Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மனமே விழித்தெழு
 
பக்தி கதைகள்
மனமே விழித்தெழு

ஏழைச்சிறுவன் ஒருவன் ஆறு வயதில் தந்தையை இழந்தான். தாய் வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலை.  சிறுவயதிலேயே மூன்று வயது தங்கைக்கும் சேர்த்து சமைக்கும் பொறுப்பு சிறுவனுக்கு. சூழல் காரணமாக சமைக்க கற்றுக் கொண்டான். தாயின் சம்பளம் குடும்பம் நடத்த போதவில்லை. ஏழாவது வயதில் தோட்டத்தில் சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்தான். பனிரெண்டு வயதில் தாயும் அவனை விட்டு பிரிந்தாள். 13ம் வயதில் பஸ் கண்டக்டர் வேலை கிடைத்தது. 16வயதில் ராணுவப் பணியில் சேர்ந்து, 40 வயதில் ஓய்வு பெற்றார்.  இனி என்ன செய்யலாம் என சிந்தித்த போது சமையலே கைகொடுத்தது.

மெஸ் ஒன்றை ஆரம்பித்தார். சுவையுடன் உணவு அளித்ததால், செல்வாக்கு பெற்றார். தினமும் 150 நபர்களுக்கு உணவளித்தார். இந்நிலையில் மெஸ் நடத்தும் இடத்தை, சாலை விரிவாக்கத்திற்காக அரசு கையகப்படுத்தியது. அப்போது அவரது வயது 60.  ஆனால் மனம் மட்டும் விழிப்பு நிலையில் இருந்தது. என்ன செய்வது என  யோசித்த போது, வாடிக்கையாளர்கள் விரும்பிச் சாப்பிட்ட சமையல் மிக்ஸ் (டுடிtஞிடஞுண ணூஞுஞிடிணீஞு) கையில் இருந்தது.  தன்னுடைய காரில் லட்சம் கிலோ மீட்டர் துாரம், ஊர் ஊராகச் சுற்றி பல ஓட்டல்களில் அதை விற்றார். ஓராண்டில் சிறிய நிறுவனம் ஒன்றை  ஆரம்பித்தார். 1960ல் தொடங்கிய அந்த நிறுவனத்தை பின்னாளில் பல கோடிகளுக்கு விற்று லாபம் சம்பாதித்தார்.  அந்த நிறுவனம் தான் ’கே எப் சி நிறுவனம்’ (ஓஊஇ)!  அவர் தான் கலோனல் சான்டர்ஸ் (இணிடூடூணிணஞுடூ குச்ணஞீஞுணூண்)!  பொதுவாக பிறர் நம்மை எள்ளி நகையாடும் போது, நம் மனநிலை பாதிக்கிறது. நாளடைவில் சுயமதிப்பை இழந்து ஒருவேளை மற்றவர் சொல்வது சரிதானோ என குழம்புகிறோம்.

இந்நிலையில் சிறுதோல்வியைச் சந்தித்தாலும், மற்றவர்கள் சொல்வது சரி தான் என்ற எண்ணம் வரும். நாம் பெற்ற வெற்றிகள் நினைவுக்கு வராது. தோல்வி தான் மீண்டும் மீண்டும் மனதில் தோன்றும். நம் தோல்விகள் தான்  பிறருக்கு தெரியுமே தவிர,  வெற்றிகள் தெரிய வாய்ப்பில்லை. அப்படியே தெரிந்தாலும் வெற்றியைப் புகழ்வதை விட, தோல்வியை சுட்டிக் காட்டுபவர்களே உலகில் அதிகம். இந்நிலையில் எந்த சவாலையும் வாழ்வில் நாம் ஏற்க மாட்டோம். தாழ்வு மனப்பான்மைதான்  எழும். இதிலிருந்து மீள நாம் முயற்சிக்க வேண்டும்.  வீஷியஸ் சர்க்கிள் (ஙடிஞிடிணிதண் ஞிடிணூஞிடூஞு) என்று  இதை குறிப்பிடுவர். இதற்கு என்ன செய்ய வேண்டும்?  நம்மைப் பற்றிய விமர்சனங்களை கேட்காமல் இருக்கவும் முடியாது. தடுக்கவும் முடியாது. ஆனால் அதற்கு வேறு அர்த்தம் கொடுக்க நம்மால் முடியும் அல்லவா? வாழ்வை  முன்னேற்றும் சாதனமாக விமர்சனங்களை எடுத்துக் கொண்டால்?  தடைக்கற்களையே  படிக்கற்களாக பயன்படுத்தலாம் அல்லவா!

வயதான கழுதை ஒன்று தடுமாறி பாழுங்கிணற்றில் விழுந்தது. அதைக் காப்பாற்றினால் என்ன லாபம் என்று யாரும் பொருட்படுத்தவில்லை. கழுதையோ கத்தியபடி நின்றது.  கருணை கொண்ட சிலர் உணவை உள்ளே வீசினர். மற்றவர்களோ தங்கள் வீட்டு குப்பைகளை வீசினர். அந்த கழுதை சப்தம் போடுவதை நிறுத்தி விட்டு கிடைத்ததை தின்றது. சிலநாட்களில் கழுதைக்கு என்னாவாயிற்று என சிறுவர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தனர்.  கழுதை வித்தியாசமாக செயல்பட்டதைக் கண்டனர். மக்கள் குப்பைகளை வீசும் போது,  கழுதை அதை உதறியபடி குப்பையின் மீதேறி நின்றது. இப்படியே செய்ததால்
சில நாட்களுக்கு பின் கழுதை அங்கிருந்து வெளியேறியது. இதிலிருந்து கற்க வேண்டிய விஷயம் இதுவே. பிறர் கேலி செய்தாலும், அதை ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொண்டு, வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்.

கிரிக்கெட் வீரர்கள் அபாரமான சாதனைகளைப் படைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அவர் பேட்டிங் செய்யும் போது தனக்கு சாதகமாக மட்டுமே பந்து வீசப்பட வேண்டும் என எதிர்பார்த்தால் எப்படி இருக்கும்? நினைக்கவே வேடிக்கையாக இல்லை? மற்றவர்கள் விமர்சிக்கும் போது வாழ்வில் சாதித்தவற்றை வரிசையாகப் பட்டியலிடுங்கள். சாதாரணமான விஷயமாக இருந்தால் கூட. அதை நினைத்து பெருமைப்படுங்கள்.  நண்பர்கள்,உறவினர் களோடும் அவற்றைப் பகிருங்கள். இதனால் தாழ்வு மனப்பான்மை நீங்கும். ஆனால் ஒருவரது ஒத்துழைப்பு இல்லாமல், உங்களால் வாழ்வில் ஒன்றும் செய்ய முடியாது. அவர் யார் என்று அறிய ஆவல் தோன்றுமே? அடுத்த வாரம் அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.