Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » திருநாகேஸ்வரம் கிரிகுஜாம்பாள்
 
பக்தி கதைகள்
திருநாகேஸ்வரம் கிரிகுஜாம்பாள்

கும்பகோணத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ளது ராகு பரிகாரத்தலமான திருநாகேஸ்வரம்.

இங்குள்ள நாகநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் கேட்ட வரம் தருபவளாக கிரிகுஜாம்பாள் அருள்புரிகிறாள். ’முற்பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இத்தலத்தை தரிசிக்க முடியும்’ என தேவார பாடல் கூறுகிறது. நாகர்களின் அரசனான நாகராஜன் வழிபட்டதால் சுவாமிக்கு ’நாகநாத சுவாமி’  என்பது பெயர்.

நம் வேண்டுதலை உடனுக்குடன் நிறைவேற்றும் கிரிகுஜாம்பாள் நின்ற நிலையில் சுதை வடிவமாக காட்சியளிக்கிறாள். சுதை வடிவம் என்பது மரக்குச்சிகளை அடுக்கி, அதன் மீது  மீது மூலிகை கலவை பூசி செய்யப்படும் சிற்பங்களாகும். சக்கர பீடத்தின் மீது காட்சி தரும் கிரிகுஜாம்பாள், இரு கைகளில் பாசம், அங்குசம் வைத்திருக்கிறார். மற்ற இரு கைகள் ஒன்று அபயம் அளிக்கும் நிலையிலும், மற்றொன்று தொடையின் மீதும்  உள்ளன. அம்மனின் வலதுபுறம் வீணை ஏந்திய சரஸ்வதியும், இடதுபுறம் தாமரை ஏந்திய  மகாலட்சுமியும் உள்ளனர்.

’கிரி’ என்றால் மலை. ’குஜம்’ என்பதை தாய்மைப் பேறு அளிக்கும் தனத்தைக் குறிக்கும். அதனால் தமிழில் ’குன்ற மாமுலையம்மன்’ என சொல்வர்.

கிரிகுஜாம்பாளின் புராண வரலாறை இனி பார்ப்போம்.
முனிவரான பிருங்கி என்பவர்,  சிவபெருமானைத் தவிர, வேறு யாரையும் வணங்க மாட்டார்.  ’நமசிவாய’  மந்திரம் ஜபித்தபடி வலம் வந்து சிவனை வழிபடுவார். தவறியும் கூட அருகில் இருக்கும் பார்வதியை கண்டு கொள்ள மாட்டார்.   

’இருவரும் தனித்தனியாக இருப்பதால் தானே சுவாமியை மட்டும் வலம் வருகிறாய்?”  என எண்ணி சிவனுடன் இணைந்து அர்த்தநாரீஸ்வரராக மாறினாள் பார்வதி.

வழக்கம் போல் சிவனைத் தரிசிக்க வந்த பிருங்கி என்ன செய்தார் தெரியுமா? வண்டு வடிவெடுத்து அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் சிவனை மட்டும் துளைத்துக் கொண்டு வலம் வந்தார்.

’உடம்பிற்கு சக்தி தரும் என்னையே அலட்சியப்படுத்துகிறாயா?’ என பார்வதி வெகுண்டு முனிவரின் சக்தியை அதாவது சதை, ரத்தத்தை எல்லாம் உலரச் செய்தாள். வெறும் எலும்புக்கூடாக ஆனார் பிருங்கி.

’தன்னால் தானே பிருங்கிக்கு சிரமம்’ எனக் கருதிய சிவன், தன்னுடைய நாக ஆபரணத்தை ஊன்றுகோலாகக் கொடுத்தார். அதன் உதவியுடன் பிருங்கி நடமாடினர்.

பக்தன்  சோதனைக்கு ஆளானால் எந்த தெய்வம் சும்மா இருக்கும்?

பிருங்கியின் மீதுள்ள பரிதாபம், பார்வதியின் மீது கோபமாக திரும்பியது. விளைவு பூலோகத்திற்கு போகும்படி சபித்தார் சிவன்.  இதை எதிர்பார்க்காத பார்வதி தயங்கினாள்.  
”கவலைப்படாதே தேவி! எல்லாம் நன்மையாக முடியும். பூமியில் திருநாகேஸ்வரம் தலத்தில் கன்னியாக இருந்து சில காலம் என்னைப் பிரிந்திரு. விரைவில் உன்னை மணம்புரிய வருவேன்’ என்றார் சிவன்.

”தனியாக பூலோகம் அனுப்புகிறீர்களே..நியாயமா?’ எனக் கேட்டாள் பார்வதி.  

”கவலைப்படாதே! லட்சுமி, சரஸ்வதியும் உன்னுடன் வருவர்” என்றார். அதன்படியே பார்வதியுடன் அவர்களும் வந்தனர்.  
அற்புதமான இக்கோலத்தை திருநாகேஸ்வரம் கிரிகுஜாம்பாள் சன்னதியில் நாம் தரிசிக்கலாம்.  

சன்னதியைச் சுற்றி பாலசாஸ்தா,  விநாயகர், பாலசுப்பிரமணியர், சங்கநிதி, பதுமநிதி ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் அம்மனின் தவத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் காவல் புரிகின்றனர்.

’ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அம்மனை தரிசித்தால் கிரக தோஷம் பறந்தோடும்.

கிரிகுஜாம்பாளுக்கு தை மாதத்தில் புனுகு சாத்தி வழிபடுவர். இந்திரனுக்கு ஏற்பட்ட சாபம் தீர  இத்தலத்தில் அம்மனுக்கு புனுகு சாத்தி வழிபட்டுள்ளார்.

ஆண்டில் 45 நாள் புனுகுச்சட்டத்தில் அம்மன் இருப்பாள். இந்த நாட்களில் அம்மனின் முகத்தை மட்டும் தரிசிக்க முடியும். 45 வது நாளில் திரை விலக்கப்படும் அன்று சண்டி மகாயாகம் நடக்கும்.  

உடல்நலம் தரும் துர்கா, செல்வம் தரும் லட்சுமி, கல்வி தரும் சரஸ்வதி ஆகிய மூவரையும் இணைத்து வழங்கப்படும் சொல் ’சண்டி’.  இந்த யாகத்தின் மூலம் மூன்று தேவியரின் அருளும் கிடைக்கும்.

யாகத்தின் முடிவில், கிரிகுஜாம்பாளுக்கு வாழை இலையில் தயிர் சாதத்தை நைவேத்யம் செய்வர்.

கார்த்திகை கடைசி ஞாயிறன்று நாகநாதசுவாமி, கிரிகுஜாம்பாளுக்குத் திருக்கல்யாணம் நடக்கும்.  கிரிகுஜாம்பாளை தரிசித்து எல்லா நலன்களும் பெறுவோம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.