நோயற்ற சுகமான வாழ்வு அமையும்

பகவதி தேவி பர்வத தேவி
பலமிகு துர்க்கையளே
ஜெகமது யாவும் ஜெய ஜெய எனவே
சங்கரி உன்னைப் பாடிடுமே
ஹந ஹந தகதக பசபச வெனவே
தளிர்த்திடு ஜோதி யானவளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா

தண்டினி தேவி தக்ஷிணி தேவி
கட்கினி தேவி துர்க்கையளே
தந்தன தான தனதன தான
தாண்டவ நடன ஈஸ்வரியே
முண்டினி தேவி முனையொளி சூலி
முனிவர்கள் தேவி மணித் தீலி
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா

காளினி நீயே காமினி நீயே
கார்த்திகை நீயே துர்க்கையளே
நீலினி நீயே நீதினி நீயே
நீர்நிதி நீயே நீர் ஒளியே
மாலினி நீயே மாதினி நீயே
மாதவி நீயே மான் விழியே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா

நாரணி மாயே நான்முகன் தாயே
நாகினியாயே துர்க்கையளே
ஊரணி மாயே ஊற்றுத் தாயே
ஊர்த்துவ யாயே ஊர் ஒளியே
காரணி மாயே காருணி தாயே
கானக யாயே காசி னியே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா
திருமகளானாய் கலைமகளானாய்
 மலைமகளானாய் துர்க்கையளே
பெரு நிதியானாய் பேரறிவானாய்
பெரு வலியானாய் பெண்மையளே
நறுமல ரானாய் நல்லவளானாய்
நந்தினி யானாய் நங்கையளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா

வேதமும் நீயே வேதியள் நீயே
வேகமும் நீயே துர்க்கையளே
நாதமும் நீயே நாற்றிசை நீயே
நாணமும் நீயே நாயகியே
மாதமும் நீயே மாதவம் நீயே
மானமும் நீயே மாயவளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா

கோவுரை ஜோதி கோமள ஜோதி
கோமதி ஜோதி துர்க்கையளே
நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி
நாட்டிய ஜோதி நாச்சியளே
பூவுறை ஜோதி பூரண ஜோதி
பூதநற் ஜோதி பூரணையே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா

ஜெய ஜெய சைல புத்திரி ப்ரஹ்ம
சாரணி சந்திர கண்டினியே
ஜெய ஜெய சூஷ் மாண்டினி ஸ்கந்த
மாதினி காத்யா யன்யயளே
ஜெய ஜெய கால ராத்திரி கௌரி
ஸித்திகாக ஸ்ரீ நவ துர்க்கையளே
ரோக நிவாரணி சோக நிவாரணி தாப நிவாரணி ஜெய துர்க்கா


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar