Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வண்டியூர் மாரியம்மன்
 
பக்தி கதைகள்
வண்டியூர் மாரியம்மன்

கிராமங்களில் சிவன், பெருமாள் கோயில் இருக்கிறதோ இல்லையோ...மாரியம்மன் கோயில் நிச்சயம் இருக்கும். வேப்ப மரம், சூலம், மஞ்சள் வாசம், கல்அடுப்பில் தயாரித்த பொங்கல், பூஜாரிகள், குறி சொல்வது, குலவையிடுவது, உடுக்கை அடிப்பது இவை எல்லாம் மாரியம்மனின் அடையாளங்கள். நம் புராதன ஆன்மிக வேர்கள். மாரியம்மனுக்கு மனம் குளிர அபிஷேகம் செய்தால் நாடு செழிக்க மழையை எதிர்பார்க்கலாம். மாரியம்மனுக்கு ஆடியில் கூழ் ஊற்றினால் பஞ்சம் ஏற்படாது.  முதல் அறுவடை நெல்லை அம்மனுக்குக் காணிக்கை கொடுத்தால், அடுத்தாண்டு விளைச்சல் அமோகமாக இருக்கும். ’மாரி பாத்துட்டு இருக்கா... மகமாயி எல்லாத்தையும் கவனிச்சிட்டு இருக்கா... மாரி ஊரை தினமும் காவல் காக்கறா’ என அம்மனுக்குப் பயந்தும், பணிந்தும் நம் முன்னோர்கள் வாழ்ந்தனர். மாரியம்மன் என்றால் அவ்வளவு பவர்புல். அநீதி, அநியாயம் எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்பாள். இதனால் மக்கள் அம்மனுக்கு பயந்து மானம், மரியாதையுடன் வாழ்ந்தனர்.

மனதார வழிபடுவோருக்கு மாரியம்மன் தான் எல்லாமும். அவள் தான் நீதிபதி; போலீஸ்; பஞ்சாயத்துத் தலைவர்! சமயபுரம் மாரியம்மன், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், புன்னைநல்லூர் மாரியம்மன், வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் என நீளும் மாரியம்மன் பட்டியலில் மதுரை வண்டியூர் மாரியம்மனுக்கு சிறப்பிடம் உண்டு. புகழ்மிக்க மதுரை மீனாட்சிகோயிலில் எந்த விழா துவங்கினாலும், முதலில் வண்டியூர் மாரியம்மனுக்கு பூஜை நடத்தப்படும். கூடல் மாநகரின் ஆதி தெய்வம், நகரின் காவல் தெய்வம்  வண்டியூர் மாரியம்மன்! மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து கிழக்கில் 5 கி.மீ., தொலைவில் உள்ளது கோயில்.  மதுரை நகர மக்கள் தம் வீடுகளில் எந்த விசேஷம் என்றாலும், இவளிடம் அனுமதி பெற்ற பிறகே விசேஷம் நடத்துவர்.

வண்டியூர் மாரியம்மனின் கதை தெரியுமா?

கூன்பாண்டியன் என்னும் சுந்தரபாண்டியனின் காலத்தில் வைகையாற்றில் கிடைத்த மாரியம்மன் சிலையை இங்கு பிரதிஷ்டை செய்தனர். அந்நாளில் பாண்டிய மன்னர்கள் வண்டியூர் மாரியம்மனை வழிபட்ட பின்னரே படைகளுடன் போருக்குப் புறப்படுவர். இரண்டு சக்திகளின் அருளைத் தன்னிடம் கொண்டிருப்பதால், வண்டியூர் மாரியம்மன் வழிபடும் பக்தர்கள் அடையும் பலன் அளவிடற்கரியது. அப்படி என்ன இரண்டு சக்திகள் இவளிடம்? அந்தக் காலத்தில் மன்னர்கள் போரில் வெற்றி பெற, போர்க்களம் செல்லும் முன் துர்கையை வழிபட்டுச் செல்வர். வெற்றி தெய்வமான துர்கையின் அம்சமும் வண்டியூர் மாரியம்மனிடம்  இணைந்திருப்பதே இத்தலத்தின் சிறப்பம்சம். இந்தப் பிரபஞ்சமே பராசக்தியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவளே அனைத்திற்கும் ஆதாரம். அந்த பராசக்தியே துர்கையாக அவதரித்து மகிஷாசுரனை வதம் செய்தாள். இதனடிப்படையில் துர்கையின் காலடியில் எருமையாக அசுரன் (மகிஷம் என்றால் எருமை) காணப்படுவான். மகிஷனை வென்றதால் அவளுக்கு மகிஷாசுரமர்த்தினி என பெயருண்டு.

வழக்கமாக மாரியம்மனின் காலடியில் எருமை இருக்காது. ஆனால் வண்டியூர் மாரியம்மன் காலடியில் எருமை உள்ளது. இதனால் இங்கு வழிபடுவோருக்கு மாரி, துர்கையின் அருளும், ஆசியும் கிடைக்கும்.  அம்மன் வலதுகாலை மடக்கி, இடதுகாலைத் தொங்க விட்டபடி காட்சியளிக்கிறாள்.  இடது காலுக்குக் கீழே மகிஷாசுரன் இருக்கிறான். கைகளில் பாசம், அங்குசம் ஏந்தியிருக்கிறாள். தினமும் அம்மனுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை கருவறை அருகில் வைத்திருப்பர். சக்தி வாய்ந்த இத்தீர்த்தத்தை தெளித்தால் உடலும், உள்ளமும் புனிதம் பெறும்.  மன அழுக்குகள் மறையும். வியாதி பறந்தோடும். கண் நோய், அம்மை, உஷ்ணம் தொடர்பான நோயால் சிரமப்படுபவர்கள் இதை குடிக்க விரைவில் குணம் பெறுவர். தோல்நோய், குழந்தைகளுக்கு வரும் நோய்கள், மருத்துவரால் கைவிடப்பட்டவர்களும் வழிபட்டு பலனடைகின்றனர். நேர்த்திக்கடனாக  அம்மனுக்கு அபிஷேகம் செய்து, மாவிளக்கேற்றி நன்றிக்கடன் செலுத்துகின்றனர். தீச்சட்டி, பால்குடம் எடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர் பக்தர்கள். ஆன்மிகத்தொண்டு செய்த தமிழக மன்னர்களில் மதுரை திருமலைநாயக்கர் குறிப்பிடத்தக்கவர்.  

மதுரையில் நாயக்கர் மகால் என்னும் பிரமாண்ட மாளிகையை  எழுப்பிய இவர், அரண்மனை கட்டுவதற்கான மணலை வண்டியூர் மாரியம்மன் கோயிலுக்கு அருகில் எடுக்க உத்தரவிட்டார். அங்கு ஏராளமான அளவில் மண் அள்ளப்பட்டதால்,  பெரும் பள்ளம் ஏற்பட்டது. அதில் தோண்டும் போது கிடைத்த பெரிய விநாயகர் சிலை மதுரை மீனாட்சிகோயிலில் முக்குறுணி விநாயகராக அருள்பாலிக்கிறார்.  ஒருநாள் திருமலை நாயக்கர், ’மண்ணெடுத்த பள்ளத்தை எப்படி சரிக்கட்டுவது?’ என சிந்தித்தார்.  அப்போது அவரது பார்வை  மாரியம்மன் கோயில் மீது விழ முகம் பிரகாசமானது.  ’ஆஹா... கோயில் அருகில்  குளமில்லையே...இருந்தால் திருவிழா நடத்தலாமே என முடிவு செய்தார். சதுரவடிவில் பிரமாண்ட குளத்தை அமைக்க ஏற்பாடு செய்தார்.  நடுவில்  நந்தவனம் அமைத்து காண்போரைக் கவரும் விதத்தில் வசந்த மண்டபம் எழுப்பி விநாயகரை பிரதிஷ்டை செய்தார். இந்த மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்தார்.   தைப்பூசத்தன்று மதுரை மீனாட்சியும் சொக்கநாதரரும் தெப்பத்தேரில் மூன்று முறை வலம் வருகின்றனர். பங்குனி மாத பிரமோற்ஸவமும் விமரிசையாக நடக்கிறது.  


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.