முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்
|
|
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
மனித முக விநாயகர்: இத்தலத்தில் அருளும் சிவன், முன்னோர்களுக்கு முக்தி தருபவராக அருளுவதால் இவரை "முக்தீஸ்வரர்' என்றே அழைக்கிறார்கள்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி (சிதலைப்பதி), கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் ஆகிய 7 தலங்கள் சிறந்த தலங்களாக கருதப்படுகிறது.
இதில் ஐந்தாம் இடத்தில் உள்ள தலம் இது. ராமர் திலம் (எள்) வைத்து தர்ப்பணம் செய்த தலம் என்பதால், "திலதர்ப்பணபுரி' என்றழைக்கப்பட்ட ஊர் பிற்காலத்தில், "சிதலைப்பதி' என்று மருவியது.
இக்கோயிலில் விநாயகர், மனித முகத்துடன் மேற்கு பார்த்து தனிச்சன்னதியில் இருக்கிறார். இதனை கஜமுகாசுரனை வதம் செய்ததற்கு முன்புள்ள கோலம் என்கிறார்கள். இவரை, "ஆதி விநாயகர்' என்று அழைக்கிறார்கள்.
இவரது சன்னதியில் மட்டைத்தேங்காய் கட்டி வேண்டினால் நியாயமான கோரிக்கைகள நிறைவேறுவதாக நம்பிக்கை.
இக்கோயிலில் மகாவிஷ்ணு தனது மூன்று கோலத்தை காட்டியபடி அருளுகிறார்.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் விநாயகர், மனித முகத்துடன் மேற்கு பார்த்து தனிச்சன்னதியில் ஆதிவிநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். | |
|
|
|