முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
|
|
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| வில் ஏந்திய வேலவர்: இங்கு உற்சவர் வேடமூர்த்தி கையில் வில் மற்றும் சூலம் ஏந்தியும், அம்பாள் தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தருவது வித்தியாசமான தரிசனம். சிவன் வேடராக வந்தபோது, அவருடன் முருகனையும் அழைத்து வந்தாராம். இதன் அடிப்படையில் இங்கு முருகனும் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். இவர் நான்கு கரங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். ஒரே தலத்தில் சிவன், முருகன் இருவரையும் வில்லுடன் தரிசனம் செய்வது அபூர்வம்.
திருஞானசம்மந்தர் பதிகம் பாடிய சிவன், பிரகாரத்தில் தனிச்சன்னதியில் "புன்னைவனநாதராக' அருளுகிறார். இவரது சன்னதியின் முன்புறம் சனீஸ்வரர், சம்மந்தர் இருவரும் இருக்கின்றனர். கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு சிறப்பு பூஜைகள் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு உற்சவர் வேடமூர்த்தி கையில் வில் மற்றும் சூலம் ஏந்தியும், அம்பாள் தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தருவது வித்தியாசமான தரிசனம். சிவன் வேடராக வந்தபோது, அவருடன் முருகனையும் அழைத்து வந்தாராம். இதன் அடிப்படையில் இங்கு முருகனும் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார்.
இவர் நான்கு கரங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். ஒரே தலத்தில் சிவன், முருகன் இருவரையும் வில்லுடன் தரிசனம் செய்வது அபூர்வம். | |
|
|
|