Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மனமே விழித்தெழு
 
பக்தி கதைகள்
மனமே விழித்தெழு

நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள் என மாணவர்களிடம் கேட்டால், “எழுத்தாளராக; மருத்துவராக; பொறியாளராக; விளையாட்டு வீரராக விரும்புகிறேன்” என்று சொல்வார்கள்.  இதே போல நான் நடத்தும் சுயமுன்னேற்ற வகுப்புகளில் மேலாளர்களும், அதிகாரிகளும் கூட ’நான் ஜெனரல் மேனேஜராக, வைஸ் பிரசிடென்டாக, நிர்வாக இயக்குனராக விரும்புகிறேன் என்றெல்லாம் சொல்வார்கள்.  இதுவரை யாரும் தோல்வியடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு  செயல்பட்டதில்லை.

ஆனால் சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள் என்பதே உண்மை. லட்சியத்தில் வேறுபாடு இல்லை. ஆனால் அதை அடைய என்ன செய்ய வேண்டும்; செய்யக் கூடாது என்பதில் வேறுபடுகிறார்கள்.

ஏன் இந்த வேறுபாடு?

சிகரெட் புகைத்தால் கேன்சர் வரும் என்பது தெரியும். ஆனாலும் புகைக்கிறார்கள்.  விபத்தில் சிக்கியவர் தலைக் கவசம் அணியவில்லை எனத் தெரிகிறது. ’இன்று முதல் தலைக்கவசம் இல்லாமல் வண்டியில் செல்ல மாட்டேன்’ என முடிவு செய்கிறோம். ஆனால் மறுநாளே மறந்து போகிறோம். புத்தாண்டின் முதல் நாளில் எடுத்த சபதம் போக போக என்னவாகிறது?

அமெரிக்காவில் செல்வந்தர் ஒருவருக்கு மேலும் முன்னேறும் எண்ணம் ஏற்பட்டது. சிறந்த ஆலோசகரை அணுகினார். அவரும் அறிவுரையை எழுதிக் கொடுத்து விட்டு, பெருந்தொகையை பில்லாக கேட்டார். புகழ் மிக்க ஆலோசகர் என்பதால் வழியின்றி கேட்டதை கொடுத்தார் செல்வந்தர். ஆலோசனையை அக்கறையுடன் செயல்படுத்தினார். சில ஆண்டுகளிலேயே இலக்கை அடைந்தார். ஆலோசகருக்கு மீண்டும் ஒரு தொகையை அளித்தார் செல்வந்தர்!  

அந்த ஆலோசனை இதோ!

உங்களின் குறிக்கோளை ஒரு தாளில் எழுதுங்கள். அதை அடைய தினமும் செய்ய வேண்டிய முக்கிய வேலைகளை,  ஒரு தாளில் ஒவ்வொரு நாளும் எழுதுங்கள். அதை முடிக்காமல் தூங்க செல்லாதீர்கள்!

இது யாருக்குத் தான் தெரியாது என நீங்கள் கேட்கலாம். ஆனால் இதுவே முன்னேறியவர்களின் ’ரகசிய சூட்சமம்’
இந்த சூட்சமத்தை அடுத்த நூறு நாட்களுக்குள் செயல்படுத்தி பாருங்கள். இந்த வெற்றி பார்முலாவின் சக்தியை நீங்கள் அறிவீர்கள். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். ஒரு சூட்சமத்தைத் தெரிவது என்பது வேறு; நடைமுறைப்படுத்துவது என்பது வேறு.  இதை சற்று அலசிப் பார்ப்போமா?

குறிக்கோளில் தெளிவு. அதை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவு. அவைகளை தினமும் செய்வதில் உறுதி. அவ்வளவு தானே? இதில் குறிக்கோளை  எழுதுவது, அதற்காக தினமும் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியல் இடுவது. இரண்டையும் இப்போதே செய்து விடலாம். ஆனால் மூன்றாவது விஷயம் முக்கியமானது. அன்றாடம் செய்ய வேண்டிய
வேலைகளை ஒழுக்கமாக செய்வது. இதில் தான் வெற்றியாளர்கள் வேறுபடுகிறார்கள்.

அவர்களை எந்த சக்தி செயல்பட வைத்தது? அது ’மனம்’ என்ற சக்தி!

நமக்கும் மனம் ஒத்துழைத்திருந்தால்  அமெரிக்க செல்வந்தர் போல,  முன்னேறியிருப்போமே!

நாம் செய்ய வேண்டிய வேலைகளை ஏன் செய்வதில்லை? செய்யக்கூடாத வேலைகளை  மீண்டும்  செய்கிறோம்? ஒரு வேலையை ஏன் பாதியிலேயே நிறுத்துகிறோம்? இதற்கெல்லாம் எனக்கு பதில் கிடைத்தது.  

அது தான் பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம். யோகா என்பது மனம், உடலை ஒருங்கிணைப்பது. யோகாவை ஆங்கிலத்தில் ’யோக்’ (ஙுணிடுஞு) என்பது. தமிழில் ’நுகத்தடி’  என்றும் அழைப்பர்.

மாட்டு வண்டியில் இரண்டு மாடுகளை ஒரு மரக்கட்டையால் இணைத்து பூட்டி இழுக்க வைப்பார்கள். அந்த மரக்கட்டை தான்  ’நுகத்தடி’. இதனால் மாடுகள் ஒரே திசையில், ஒரே வேகத்தில் செல்லும்.  

இந்த மாடுகள் போலத்தான் நம் மனமும் உடலும். இந்த இரண்டையும் கட்டுப்படுத்த ஒரு சக்தி வேண்டும். அந்த சக்தி தான் மனதில் தோன்றும் செயல்களை உடலால் செய்ய வைக்கிறது.  அந்த சக்தி இருக்கும் வரை கடினமாக வேலைகளையும் எளிதாக செய்வோம். அந்த சக்தியிலிருந்து மனமும், உடலும் விடுபட்டால், நம்மால் செயல்பட முடியாது. .
அந்த சக்தி தான் பலத்தை கொடுக்கிறது. அதனை ’பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம்’ என்பர்.

’உன்னதமான குறிக்கோளை அடைய முற்படும் போது, உன் எண்ணங்களுக்கு எல்லை இல்லாமல் போகும். பின்னுக்குத் தள்ளும் தடைகளை வெற்றி கொள்வாய். உனது விழிப்புணர்வு விரிவடையும். இந்த மனசக்தியால் உனக்குள்ளே பிரமாண்டமான உலகைக் காண்பாய்.  திறமை,
அறிவுக்கூர்மை வெளிப்படும். கனவிலும் காணாத உன்னத மனிதன் உனக்குள் மறைந்திருப்பதை உணர்வாய்’
இதை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதிய அர்த்தம் கிடைக்கும்.  

சிறிய உதாரணத்தோடு இதை விளக்குகிறேன்.

எனக்கு தெரிந்த குடும்பத்தலைவி ஒருவர், எடையைக் குறைக்க வேண்டும் என்று உணவு ஆலோசகர் ஒருவரை அணுகினார். சில உணவு சம்பந்தப்பட்ட ஒழுக்கத்தைக் கடைபிடிக்கச் சொன்னதோடு, அரிசியை தவிர்க்கவும் சொன்னார். எடை குறைய ஆரம்பித்தது. ஆனால் மூன்றாவது வாரத்தில் கட்டுப்பாட்டை கைவிட்டார். இது நடந்தது சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னால். அண்மையில் அவரைச் சந்தித்தேன்.
நன்றாக இளைத்து  ஆரோக்கியமாக இருந்தார். ’என்ன மேடம், டயட்டீஷியனை மாற்றி விட்டீர்களா?’ எனக் கேட்டேன். இல்லை; அவர் சொன்னதை அப்படியே  மூன்று மாதமாக கடைபிடிப்பதாக சொன்னார் அந்த பெண். அவரது பதில் பதஞ்சலி யோக சூத்திரத்தின் வெளிப்பாடாக இருந்தது.

’என் மகள் வெளிநாட்டில் இருக்கிறாள். வேலை சம்பந்தமாக நல்ல மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கிறாள். அவள்
நினைத்தது நிறைவேற ’அரிசி சோற்றை தவிர்ப்பது’ என்ற விரதத்தை நான் எடுத்தேன். அவளது நலனுக்கான நோன்பு இது’ என்றார்!

இந்த  நிகழ்வோடு மேலே சொன்ன  யோக சூத்திரத்தை  படியுங்கள். எடை குறைய வேண்டும் என்பதற்காக அரிசி சோற்றைத் தவிர்ப்பதற்கும், மகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக அரிசிச்சோற்றை தவிர்க்கும் விரதத்திற்கும் உள்ள வித்தியாசம் புரியும்.

குறிக்கோளால் ஏற்படும் மன சக்தி நம்மைப் பின்னுக்குத் தள்ளும் தடைகளை தகர்க்கும். அதன்பின் உன்னதமான குறிக்கோளை நாம் அடைவோம்.

மனசக்தியை அடைய உங்கள் குறிக்கோளை, ஒரு தாளில் எழுதி விட்டுக் காத்திருங்கள்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.