முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
|
|
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்து விநாயகப்பெருமானை குறித்து அவ்வையார் சீதக் களப எனத் தொடங்கும் விநாயகர் அகவல் பாடியுள்ளார். அந்தகாசூரனை சிவபெருமான் சம்காரம் செய்த திருத்தலம் இது. அட்ட வீரட்டத் தலங்களில் மிகவும் தொன்மையனாதும் வரலாற்றுச் சிறப்பு பெற்றதுமான 2 வது வீரட்டான திருத்தலம் இது. சுவாமி மூலஸ்தானத்தில்பைரவ சொரூபமாக உள்ளாராம். எனவே பில்லி சூன்யம்,வைப்பு போன்ற தோசங்களை இவர் நிவர்த்தி செய்வதாக ஐதீகம். வாஸ்து சாந்தி (வீடு கட்டுதல்) எனப்படும் ஐதீகம் தோன்றியதற்கு காரணமான தலம் இது. சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற தலம் இது. அம்பாள் திரிபுர பைரவி உற்பத்தி தலம் இது. சப்த மாதாக்கள் உற்பத்தியான தலம் இது. 64 பைரவர்கள் 64 பைரவிகள் உற்பத்தியான தலம் இது.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 222 வது தேவாரத்தலம் ஆகும்.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அந்தகாசூரனை சிவபெருமான் சம்காரம் செய்த திருத்தலம் இது. | |
|
|