Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அரித்துவாரமங்கலம் ஸ்ரீபாதாளேஸ்வரர்
 
பக்தி கதைகள்
அரித்துவாரமங்கலம் ஸ்ரீபாதாளேஸ்வரர்

ஒரு மனிதர் சந்தோஷமாக வாழ்கிறார் என்றால் முற்பிறவியில் செய்த நற்செயலின் விளைவு என்கிறோம். அது போல் அவர் கஷ்டப்பட்டால்  முற்பிறவியில் செய்த தீச்செயலே காரணம் என்கிறோம். வாழ்வின் இன்ப, துன்பத்திற்கு எப்படி முற்பிறவி காரணமோ அது போல அவரவர் பிறந்த ஜாதகத்தின் கிரக அமைப்பும் முக்கியமான ஒன்று. அதிலும் சனிபகவான் பீடிக்கும் காலம் என்றால் மனிதன் படும்பாடு சொல்லி மாளாது. ஜோதிடர் அறிவுரைப்படி விசேஷ கோயில்களில் பரிகாரபூஜை செய்த பிறகு அதன் தாக்கம் சற்று குறையும். சனியைப் போல செவ்வாய், ராகு, கேது, குருவால் தோஷங்கள் ஏற்படுவதுண்டு. வாழ்க்கை நல்ல விதத்தில் அமைய வேண்டும் என்றால் அதற்கு நவக்கிரகங்களின் ஆசி அவசியம்.

நவக்கிரகங்களின் ஆசியை வழங்கி வாழ்வை சுபிட்சமாக்குபவராக அரித்துவார மங்கலம் என்னும் தலத்திலுள்ள பாதாளேஸ்வரர் விளங்குகிறார். சிவலிங்கத்தின் திருமேனியாக விளங்கும் இவரை தரிசித்தால் தோஷம் பறந்தோடும்.  இந்தக்கோயில் கும்பகோணத்தில் இருந்து  28 கி.மீ., தொலைவில் உள்ளது. குருபகவான் அருள்புரியும் ஆலங்குடிக்கு அருகே அமராவதி பாலம் என்னும் இடத்தில் பிரியும் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.  கும்பகோணம், தஞ்சாவூரில் இருந்து பேருந்து வசதி உண்டு. நீடாமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 6 கி.மீ.,  காவிரியாற்றின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற தலம் இது.  ’திருஅரதைப் பெரும்பாழி’ என அழைக்கப்பட்ட இத்தலம் ஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்றது.  மகாவிஷ்ணு வழிபட்டதால் சுவாமிக்கு  ’பாதாள வரதர்’ என்றும் பெயருண்டு.

மகாவிஷ்ணு இங்கு சிவனை வழிபடக் காரணம் என்ன? பிரம்மா, மகாவிஷ்ணுவுக்கு இடையே  யார் உயர்ந்தவர் என்ற விவாதம் எழுந்தது. சிவனின் திருவடி அல்லது திருமுடியை யார் முதலில் தரிசிக்கிறாரோ, அவரே உயர்ந்தவர் என தீர்மானித்தனர்.  அன்னப்பறவையின் வடிவம் எடுத்த பிரம்மா திருமுடியைக் காண ஆகாயத்தில் பறக்கத் தொடங்கினார். மகாவிஷ்ணு பன்றியின் வடிவெடுத்து பாதாளத்தைக் குடைந்தபடி சென்றார் சிவனின் திருவடிகளைக் காண! திருமுடி வளர்ந்து கொண்டே போனதால்  பிரம்மாவால் செல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் சோர்ந்த பிரம்மா,  எதிரில் வந்த தாழம்பூவைக் கண்டார். தான் திருமுடியைக் கண்டுவிட்டதாக பொய் சொல்லும்படி வேண்டினார். அதுவும் சம்மதித்து சிவனிடம் பொய் சொன்னது. பொய் சொன்ன பிரம்மாவுக்கு  கோயில் கிடையாது என்றும், சிவபூஜைக்குத் தாழம்பூ பயன்படாது என்றும் சபித்தார் சிவன்.  பாதாளத்தைத் துளைத்த விஷ்ணுவாலும் திருவடிகளைக் காண முடியவில்லை.  அதுவும் நீண்டு கொண்டே போனது. ஒரு கட்டத்தில் தோல்வியை ஒப்புக் கொண்ட விஷ்ணு பாதாளத்தில் இருந்து மேலே வந்தார்.

இந்தப் புராணம் நமக்குத் தெரிந்ததுதான். இதற்கும் அரித்துவாரமங்கலத்துக்கும் என்ன தொடர்பு என்று தானே யோசிக்கிறீர்கள்? இன்னொரு முறை ஊரின் பெயரை சொன்னால் புரியும். அரி (விஷ்ணு)  துவார மங்கலம் (ஊர்). அதாவது அரியான மகாவிஷ்ணு துவாரமிட்டு துளைத்துச் சென்ற ஊர். புரிகிறதா? இங்கிருந்து தான் விஷ்ணு பாதாளம் புறப்பட்டார். இதை நிரூபிக்கும் விதமாக சிவன் திருநாமம் பாதாளேஸ்வரர், பாதாளவரதர் என்று வழங்கப்படுகிறது.  விஷ்ணு துவாரமிட்ட பள்ளம் கருவறையில் உள்ளது. இதன் வழியாக உள்ளே சென்ற விஷ்ணு,  இதே துவாரத்தின் வழியே மீண்டும் வந்தார். இதை  கல்லால் மூடி வைத்துள்ளனர்.  அர்ச்சகரின் அனுமதியுடன்  இதனை தரிசிக்கலாம்.  கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. கோயிலுக்கு எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது.  விநாயகர், பதஞ்சலி, வியாக்ரபாதர், நடராஜர், காசி விஸ்வநாதர், சூரியன், சந்திரன், பைரவர், சப்தமாதர் சன்னதிகள் உள்ளன. தல விருட்சம் வன்னி மரம். மூலவர் பாதாளேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கியுள்ளார்.  இவரை வழிபட்டால் கடன் பிரச்னை தீரும். பாதாளேஸ்வரரைத் தரிசித்தால் கிரகதோஷம் நீங்குவதால் நவக்கிரக சன்னதி கிடையாது.  ஈசனுக்கு வலப்பக்கம் அலங்காரவல்லி அம்மன் சன்னதி உள்ளது. சுவாமிக்கு வலப்பக்கம் அம்மன் இருப்பதை ’திருமணக் கோலம்’ என்பர். இந்த அம்மனை வழிபட்டால் நல்ல மணவாழ்க்கை அமையும். அம்மனுக்கு எதிரில் தனிகோபுர வாசல் உள்ளது. பாதாளேஸ்வரர், அலங்காரவல்லியை தரிசிப்போம்; நல்வாழ்வு பெறுவோம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.