முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில்
|
|
அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| இங்கு மூலவர் கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார்.இங்குள்ள முத்தாம்பிகையை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். பொதுவாக சிவாலயங்களில் ஒரே கோயிலுக்குள் சிவனும் அம்மனும் அருள்பாலிப்பார்கள். ஆனால் இங்கு சிவன் தனிக்கோயிலில் கிழக்கு பார்த்தும், எதிரே அம்மன் தனிக்கோயிலில் மேற்கு பார்த்தும் அருள்புரிகின்றனர். அம்மனின் திருமேனியில் நாகப்பாம்பின் வால் பகுதி அமைந்துள்ளது. சிவன் கோயிலுக்கும் அம்மன் கோயிலுக்கும் இடையில் துளை ஒன்று உள்ளது. இதன் வழியாக அம்மனும் சிவனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கின்றனர். திருவட்டப்பாறை என்ற சிவலிங்க மூர்த்தி இங்கு மிகவும் சிறப்பு பெற்றது. இதன் முன் அமர்ந்து ராமனும், சுக்ரீவனும் ராவணனை வதம் செய்வதற்கு அனுமனின் சான்றுடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்டதாக வரலாறு. சுவாமி கோயில் ராஜகோபுரம் பிற்காலத்தில் கட்டப்பட்டது. கருவறை அகழி அமைப்பு.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 232 வது தேவாரத்தலம் ஆகும்.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| இங்கு மூலவர் கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார். இங்குள்ள முத்தாம்பிகையை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.
பொதுவாக சிவாலயங்களில் ஒரே கோயிலுக்குள் சிவனும் அம்மனும் அருள்பாலிப்பார்கள். ஆனால் இங்கு சிவன் தனிக்கோயிலில் கிழக்கு பார்த்தும், எதிரே அம்மன் தனிக்கோயிலில் மேற்கு பார்த்தும் அருள்புரிகின்றனர்.
அம்மனின் திருமேனியில் நாகப்பாம்பின் வால் பகுதி அமைந்துள்ளது. | |
|
|