Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மகாவீரன் அனுமன்
 
பக்தி கதைகள்
மகாவீரன் அனுமன்

’மகாவீரனான அனுமனை இஷ்ட தெய்வமாக்கிக் கொள். புத்தி சாதுர்யம், தொண்டு, தைரியம், தியாகம் போன்றவற்றுக்கு ஒருவரை உருவகப்படுத்தினால் அது அனுமனாகத் தான் இருக்க முடியும். ராமபிரானின் நன்மைக்காகத் தன்னையே தியாகம் செய்ய காத்திருந்த அனுமன் போல அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்யப் பழக வேண்டும்’ – சொன்னவர் யார் தெரியுமா? விவேகானந்தர். அவரது வாழ்வின் வெற்றி ரகசியத்தில் வாயுபுத்திரனான அனுமனுக்கு கணிசமான பங்குண்டு. அனுமனின் அசாத்திய பலத்தை யாரும் எடை போட முடியாது. கடலை அநாயாசமாகத் தாண்டுவது, பிரம்மாண்டமான மலைகளைப் பெயர்த்து வருவது, வனத்தையே துவம்சம் செய்வது என அவனது பராக்கிரமத்தைப் பட்டியலிட ஆரம்பித்தால் அது சுலபத்தில் முடியாது. வாலில் நெருப்பு பற்ற வைத்து அவமானப்படுத்தியதற்காக இலங்கையையே தீக்கிரையாக்கினார் ராம துாதரான அனுமன். அனுமன், ஆஞ்சநேயர், வாயுபுத்திரன், மாருதி என பலவிதமாக இவர் அழைக்கப்படுகிறார். ’ஹனு’ என்றால் ’தாடை’ ’மன்’ என்றால் ’பெரிதானது’. ஆகவே ’ஹனுமன்’ என்றால் ’பெரிய தாடையை உடையவன்’ என்பது பொருள். அதை ’அனுமன்’ என குறிப்பிடுகிறோம். அஞ்சனையின் மகன் என்பதால் அவர் ’ஆஞ்சநேயர்’.
வாயு பகவானின் மகன் என்பதால் ’வாயு புத்திரன்’. சூரிய பகவானை குருவாகக் கொண்டு ஒன்பது விதமான இலக்கணங்களை கற்றுத் தேர்ந்ததால், ’நவ வியாகரண பண்டிதர்’ என போற்றப்படுகிறார். மார்கழி மாத மூல நட்சத்திரத்தன்று அவதரித்தார். இந்நாளில் அனுமன் கோயில்கள் எங்கும் திருவிழா களைகட்டும்.   ’ராம நாமத்தை உச்சரிப்பதன் மூலம் செயலில் வெற்றி அடைய முடியும்’ என்பதை உணர்த்தியவர் அனுமன்.  தன் அவதாரம் முடிந்து ராமபிரான் வைகுண்டம் புறப்பட்ட போது அனுமனையும் வருமாறு அன்புடன் அழைத்தார். ஆனால், ’வைகுண்டத்தில் உன்னை வணங்குவதற்குக் கோயில்கள் இருக்காது. ராமநாம கோஷம் இருக்காது. நான் பூலோகத்தில் இருந்து கொள்கிறேன்’ என பிரியாவிடை கொடுத்து, இன்றும் பூமியில் சிரஞ்சீவியாக அவர் நம்முடன் இருக்கிறார் என்பது சத்தியம்.

ராம நாமம் சொல்லி அனுமனை வணங்கினால், தீய சக்திகள் நெருங்காது. புத்தி, பலம், புகழ், தைரியம், பேச்சாற்றல், தேக ஆரோக்கியம், வீரம் உட்பட அனைத்தும் கிடைக்கும். அனுமனுக்கு ’சுந்தரன்’ என்றொரு திருநாமம் உண்டு. ராமாயணத்தை எழுதிய வால்மீகி,  அனுமனுக்குச் சிறப்பு சேர்க்கும் விதத்தில் ’சுந்தர காண்டம்’ என்ற பெயரில் தனியே இணைத்தார். ’சுந்தர காண்டம்’ பாராயணம் செய்தால் குழப்பம் நீங்கி மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.  ’சுந்தர காண்டத்தை தினம் படித்தால் மருத்துவரால் குணப்படுத்த முடியாத வியாதியும் பறந்தோடும்’ என காஞ்சி மகாப்பெரியவர் அருளியிருக்கிறார்.  கர்ப்பிணிகள் சுந்தரகாண்டம் படித்தால் அனுமன் அருளால் நற்குணத்துடன் குழந்தை பிறக்கும் என்பதோடு, சுகப்பிரசவமும் நிகழும். ராம அவதாரம் நிகழ்ந்த போது தேவர்களும் அதில் பங்கேற்க பூமியில் வானரங்களாகப் பிறந்தனர்.  சிவனும் ராமசேவை செய்ய வேண்டும் என்பதற்காக அனுமனாக அவதரித்தார் என ’கந்தபுராணம்’  சொல்கிறது. இதற்கென பார்வதியிடம் அனுமதி பெற்றார் சிவன். கணவரைப் பிரிந்திருக்க முடியாது என்பதால், அனுமனின் வாலாக பார்வதியும் உடன்வந்தாள். மேலும் அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஐதீகம். திருமணத்தடை அகல அனுமனைப் பிரார்த்தித்து அவரது வாலில் பொட்டு வைத்து வழிபடுவது நன்மை தரும். வாலில் நுனியில் இருந்து, இந்த ’பொட்டு வைக்கும் பிரார்த்தனையை’ தொடங்க வேண்டும். சந்தனப் பொட்டு வைத்து, அதன் மீது குங்குமம் வைக்க வேண்டும். இரண்டாவது நாள் அடுத்த பொட்டு வைக்க வேண்டும். இப்படித் தினமும் ஒரு பொட்டாக வைத்து, ஒரு மண்டலத்திற்குள் (48 நாள்) பூர்த்தி செய்ய வேண்டும். இந்த வழிபாடு முடிவதற்குள் விருப்பம் நிறைவேறி விடுவதுண்டு. அவல், தேன், பானகம், கடலை, இளநீர் இதில் ஒன்றை நிவேதனம் செய்யலாம்.

தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், ஷியாமா சாஸ்திரிகள் என்னும் சங்கீத மும்மூர்த்திகள் காலத்திற்கு முன்பு ’ஆதி மும்மூர்த்திகள்’  எனப்படும் அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை, முத்துத் தாண்டவர் என்னும் மூவர் இசைக்கலையைப் பரப்பினர்.   இதில் அருணாசலக் கவிராயரால் பாடப்பட்ட அனுமன் பிள்ளைத்தமிழ், ராம நாடகக் கீர்த்தனை குறிப்பிடத்தக்கவை.  ’ராம நாடகக் கீர்த்தனை’ என்பது ராமனின் வரலாற்றை விவரிக்கும் இசை நாடகநூல், இது திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அனுமன் பக்தரான அருணாசலக் கவிராயர். ஒரு முறை தஞ்சைக் கோட்டையை ஆற்காடு நவாபின் படைகள் முற்றுகையிட்ட  போது சிப்பாய்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் அருணாசலக் கவிராயர் மூலம் அனுமன் கதையைச் சொல்லச் சொன்னார் தஞ்சைமன்னர்.  ’அனுமன் விஜயம்’ என்கிற தலைப்பில் அனுமனின் வீர தீரங்களை உணர்ச்சிப் பெருக்குடன் வெளிப்படுத்தினார் கவிராயர். இவற்றைக் கேட்ட சிப்பாய்களின் நரம்புகள் முறுக்கேறின. ’அனுமன் போல நாங்களும் ஆவேசத்துடன் பாய்ந்து,  அரண்மனையைச் சுற்றி வளைத்த நவாபின் படைகளை விரட்டியடிப்போம்’ என ஆயுதங்களுடன் பாய்ந்தனர்.

பிறகென்ன... ஆவேசமுடன் வந்த வீரர்களை நவாபின் படையினரால் எதிர்கொள்ள முடியவில்லை.  ஓட்டம் பிடித்தனர்.  மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் சமர்த்த ராமதாசர். இவர் அனுமனின் அம்சமாக கருதப்பட்டார். இவரது இயற்பெயர் நாராயணன்.  வாலுடன் பிறந்த இவருக்கு வளர்ந்தபின்னரே வால் மறைந்து போனது. அனுமன் மற்றும் ராமரின் தரிசனம் பெற்ற இவர் சத்ரபதி சிவாஜியின் குருநாதராக இருந்தார். வீரசிவாஜியும் அனுமனின் பக்தர். அனுமன் வழிபாடு என்றதும் நம் நினைவுக்கு வருபவை வெற்றிலை மாலை (வெற்றி வேண்டி அணிவிப்பது), வடைமாலை (ராகுதோஷம் நீங்க), வெண்ணெய்க்காப்பு (பிரச்னை பனி போல் மறைய) இவை தவிர செந்தூரம் அணிவித்தல், ராமநாமம் எழுதப்பட்ட மாலை சார்த்துதல் உள்ளிட்ட வழிபாடுகள் சிறப்பானவை. அனுமனின் அருளைப் பெற மாதம்தோறும் மூலநட்சத்திரத்தன்று விரதமிருக்கலாம். ராம நாமம் ஜபிக்கலாம். அனுமன் அஷ்டோத்ரம், அனுமன் சாலீசா படிக்கலாம். சிரஞ்சீவியாக  விளங்கும் அனுமன் எல்லா நலன்களை வழங்க வேண்டி பிரார்த்திப்போம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.