Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மனமே விழித்தெழு
 
பக்தி கதைகள்
மனமே விழித்தெழு

நம் மனம் விழித்தெழுந்து விட்டால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை.  நாம் பேசும் ஒவ்வொரு சொல்லிலும் மாபெரும் சக்தி ஒளிந்திருக்கிறது. மனதின் வேகம் தான் நம் எண்ணத்தின் வேகம். எண்ணத்தின் வேகம் தான் உடலின் வேகம். இந்த பார்முலாவை புரிந்து கொண்டால் எதைச் செய்கிறோம், ஏன் செய்கிறோம், வேலையில் நாம் காட்டும் வேகம் அல்லது நிதானம் ஏன் இப்படி இருக்கிறது என்பது புரியும்.

காட்டில் முயல் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட சிறுத்தை ஒன்று, தன் பசியைப் போக்க முயலைத் துரத்த ஆரம்பித்தது. முயலும் ஓட ஆரம்பித்தது. ஆனால் சிறுத்தை விடுவதாக இல்லை. ஆனால், ஒரு கட்டத்தில் முடியாது என்று சிறுத்தை முடிவு செய்து,  ”முயலாரே! நான் தோற்றுவிட்டதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் என் மனதில் ஒரு குழப்பம். நானோ வேகமாக ஓடும் மிருகம். நீயோ சாதாரண முயல். உன்னால் எப்படி என்னை விட வேகமாக ஓட முடிகிறது?” எனக் கேட்டது. ”அது எனக்கும் தெரியும். ஆனால் நாம் இருவரும் எதற்காக ஓடுகிறோம் என்ற தெளிவு இருந்தால் உம்முடைய குழப்பம் தீரும். நீர் சாப்பாட்டிற்காக ஓடுகிறீர்; நானோ உயிர் பிழைக்க ஓடுகிறேன்” என்று சொல்லிக் கொண்டு ஓடி மறைந்தது!

இந்தக் கதையில் ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது. எந்த வேலையை செய்தாலும், இதை ஏன் செய்கிறோம், இதனால் என்ன பயன், செய்யாவிட்டால் நான் எதை இழப்பேன் என சிந்திக்க வேண்டும். இதைத் தான், ’மனசு வைத்து செயலைச் செய்வது’ என்பார்கள். இந்த கேள்விக்கான விடைகளில் தான் வேலையின் வேகமும், தரமும் அடங்கியுள்ளது.  
’உன்னையறிந்தால், நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம்....உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்’ என்ற கண்ணதாசன் கவிதை கூட நினைவுக்கு வரலாம்.

நாலுபேர் முன்னிலையில் அவமானப்படும் போதோ, மெச்சப்படும் போதோ நம் மனதில் தான் அந்த விஷயம் பதிவாகிறது. அவமானப்படும் போது தைரியத்தை இழக்கலாம் (அ) சுயகவுரவம் தட்டியெழுப்பப்படலாம். மனதைத் தட்டியெழுப்பி விழிப்பாகி விட்டால் அதன் பலம் நம்மைச் சேரும். இது தற்கால வாழ்வுக்கும் பொருந்தும்; இதிகாச கால வாழ்வுக்கும் பொருந்தும்.

வேதம், இதிகாசங்கள் வெறும் கட்டுக்கதை அல்ல; அவை நமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வந்த சூட்சமங்கள்.  மகாபாரதத்தின் மூல கருத்தே மனதை விழித்தெழச் செய்வது தான்.  அர்ஜூனன் க்ஷத்ரியன். போர்க்களத்தில் யாராக இருந்தாலும் பகை என வந்து விட்டால் போராடி வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால் அர்ஜூனன் ”என் முன்னால் சகோதரர்கள் இருக்கிறார்களே; குருநாதர் இருக்கிறாரே” என கலங்கினான். கிருஷ்ணரோ, ”ஓ! மனமே நீ யார்,  என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவாய், மனமே விழித்தெழு” என்று அர்ஜூனனுக்கு மட்டுமல்ல, அவனைப் போல குழம்பியிருக்கும் அனைவருக்கும் போதித்தது தானே கீதை!

அரசவையில்  மானபங்கம் செய்யப்படும் போது பாஞ்சாலியின் சபதத்தை பாரதியாரின் வரிகளில் பார்ப்போம்.

”ஓம் தேவிபராசக்தி ஆணையுரைத்தேன் பாவி துச்சாதனன் சென்னீர் - அந்தப் பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து - குழல் மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான் - இது செய்யு முன்னே முடியேன்”

இந்த சபதம் பாண்டவர்களுக்கு அசாதாரணமான சக்தியை, பலத்தைக் கொடுத்தது. மனிதனை மனம் என்னும் பரிமாணமே அரிய சாதனை படைக்க வைக்கிறது.

”அரிது, அரிது, மானிடராய் பிறப்பதரிது. அதிலும் கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது” என்னும் அவ்வையாரின் பாடல் ஒன்று உண்டு. அப்படியென்றால் உடல் குறை உள்ளவர்களால் சாதிக்க முடியாதா? குறை எங்கிருக்கிறது, உடலிலா (அ) மனதிலா? உடல் குறையை  மருத்துவம் மூலம் சரி செய்யலாம். ஆனால் மனக்குறையை என்ன செய்வது?
உடல்குறை உள்ளவர்களும் உன்னதமான சாதனைகளை  இன்றும் நிகழ்த்திக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

அவர்கள் யார் என்பதை அறிய  பொறுமையாகக் காத்திருங்களேன்! ஆனால் அதற்கு முன் சிறிய ஹோம் ஒர்க்! வாழ்வில் கடந்த ஐந்தாண்டுகளில் யாராவது உங்களை அவமானப்படும்படி பேசியதுண்டா? ஆம்... என்றால் அது மனதை எப்படி பாதித்தது? அந்த வார்த்தைகள் உங்களைப் பின்னுக்குத் தள்ளியதா? அல்லது அதை சவாலாக ஏற்று நல்ல செயல்திட்டத்தில் ஈடுபட்டீர்களா?

அனுபவத்தை காகிதத்தில் எழுதுங்கள். அடுத்து வரப் போகும் நான்கு வார்த்தைகள் உங்கள் வாழ்வையே மாற்றலாம். சற்று காத்திருங்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.